உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இசைவாணி விவகாரத்தை சும்மா விடமாட்டோம்: பா.ஜ., அறிவிப்பு

இசைவாணி விவகாரத்தை சும்மா விடமாட்டோம்: பா.ஜ., அறிவிப்பு

மதுரை : ''சுவாமி ஐயப்பன் குறித்து அவதுாறு பாடலை பாடி வெளியிட்ட கானா பாடகி இசைவாணி மீது தமிழகம் முழுவதும் பா.ஜ., புகார் கொடுக்கும்' என வக்கீல் பிரிவு மாநில தலைவர் வணங்காமுடி தெரிவித்தார். நேற்றுமுன்தினம் இசைவாணி மீது பா.ஜ., சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் வக்கீல் முத்துக்குமார் தலைமையில், அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆகியோர் மதுரை அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தனர். அதில், 'இசைவாணி என்பவர் சபரிமலை ஐயப்பனை கேவலப்படுத்தும் விதமாக ஒரு வீடியோ பாடல் வெளியிட்டு இருக்கிறார். 'ஐம் சாரி ஐயப்பா' என்று தொடங்கும் அந்த பாடலில் பக்தர்களை சுவாமி ஐயப்பன் அச்சுறுத்துவது போல், ஒரு கற்பனை கதையை உருவாக்கி வரிகள் அமைந்துள்ளார். பக்தர்களின் மத உணர்வுகளுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட எண்ணத்துடன் இசைவாணி செயல்பட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ., வக்கீல் பிரிவு மாநிலத் தலைவர் வணங்காமுடி கூறுகையில், ''இசைவாணி மீது பா.ஜ., சார்பில் தமிழகம் முழுவதும் புகார் அளித்து வருகிறோம். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதித்துறையை நாடுவோம்.''ஹிந்து மதக் கடவுள்கலை திட்டமிட்டு அசிங்கப்படுத்தி வருகின்றனர். இதை ஒரு சதியாகத்தான் பார்க்கிறோம். இவ்விவகாரத்தை பா.ஜ., சும்மா விடாது,'' என்றார்.

பக்தர்களுக்கு மன வேதனை

சபரிமலை ஐயப்பனை இழிவுபடுத்தி பாடிய கானாபாடகி இசைவாணி, நீலம் பண்பாட்டு மைய ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பாரதிய பார்வர்டு பிளாக் கட்சியினர், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உசிலம்பட்டி டி.எஸ்.பி., செந்தில்குமாரிடம் புகார் கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக நாத்திக சக்திகளும், பிரிவினைவாதிகளும், இரண்டு மதங்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றன. நீலம் பண்பாட்டு மைய அமைப்பின் பா. ரஞ்சித், கானா பாடகி இசைவாணி ஆகியோர், ஐயப்ப சுவாமியை கொச்சைப்படுத்தும் வகையில் பாடல்கள் பாடி, அதை வெளியிட்டுள்ளனர்.ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் கார்த்திகை மாதத்தில், இதுபோன்ற பாடலை வெளியிட்டு ஐயப்ப பக்தர்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளனர். இந்தப் பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், எங்கள் கட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

thonipuramVijay
டிச 04, 2024 04:32

தூக்கில் போடுங்கள் இந்த மூதேவியை


Nachiar
நவ 28, 2024 18:33

மானம் மரியாதை இருந்தால் நம் சரஸ்வதி அம்மனுக்கான இந்து பெயரை வைத்திருப்பதை மாற்றிக் கொள்ளலாமே. இந்துக்களுக்கும் நல்லது உனக்கும் உன்னை மாதிரி இருப்போருக்கும் நல்லது. ஐ அம் சாரி டி பெயரை மாத்து டி


kantharvan
நவ 29, 2024 14:55

பெண் உரிமைக்கு பெண்களே எதிரி என்பதும் இதுதானோ?? பொன்னபுரத்திலே மேல் துணி உடுத்துவது இறைவன் கட்டளையை மீறுவதாகும் என சில பெண்களே அக்காலத்தில் மேல் துணி உரிமை போராட்டத்திற்கு எதிராக இருந்தார்களாம்.


Nachiar
நவ 28, 2024 18:27

சட்டப் போராட்டம் ஒரு முனை தான். உடனடியான உயிர் நாடியில் கை வைக்கும் ஆயுதம் அனைத்து பாதிக்கப்பட்டவர்களது கையில் தான் உள்ளது . சம்பந்தப்பட்டவர் அனைவரது இசை படங்கள் அனைத்தையும் தவிர்ப்பது என்று ஒரு சத்திய பிரமாணம் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தவர்க்கும் நண்பர்களுக்கும் விளக்கி சொல்லுங்கள். உங்கள் கண் முன்னே உடனடி நிவாரணம் கிடைக்கும். செய்துதான் பாருங்களேன். நல்லவர்கள் சினிமாவுக்குள் வரவும் இது வழி பண்ணும். ஜெய் பாரத் ஜெய் சிவராம் .


MADHAVAN
நவ 28, 2024 12:21

பிஜேபி காரனுங்க இப்படித்தான் பிராடுவேளை பண்ணுவானுங்க,


VN KANNAN
நவ 30, 2024 07:15

கஸ்தூரி சொல்லி உடனே மன்னிப்பு கேட்ட பின்பும் எல்லா ஊர்களிலும் புகார்கள் கொடுக்க சொல்லி ஏதோ ஒரு தீவிரவாதியை பிடிப்பது போல் தனிப்படை அமைத்து அவரை கைது செய்தது தானே ஃப்ராடு வேலை? தீமூக சாக்கடை வாகனங்கள் எது செய்தாலும் என்ன பேசினாலும் தவறு இல்லை.அதுதான் ஃ ப்ராடு திவிடியா மாடலா?


SUBBIAH RAMASAMY
நவ 28, 2024 10:36

இப்பவும் தேவையே இல்லாமல் அனாவசியமாக இந்த தருதலைக்கு துட்டு செலவில்லாமல் விளம்பரம் கொடுக்கிறார்கள்..அந்த பாடலில் முதல் வரியை தவிர அய்யப்பன் மீது எந்த ரெபெரென்ஸ் ம் இல்ல ?


Jagan (Proud Sangi)
நவ 28, 2024 04:10

இவ்ளோ நாள் அனாவசிய விளம்பரம் குடுக்க வேண்டாம் என்று விட்டாச்சு. ஆனா இந்த திருட்டு மாடல் அரசு பிடிக்காதவர்கள் மேல எல்லாம் கேசு போட்டு தள்ளுது. கஸ்தூரி சமீபத்திய உதாரணம். இது போன்ற நாலு ...கள் மேல வழக்கு போட்டு படுத்தினால், மைனாரிட்டி அடிவருடி அரசு நிறுத்தும்


Ramesh Sargam
நவ 27, 2024 22:03

சும்மா விடக்கூடாது. இப்படியே விட்டால், நாளை வேறு ஒரு ஹிந்து தெய்வத்தின் மீது ஒரு அவதூறு பாட்டு பாடுவாள். அவளுக்கு உண்மையில் தைரியமிருந்தால் இஸ்லாமிய அல்லது கிறிஸ்துவ மத தெய்வத்தின் மீது ஒரு அவதூறு பாடல் பாடட்டும். அப்படி பாடினால், அடுத்த நாளே அவள் பா 'டை' யில் ஏற்றப்படுவாள்.


ராமகிருஷ்ணன்
நவ 27, 2024 13:12

விளம்பரம் தருகிறது சரியல்ல


govinda rajalu
நவ 27, 2024 12:45

அர்ரெஸ்ட் செய்ய வேண்டும் ?


Apposthalan samlin
நவ 27, 2024 12:34

இந்த பாடல் 2017 இல் பாடப்பட்டது இப்பொழுது வந்து ஏன் கூக்குரல் அரசியலுக்கு ஆக ஒன்னும் ஆக போவது கிடையாது ரெண்டு நாளில் மறந்து விடுவார்கள் .


Ravichandran,Thirumayam
நவ 27, 2024 16:39

எங்கம்மா கூட சொல்லுவாங்க நான் தூக்கத்துல எந்திருச்சி பிசாசுகளை ஓட்டுவேனாம் புரியாத பாஷையில பேசுவேனாம் அவரு மாதிரியே ஆசிர்வாதம் பண்ணுவேனாம் இந்தா இப்ப கூட பாருங்க இதை சொல்லும் போது எனக்கு அப்படியே புல்லரிக்குது, .....யா


புதிய வீடியோ