உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செல்வப்பெருந்தகை செய்த பகீர் ஊழல்: சி.பி.ஐ.,யில் சவுக்கு சங்கர் புகார்

செல்வப்பெருந்தகை செய்த பகீர் ஊழல்: சி.பி.ஐ.,யில் சவுக்கு சங்கர் புகார்

சென்னை: தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக்கும் தமிழக அரசின் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, சி.பி.ஐ.,யிடம் யுடியூபர் சவுக்கு சங்கர் புகார் அளித்து உள்ளார்.சென்னை, கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெருவில் வாடகைக்கு குடியிருக்கும், 'யூடியூபர்' சவுக்கு சங்கர் வீட்டை, கடந்த மார்ச் 24ல் ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் மலத்தைக் கரைத்து தெளித்து அசிங்கப்படுத்தினர். அப்போது வீட்டில், சங்கரின், 68 வயதான தாய் கமலா இருந்தார். அவரையும் அச்சுறுத்தினர். இச்சம்பவம் குறித்து, கீழ்ப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில், அவர் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடந்து வருகிறது.இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி சவுக்கு சங்கர் கூறியதாவது: தமிழக அரசு, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் வாயிலாக, துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. துாய்மை பணியாளர்களுக்கு, 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், 213 துாய்மை பணியாளர்களுக்கு கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இத்திட்டம் உண்மையான பயனாளிகளுக்கு சென்று சேரவில்லை.தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகையும் மற்றொரு நபரும், ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, துாய்மை பணியாளர்களை கணக்கு காட்டி, கழிவுநீர் அகற்றும் ஊர்திகளை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மாதம், 20 - 50 ஆயிரம் ரூபாய் வரை, துாய்மை பணியாளர்களுக்கு கொடுத்துவிட்டு, கோடிக்கணக்கில் சட்ட விரோதமாக சம்பாதிக்கின்றனர் என்பதை ஆதாரத்துடன், 'வீடியோ' வெளியிட்டு இருந்தேன் எனக்கூறியிருந்தார்.ஆனால், இதை மறுத்த செல்வப்பெருந்தகை, மாநகராட்சி ஒப்பந்தத்தை நான் எடுத்திருப்பதாக கூறுகின்றனர். நான் எப்படி எடுக்க முடியும். இந்த குற்றச்சாட்டுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்படி இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் எனக்கூறியிருந்தார். தாக்குதல் சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்த போலீசார், பிறகு அவர்களை ஜாமினில் விடுவித்தனர்.இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ.,யிடம் சவுக்கு சங்கர் புகார் மனு அளித்து உள்ளார். இந்த மனுவில் செல்வப்பெருந்தகை, தலித் இந்தியன் சாம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் தொழில்துறை தலைவர் ரவிகுமார் நாரா உள்ளிட்டோர் மீது புகார் தெரிவித்து உள்ளார். சென்னையில் உள்ள சி.பி.ஐ.,யின் தென்மண்டல கூடுதல் இயக்குநரிடம் இந்த மனு அளிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

sangarapandi
மார் 29, 2025 14:45

நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு , நீதி துறையின் காலதாமதம் ஆகும் தீர்ப்புக்களே காரணமாகும் என்று பலரும் கருதுகின்றனர் . ஆகவே நீதி மன்ற விசாரனையை A.I. தொழில் நுட்பதில் விரைந்து வழக்குகளை விசாரித்து குறைந்த காலத்தில் தண்டனை வழங்க மத்திய அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் .


நிக்கோல்தாம்சன்
மார் 27, 2025 21:12

காமராஜர் வாழ்ந்த காங்கிரஸ் எங்கே , பெருந்தகை எங்கே ?


ravi subramanian
மார் 27, 2025 21:45

That is why perunthagai told present government is ruling like Kamarajar.


Bhakt
மார் 27, 2025 20:51

நாறி போன ஆட்சி. இது போன்ற சம்பவங்களே சாட்சி.


N Annamalai
மார் 27, 2025 20:49

காங்கிரஸ் கட்சிக்கு வந்த சோதனை .ஹே ராம் .நல்ல வேலை மகாத்மா உயிருடன் இல்லை .


ஆரூர் ரங்
மார் 27, 2025 20:05

மாநில அரசின் அனுமதியின்றி இங்கு சிபிஐ விசாரணை செய்ய முடியாது. தமிழக அரசு சிபிஐ யின் எல்லாவிதமான விசாரணைகளுக்கும் அனுமதி மறுத்துவிட்டது. புகாரால் எவ்வித பலனுமில்லை.


Sivagiri
மார் 27, 2025 19:16

செல்வத்துக்கும் ஆப்பு - - காங்கிரசுக்கும் ஆப்பு - - வச்சது யாரு ? . . . எல்லாம் அந்த திராவிட மாடல் கம்பெனிதான் . . .? . . எதிரிகளும் சில நேரம் உதவுவார்கள் - அரசியல் . . . so, எதிரிகளும் தேவைதான் . . .


Naga Subramanian
மார் 27, 2025 18:58

இரண்டு நாட்கள் முன்பு பார்த்தது வேங்கைவயல் பாகம்-2.ஆகையால் அனைவரும் சூதானமாக இருக்கவும். தனது வீடு பொது கழிப்பறையாக மாறிவிடும் என்பதை கவனத்தில் கொள்க.பாகம் 3 மற்றும் 4க்கு இரையாகாதீர்கள்.


Ramesh Sargam
மார் 27, 2025 18:44

அப்படி இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என செல்வப்பெருந்தொகை கூறுகிறார். செல்வத்துக்கு தெரியும் இந்திய நீதிமன்றங்களில் ஒரு வழக்கு தொடரப்பட்டால், அது விசாரணை முடிந்து நீதி கிடைப்பதற்கும் தன்னுடைய வாழ்நாள் முடிவடைந்துவிடும். தனக்கு தண்டனை என்பது கிடைக்காது என்று. அந்த தைரியத்தில்தான் இன்று பல குற்றவாளிகள் தைரியமாக குற்றங்களை சிறிதும் அச்சமில்லாமல் செய்கின்றனர். நீதித்துறையின் செயல்பாடுகள் மாறவேண்டும். வழக்குகள் துரிதகதியில் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு அவர்கள் வாழ்நாளிலேயே தண்டனை கிடைக்க நீதிமன்றம் வழிவகுக்கவேண்டும்.


Nandakumar Naidu.
மார் 27, 2025 18:31

சவுக்கு ஷங்கர் செய்தது சரியேதான். கேடு கெட்ட ஆட்சி அவர் வீட்டில் பொறுக்கிகள் செய்தததை இன்னும் கண்டிக்கவில்லை. இதை விட கேவலமான ஆட்சி இருக்க முடியுமா?


Dharmavaan
மார் 27, 2025 17:46

செல்வ பெருந்தகை பார்வையே திருட்டு பார்வை பத்து கட்சி மாறிய பச்சோந்தி . அண்ணாமலை சொன்னது முற்றிலும் உண்மை ஆனால் ஏனோ நடவடிக்கை இல்லை


M R Radha
மார் 27, 2025 18:19

செல்வ பெருந்தொகை சங்கர் வீட்டில் ஊற்றியதைப் போலவே.சங்கரும் ஓர் பச்சோந்திதான்.