வளம் மிக்க தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்: முதல்வர் விஜய்
சென்னை: அரசியலைமைப்பு சட்ட தின வாழ்த்துக்களை முதல்வர் விஜய் தெரிவித்தார். அவரது பதிவு: இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் இந்திய அரசியலமைப்பு நாளான இந்நாளில், இச்சட்டத்தை உருவாக்கியதில் அரும்பங்காற்றிய தலைவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம் மிக்க தமிழகத்தையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம். ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டும். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.