உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: திருமாவளவன்

தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்: திருமாவளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம். நான் இடையூறாக இருக்க மாட்டேன்'' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: பா.ம.க., உடன் உறவை முறித்து கொண்டது, நாங்கள் ஆழமாக சிந்தித்து எடுத்த முடிவு. நாங்கள் வன்னியர் சமூகத்திற்கு எதிரானவர்கள் அல்ல. பா.ம.க., வன்னியர்களையும், தங்களுக்கு சாதகமாக, கட்சியின் நலனுக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள். தலித்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை அவர்கள் கையில் எடுத்தார்கள்.

ஒரு தாய் மக்கள் மாநாடு

முதலில் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது, தலித் மக்கள் பாதிக்கப்பட்டார்கள், குடிசைகளை கொளுத்தினார்கள். எத்தனையோ பிரச்னைகள் நடந்தது. அது எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. நாம் எல்லாம் ஒற்றுமையாக இருப்போம் என ஒரு தாய் மக்கள் மாநாடு நடத்தினார். ஒரு தாய் மக்கள் மாநாடு நடத்திய, தலித் அல்லாத முதல் தலைவர் ராமதாஸ். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, தலித் சமூகத்தை சேர்ந்தவர்களை பொதுச்செயலாளர் ஆக்கினார்.அம்பேத்கருக்கு சிலைகளை நிறுவினார். தலித் சமூகத்தை சேர்ந்தவர் தான் பா.ம.க.,வின் நிரந்தர பொதுச்செயலாளர் ஆக இருப்பார். முதல் முறையாக, இரண்டு தலித் சமூகத்தை சேர்ந்தவரை அமைச்சர் ஆக்கினார். இது எல்லாம் அந்த காலத்தில் சரி. இரண்டு சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்குவதற்காக அளப்பறிய முயற்சி. வரலாற்றில் என்றைக்கும் பொன் எழுத்துகளால் பொறிக்க வேண்டிய ஒன்று.

சமூக நல்லிணக்கம்

அதற்கு முன்னாள் நடந்த வன்முறையை விடுங்கள். அந்த வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய வேண்டிய ஒரு செயல்திட்டமாக இது எல்லாம் இருந்தது. அதன் பிறகு அதனை தொடர்ந்து செய்ய வேண்டுமா, இல்லையா? சமூக நல்லிணக்கத்தை பேண வேண்டுமா, இல்லையா? நான் எப்படி உங்களுக்கு எதிரியாக இருக்க முடியும்? நான் எந்த இடத்தில் உங்களுக்கு எதிராக பேசி இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

வெளியேறுவோம்!

தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றால், திருமாவளவன் என்ன நினைத்து கொள்வார் என ராமதாசுக்கு சங்கடம் இருப்பதாக பேசப்படுகிறது என கேள்வி எழுப்பட்டது. இதற்கு திருமாவளவன் அளித்த பதில்: நான் யாருக்கும் இடையூறாக இருக்க மாட்டேன். நான் யாருக்கும் நெருக்கடி தர மாட்டேன். நிர்பந்தம் தரமாட்டேன். அது அவர்கள் எடுக்கிற முடிவுகள்.

தனியாக நிற்போம்

தி.மு.க.,வுக்கும், பா.ம.க.,வுக்கும் இடையே அப்படி ஒரு நல்லிணக்கம் இருந்து, அப்படி ஒரு முடிவு எடுத்தால் நான் தலையிட மாட்டேன். நாங்கள் வெளியேறுவோம். நாங்கள் தனியாக நிற்போம். சும்மா வேட்பாளர்களை போடுவோம். பார்மாலிட்டி தேர்தலை சந்திப்போம்.

கொள்கை

ஜெயிப்பது, தோற்பது பற்றி எங்களுக்கு பிரச்னையே கிடையாது. நாங்கள் எங்களது கொள்கை ஏதுவோ அதுக்காக தான் களத்தில் நிற்கிறோம். இந்த தேர்தலில் நான்கு பேர் இருக்கிறோம். அடுத்த தேர்தலில் ஒன்றுமே இல்லை என்றாலும் நாங்கள் கவலைப்பட போவதில்லை. இவ்வாறு திருமாவளவன் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Rajasekar Jayaraman
ஜூன் 18, 2025 19:51

பேராசை பெருநஷ்டம்.


பேசும் தமிழன்
ஜூன் 18, 2025 18:52

அப்போ பிஜெபி உள்ளே புகுந்து விடுமே..... பரவாயில்லையா.... என்னப்பா கலர் கலரா ரீல் விடுறீங்க ???


theruvasagan
ஜூன் 18, 2025 16:00

எங்கெங்கேயோ கர்சீப் போட்டு வச்சதில் ஒண்ணு கிளிக் ஆயிட்ட மாதிரி தெரியுது. அதை வைச்சு வெளிய கிளம்புற நிலைமை வந்தால் இந்த சாக்கு தோதா இருக்கும்போல. மத்தபடி கொள்கையும் இல்லை ஒரு புண்ணாககும் இல்லை


Mani . V
ஜூன் 18, 2025 15:46

காசுக்காக கூட்டணி தாவும் கேடுகெட்ட தறுதலை இந்த நவீன கோமாளி. கோட் போட்டுவிட்டால் இதெல்லாம் அம்பேத்கார் ஆகிவிட முடியுமா? ?


anonymous
ஜூன் 18, 2025 15:10

காசு பணம் துட்டு Money Money காசு பணம் துட்டு Money Money காசு பணம் துட்டு Money Money காசு பணம் துட்டு Money Money


sundarsvpr
ஜூன் 18, 2025 14:10

தற்போது அவல மற்றும் மோசமான நிலையில் இருப்பவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களும் தற்போதைய பிராமண சமூகம். இரண்டு சமூகமும் இணைந்து அரசியலில் போராடினால் குடும்ப பின்னணி ஆதிக்கம் கொண்ட தலைகள் உருளும். தலித் மக்கள் சிந்திக்கவேண்டும். உங்கள் கூட்டம் மனசை ஒருமைப்படுத்தி சிந்தித்தால் தற்போது உள்ள அரசியில் கட்சிகள் குப்பைதொட்டியில் ஒளிந்துகொள்ளும்


Meganathan Selvamani
ஜூன் 18, 2025 19:04

நீங்கள் இருவரும் சம்பந்தி ஆகிவிட்டீர்கள் என்றால் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு முடிவு கிடைத்து விடும்.


J. Vensuslaus
ஜூன் 18, 2025 14:09

பாமக திமுகவுடன் இணையாது.


sankar
ஜூன் 18, 2025 14:05

ஜோக்கர் எல்லாம் அரசியல்வாதி


Anantharaman Srinivasan
ஜூன் 18, 2025 13:25

Already விஜய் கட்சி பக்கம் துண்டு போட்டாச்சு. அப்புறம் எதுக்கு இந்த சால்ஜப்பு. பாமக இரண்டு பிரிவாகும். ராம்தாஸ் குரூப் with DMK. அன்புமணி with BJP.


Seran sekar
ஜூன் 18, 2025 13:01

உங்களுக்கு இப்படி பேச தைரியம் எங்கிருந்து வந்தது?


முக்கிய வீடியோ