உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வரை தடுப்பது எது: அன்புமணி கேள்வி

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வரை தடுப்பது எது: அன்புமணி கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினை தடுப்பது எது என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை:கர்நாடகத்தில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக, கடந்த 10 ஆண்டுகளில் 2வது முறையாக வரும் செப்., 22- முதல் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. கர்நாடக மாநில அரசின் இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது.சமூகநீதியை பாதுகாக்கும் விஷயத்தில் கர்நாடக அரசை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டு அங்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் இப்போது 2வது முறையாக நடத்தப்படவுள்ளது.ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும்; மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று போலி சமூகநீதிப் புலிகள் கூறி வரும் நிலையில், மத்திய அரசே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினாலும் கூட, எங்கள் மாநிலம் சார்ந்த சமூக, கல்வி, வேலைவாய்ப்பு விவரங்களைத் திரட்ட இக்கணக்கெடுப்பு அவசியம் என்று சித்தராமைய்யா கூறியிருப்பது பலரும் அறிய வேண்டிய பாடமாகும்.இந்த கணக்கெடுப்பில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில் தான் அடுத்த ஆண்டுக்கான கர்நாடக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருப்பதாக அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா தெரிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு இக்கணக்கெடுப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான தேவைகள் என்னென்ன உள்ளனவோ, அவற்றுக்கும் மேலாகவே தமிழகத்திற்கான தேவைகள் உள்ளன.கணக்கெடுப்பு நடத்துவதற்கான கட்டமைப்புகளும், வசதிகளும் கர்நாடகத்தை விட தமிழகத்தில் அதிகமாக உள்ளன. ஆனாலும், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினை தடுப்பது எது?எப்படி இருந்தாலும் 2026-ஆம் ஆண்டு தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான அணி வெற்றி பெறப் போவதில்லை. சமூகநீதிக்கு துரோகம் செய்து விட்டு ஆட்சியை இழந்தார் என்ற அவப்பெயருக்கு அவர் ஆளாகிவிடக் கூடாது. எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவும், அதனடிப்படையில் அனைத்துத் தரப்பினருக்கும் முழுமையான சமூகநீதி வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Purushothaman
ஜூலை 27, 2025 09:20

சமூக நீதி என்றால் என்னவென்று குருடர்களின் கதறல் அதிகம் காணப்படுகின்றன...


D Natarajan
ஜூலை 24, 2025 21:09

சமூக நீதி யாருக்கு.ராமதாஸ் அய்யா குடும்பத்துக்கு இது பொருந்துமா. கோடியில் புரளுபவர்களுக்கு எதற்கு இட ஒதுக்கீடு . இது எல்லா சாதிகளுக்கும் புரிந்தும். பொருளாதார அடிப்படையில் மட்டும் சமூக நீதி அமல் படுத்த வேண்டும்


என்றும் இந்தியன்
ஜூலை 24, 2025 17:28

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினை தடுப்பது எது 1 ஜாதி வாரி கணக்கெடுப்பு என்று நடந்தால் அதில் மதவாரி கணக்கெடுப்பும் இருக்கும். இது நன்றாக ஆய்வு செய்யும் வேளையில் SC/ST/MBC என்ற கணக்கில் முஸ்லீம் கிறித்துவர்களும் இருப்பர். ஆனால் சட்டப்படி இந்து மதத்தில் தான் அப்படி இருக்கமுடியும் வேறு தத்தில் அப்படி இல்லவே இல்லை இருக்கவும் முடியாது. இதனால் அவர்களுக்கு வரும் சலுகை உடனே நிறுத்தப்படவேண்டும் என்று சட்டம் உள்ளது. ஆனால் அதை செயல்படுத்தினால் ஒட்டாளர்கள் எண்ணிக்கை திருட்டு திராவிட மடியல் அரசுக்கு குறைந்து விடும். ஆகவே தான் இதை நடத்தவில்லை திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு


GMM
ஜூலை 24, 2025 17:24

சாதி வாரி கணக்கெடுப்பு மற்றும் சாதி வாரி வரிவிதிப்பு சமூக நீதி காக்க முடியும். சாதி இட ஒதுக்கீடு, எண்ணிக்கை குறைந்த சாதியை ஒடுக்கி, எண்ணிக்கை அதிக சாதியை உயர்த்தி, சமூக சமநிலை இன்மையை உருவாக்கும். சமூக அநீதி உருவாகும்.


sundarsvpr
ஜூலை 24, 2025 16:12

சாதிகள் இல்லையடி பாப்பா என்று எட்டயபுரம் சுப்பிரமணி பாடினார். முண்டாது கவி என்றால் எல்லோருக்கும் தெரியும். இவரை போற்றுபவர்கள் கணக்குஎடுப்பில் என்ன சாதி என்று குறிப்பிடுவார். சாதி பெயரை குறிப்பிட்டு கூறவில்லை என்றால் அவர்களுக்கு என்ன சலுகைகள் கிடைக்காது என்று அரசு கூறவேண்டும். முதலியாரை எடுத்துக்கொண்டால் செங்குத்த/ ஆற்காடு என்று உள்ளது. பார்ப்பனரில் இதுபோல் உண்டு. உட்பிரிவை கூறக்கூடாது என்பதனை அரசு திட்டவட்டமாய் கூறவேண்டும்.


sankaranarayanan
ஜூலை 24, 2025 16:09

ஜாதிவாரி கணக்கு எடுக்க ஆரம்பித்தாl ஓங்கோல் குடும்பத்தினரின் எண்ணிக்கை குறைந்து விடுமோ என்ற பயந்தான்


தமிழ் மைந்தன்
ஜூலை 24, 2025 15:44

ஆம். அவர் தமிழக ஊழல் கம்பெனியில் சேர்ந்தால் புனிதராகி அமைச்சராகி தமிழராகி தலைவராகி விடுவார்.


Jack
ஜூலை 24, 2025 15:29

பச்ச உடம்பு ... இப்போ தான் ஆஞ்சியோ பண்ணியிருக்காங்க ...சமூக நீதி கொஞ்சம் வெய்ட் பண்ணட்டும்