உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்; நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்; நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: தமிழகத்தில் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஏற்கனவே அரசு ஊழியர்கள் எல்லாம் அரசிற்கு எதிராக தான் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது அதை திசை திருப்பி மடை மாற்றி, திமுக அரசு அவர்களை மிரட்டி பணிய வைத்து இருக்கிறது. நிரந்தர பணி கோரி துப்புரவு பணியாளர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை அடித்து துரத்தி வீடு வரை சென்று மிரட்டினார்கள். இன்று அவர்களை காலையில் அழைத்து சோறு போட்டு கொண்டு இருக்கிறார்கள்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0whwkhjn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. முதல்வர் ஸ்டாலின் காவல்துறையை சரியான வகையில் இயக்கவில்லை. நான் ஏற்கனவே நிறைய பேட்டி கொடுத்து இருக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார். தமிழகத்தில் நாங்கள் 200 தொகுதிக்கு மேல் நிச்சயமாக வெற்றி பெறுவோம். குளத்தூர் தொகுதியில் 9 ஆயிரம் ஓட்டுக்களை அதிகமாக சேர்த்து வைத்திருக்கிறார்கள்.ஏற்கனவே மக்கள் தயாராகி விட்டார்கள். இன்றைக்கு எங்கு பார்த்தாலும் கஞ்சா, பாலியல் வன்கொடுமைகள் நடக்கின்றன. இது ஒன்றுமே செய்யாத அரசு, விடியாத அரசுக்கு நாங்கள் முடிவு கட்டுவோம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

தட்டு தடுமாறும் பிரசாந்த் கிஷோர்!

முன்னதாக திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:எங்களது கூட்டணி குறித்து 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு பின்பு அறிவிப்போம். பீஹாரில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் 2% ஓட்டுக்களை மட்டுமே பெற்றுள்ளார்.பிரசாந்த் கிஷோரே தட்டு தடுமாறிட்டு இருக்காரு. அவர் ஆலோசனை வழங்கி என்ன நடக்கபோகுதோ? இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

xyzabc
நவ 19, 2025 03:43

தமிழக மக்கள் இலவசங்களில் வூறியவர்கள். பீஹாரை நினைத்து குழப்பம் வேண்டாம். வூழல்கள் மன்னிக்கப்படும்.


Nathansamwi
நவ 18, 2025 21:56

முதல்ல பாஜக ஒரு சீட் இந்த தடவை ஜெய்கிதானு பாப்போம்...


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 18, 2025 21:50

200 ங்குற நம்பர் மேல எதோ மை இருக்கும்போல இருக்கு. ஸ்டாலினும் 200 க்கும் மேல ஜெயிப்போம்ன்னு சொல்லி இருக்காரு. எடப்படியாரும் 200 க்கும் மேல ஜெயிப்போம்ம்னு சொல்லி இருக்காரு. இப்போ நம்ம நைனாரும் அதையே சொல்றாருங்கோ.


Vasan
நவ 18, 2025 21:31

தமிழ் நாட்டில் இருப்பதே மொத்தம் 234 தொகுதிகள் தான், 2340 அல்ல, நீங்கள் 200இல் வெற்றி பெறுவதற்கு.


M Ramachandran
நவ 18, 2025 20:13

அறிவாரத்த நடை முறையாக பேச வேண்டும். வாய்க்கு வந்த படி காமடியாக எல்லாம் பேசக்கூடாது


தாமரை மலர்கிறது
நவ 18, 2025 19:54

இந்த தேர்தலில் ரெண்டு கோடி வடஇந்தியர்கள் ஓட்டுரிமை பெறுவதால், பிஜேபி மட்டுமே நூறு தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்புள்ளது. இருநூறு தொகுதிகளுக்கு மேல் பிஜேபி தலைமையிலான கூட்டணி மிக எளிதாக பெறும் .


மோகன சுந்தரம்
நவ 18, 2025 19:46

படித்த பண்பான அண்ணாமலையை தவிர்த்து விட்டு உங்களால் ஒரு வெற்றி பெற முடியாது.


Oviya Vijay
நவ 18, 2025 19:39

பாஜக என்றைக்கும் ஆட்சியமைக்க கனவு காணவே முடியாது...


vivek
நவ 18, 2025 21:17

நடக்கும் ஓவியரே.....இதயம் இருந்தா அது பாத்திரம்


V K
நவ 18, 2025 19:19

வாய்ப்பு இல்லை ராசா


Easwar Kamal
நவ 18, 2025 19:10

எடப்பாடியிடம் சொல்ல வேண்டும். பிஜேபி தயவு இல்லாமல் 25 சீட் கூட kidayaikadhu. அதனால் 50:50 பிஹரை போல ஜெயிக்க வைத்து காட்டுவோம். இதற்கு உடன் படிந்தால் நீங்கள் CM முடியாது என்றால் இப்போது நிலைமையில் எதிர் கட்சி கூட அகா முடியாது. இதை புரிய வையுங்கள்.


முக்கிய வீடியோ