காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்றது: 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(அக்.,22) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஓரிரு இடங்களில், மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூரில் 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.ஒடிசா அருகே
தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை 5:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 5:30 மணியளவில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதியில் ஒடிசாவின் பாரதீப்பிற்கு தென்கிழக்கே 700 கி.மீ., தொலைவில் நிலை கொண்டு உள்ளது.புயலாக
இது மேலும் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 23ம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து 24ம் தேதி காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக நிலவக்கூடும். இது வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில் , புரி - சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக 24ம் தேதி இரவு 25ம் தேதி காலை இடையே கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கி.மீ., வேகத்திலும் இடையிடையே 120 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.கனமழை
இதன் காரணமாக நீலகிரி, கோவை,ஈரோடு திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34- 35 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26- 27 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்கள்
மீனவர்கள் மத்திய கிழக்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு இன்றும்வடமேற்கு வங்கக்கடல், வடகிழக்கு வங்கக்கடல், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு நாளையும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.