உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது போலீஸ்: கோவை பாலியல் வழக்கில் இபிஎஸ் கேள்வி

4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது போலீஸ்: கோவை பாலியல் வழக்கில் இபிஎஸ் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இரவு 11:35 மணி முதல், அதிகாலை 4 மணி வரை, 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்துகொண்டு இருந்தது போலீஸ்? என்று கோவை பாலியல் வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை: கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றி விளக்கம் அளித்த கோவை போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், ஞாயிற்றுக் கிழமை இரவு 11:20 மணிக்கு போலீசாருக்கு மாணவியின் நண்பர் தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும், 11:35 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தான் மாணவியைக் கண்டதாகவும், அதுவும் அம்மாணவி தானாக வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lsoc9o33&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இரவு 11:35 மணி முதல், அதிகாலை 4 மணி வரை, 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்துகொண்டு இருந்தது போலீஸ்? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி. குற்றவாளிகளை பிடித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், தனது போலீசாரால் சம்பவ இடத்தில் நின்றுக்கொண்டே நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். 100 போலீசார் இணைந்து பெரிய தேடுதல் வேட்டை நடத்தியதாக காவல் கமிஷனர் சொல்கிறார். நான்கரை மணி நேரம், 100 போலீசாரால் சம்பவ இடத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு மாணவி எப்படி சென்றார்? என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, 'சிறிய சுவர் ஒன்று இருந்தது. அதை தாண்டிச் சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை' என்ற போலீஸ் கமிஷனர், சில நிமிடங்களில், 'மிகப்பெரிய சுவர் இருந்தது; அதை தாண்டிச் சென்று அந்த மாணவி இருந்தார் ' என தனது கருத்தை மாற்றினார். அங்கு இருந்தது சிறிய சுவரா? பெரிய சுவரா? ஏன் அதைத் தாண்டி காவல்துறை, அதுவும் 100 பேர் கொண்ட படை, சென்று தேடவில்லை? 'இருள் சூழ்ந்த தனிமையான இடம் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை' என்ற விளக்கத்தை அளிக்கவே திமுக அரசின் போலீசார் கூச்சப்பட வேண்டும்.நள்ளிரவில் ஒரு பெண்ணை சம்பவ இடத்தில் தேடிக் கண்டுபிடிக்க திமுக அரசின் போலீசாருக்கு துப்பில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறதா திமுக அரசு?இந்த சூழலில், 'ஆக... குற்றவாளிகள் கைது, குற்றப் பத்திரிகை ஒரு மாதத்தில் தாக்கல் செய்து விடுவோம்' என்று பெருமை பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்கு முன்னால், உங்கள் போலீசார் 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக் கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால், In case you've forgotten, போலீசார் உங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது (ஏட்டளவில்). இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ராஜா
நவ 05, 2025 21:06

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 12 தொழிலாளர்கள் சுட்டது வீரதீர செயல் அல்ல பழனி சாமி பத்திரிக்கை செய்தி மூலம் தெரிந்து கொண்டேன் என்று வெட்கம் இல்லாமல் பதிவு போட்டு இருந்தார்


ஆசாமி
நவ 05, 2025 19:03

பொள்ளாச்சி விவகாரத்தில் இவரின் நடவடிக்கை உலகத்துக்கே தெரியுமே


என்றும் இந்தியன்
நவ 05, 2025 17:04

4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது போலீஸ்: கோவை பாலியல் வழக்கில் இபிஎஸ் கேள்வி. பதில் : திமுக கழகத்திலிருந்து உத்தரவு வரும்வரை துறை காத்திருந்தது


மனிதன்
நவ 05, 2025 16:37

ஆமா, இவரு மட்டும் இருந்து இருந்தா அப்படியே அறுத்து தள்ளியிருப்பாரு... கேவலமா இல்லையா? இதெல்லாம் ஒரு பொழப்பு... அதிமுகவுக்கு சங்கு ஊதி ரொம்ப நாளாச்சு...


Padmanaban Arumugam
நவ 05, 2025 16:35

பதில் வேற லெவல்.. Police has done excellent job. அவர்கள் வெறியர்களை உடனடியாக கண்டிடுபிடித்துஇருக்கிறார்கள் அவர்களை வாழ்த்தாமல் இருந்தால்கூட வசை பாடாமல் இருந்தால் நல்லது. நமது போலீஸ் பேசுந்த்தூள் போர்த்திய கவர்களை எப்படி கண்டு பிடிப்பது என்று கொஞ்சம் ட்ரைனிங் எடுக்க வேண்டும்.


தமிழ் மைந்தன்
நவ 05, 2025 15:21

அந்த தம்பியை காப்பாற்ற பழைய குற்றவாளிகள் பட்டியலை எடுத்து அந்த 3 பேருக்கும் பணம் கொடுத்து அவர்களை தயார்படுத்த நேரம் வேண்டும்.


திகழ்ஓவியன்
நவ 05, 2025 13:24

காரில் கூட்டிக் கொண்ட சென்ற ஆண் நண்பர் மீதுதான் தவறு , இதற்கு காரணம். . .


தமிழ் மைந்தன்
நவ 05, 2025 15:22

உங்க தலைவன் அன்று செய்ததை உங்கள் தொண்டன் இன்று செய்கிறான் மக்கள் முட்டாளாக உள்ளவரை உங்க வன்டி ஓடும்


PALANISWAMY
நவ 05, 2025 13:16

இவரெல்லாம் தலைவர் என நினைத்து ஒரு கூட்டமும் இருக்கிறது.


Vasan
நவ 05, 2025 13:14

2026ல் எடப்பாடி கட்சி எத்தனை தொகுதிகளில் டெபாசிட் தொகை திரும்பப்பெறும் என்று நினைக்கிறீர்கள்?


mohana sundaram
நவ 05, 2025 16:19

50 தொகுதிகளில்.


Senthoora
நவ 05, 2025 12:42

பெரிய கண்டுபிடிப்பு, இவரெல்லாம் இதை கேட்க தகுதி இல்லை, பொள்ளாச்சி நடந்தபோது இப்படியா நடந்திங்க, தவேக உடன் சேர்ந்து கூட்டணி வேலையை பாருங்க, இல்லையேல் இப்போ தவேக திமுக உடன் டீல் நடக்குது. உங்க கட்சி அம்போ,


தமிழ் மைந்தன்
நவ 05, 2025 15:23

உனக்கு தங்கட்சி இல்லாத தருதலையா?


புதிய வீடியோ