உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தமிழகத்தில் 32 எம்.பி.,க்களை நாங்கள் பெற்றிருப்போம்

 தமிழகத்தில் 32 எம்.பி.,க்களை நாங்கள் பெற்றிருப்போம்

முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை. டி.ஜி.பி.,யை கூட நியமிக்க முடியாத தி.மு.க., அரசால், சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாக்க முடியும்? தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்க, 40 கோடி ரூபாய் வரை, ஒவ்வொரு தொகுதிகளிலும் தி.மு.க.,வினர் பதுக்கி வைத்துள்ளனர். எ ஸ்.ஐ.ஆர்., பணியால், முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் மட்டும், ஒரு லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் தான், எஸ்.ஐ.ஆரை, தி.மு.க., எதிர்க்கிறது. தமிழகத்தில், 17 தி.மு.க., அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் உள்ளன. அவர்கள் சிறைக்கு செல்வது உறுதி. கடந்த 2024 லோக்சபா தேர்தலின்போது, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்திருந்தால், தமிழகத்தில் இருந்து, எங்கள் கூட்டணிக்கு 32 எம்.பி.,க்களை பெற்றிருப்போம். ----நயினார் நாகேந்திரன்தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ