உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலை உணவு திட்டம் என்னாச்சு? காத்திருந்து ஏமாந்த பள்ளி குழந்தைகள்

காலை உணவு திட்டம் என்னாச்சு? காத்திருந்து ஏமாந்த பள்ளி குழந்தைகள்

சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில், நேற்று காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டதால், பசியுடன் பள்ளிக்கு வந்த பிஞ்சு குழந்தைகள் ஏமாற்றம் அடைந்தனர். அரசு பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஆர்வம்

இந்த திட்டத்தை, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டது. அதை அரசு ஏற்று, கடந்தாண்டு முதல் கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாக, நகர, மாநகர எல்லையில் உள்ள பள்ளிகளிலும், இந்த திட்டத்தை செயல்படுத்தும்படி கோரிக்கைகள் வந்தன. அதனால், கடந்த மாதம், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்ட காமராஜர் பிறந்த நாளில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது. அன்று தொடக்கப்பள்ளி குழந்தைகள் அதிகாலையிலேயே உணவருந்தாமல் பள்ளிக்கு வந்து, ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆனால், பள்ளிக்கல்வி மற்றும் சமூக நலத்துறை சார்பில், அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால், பசியுடனும், ஆர்வத்துடனும் வந்த குழந்தைகள் வாடி போயினர். இந்நிலையில், ஆகஸ்ட், 5ம் தேதியான நேற்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பள்ளியில், இந்த திட்டத்தை முதல்வர் துவக்கி வைப்பார் என்றும், அதேநேரத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து அ ரசு உதவி பெறும் பள்ளிகளிலும், திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும், நகராட்சி, மாநகராட்சி கமிஷனர்கள் தெரிவித்தனர். மேலும், 'அனைத்து பள்ளிகளிலும், ஒரே மாதிரியாக, முதல்வர் படத்துடன், காலை உணவு திட்டம் குறித்த அறிவிப்பு பேனர்கள் வைக்க வேண்டும். 'அனைத்து குழந்தைகளுக்கும் தேவையான எவர்சில்வர் தட்டு, டம்ளர், அமர்வதற்கான தடுக்குப்பாய் உள்ளிட்டவற்றை வாங்க வேண்டும்' என, கடந்தாண்டே சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்த ஏற்பாடுகளை, நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக பள்ளிகளுக்கே சென்று ஆய்வு செய்து உறுதி செய்தனர். இதுகுறித்த தகவல்களை, சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு அனுப்பினர். இதையடுத்து நேற்று, தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகளில், முதல்வரின் காலை உணவு திட்ட துவக்க விழாவுக்காக, குழந்தைகளும் ஆசிரியர்களும் காத்திருந்தனர். ஆனால், சமூக நலத்துறை சார்பில், காலை உணவு அனுப்பப்படவில்லை. இதனால், பிஞ்சுக் குழந்தைகள் பசியால் வாடினர். இதையறிந்த பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

குழப்பம்

இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: நகராட்சி நிர்வாகம், சமூக நலத்துறை, தொடக்க கல்வி துறைகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு இல்லாததால், காலை உணவு திட்டவிரிவாக்கத்தில் குழப்பம் நிலவுகிறது. உறுதியான தகவல்கள் வந்த பின், இதுகுறித்து முறையாக அறிவித்திருக்க வேண்டும். இப்படி செய்வதால், அரசுக்கு தான் அவப்பெயர் ஏற்படும். ஏனெனில், இது, குழந்தைகள் மற்றும் பெற்றோரிடம் உணர்வுப்பூர்வமான கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

V RAMASWAMY
ஆக 06, 2025 13:15

இதையும் சேத்துக்குங்க முதன்மையான சாதனைப்பட்டியல்லே.


Subramanian Marappan
ஆக 06, 2025 09:58

ஹலோ ஜெய்ஹிந்தாபுரம் டிவி நிறுவனர் எம்ஜிஆரின் படத்திற்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் இருந்தார். எம்ஜிஆர் எங்கள் தங்கம் படத்தை இலவசமாக நடித்து கொடுத்தார். கருணாநிதி என்ன மன்னர் பரம்பரையில் பிறந்தவரா? என்ன தொழில் செய்து பொருள் ஈட்டினார். அவர் வாரிசுகள் என்ன திறமை கொண்டிருந்தார்கள். எப்படி சொத்து எங்கெங்கெல்லாம் சேர்க்க முடிந்தது.தொடர்ச்சியாக சினிமா உலகம் அவர்கள் கைக்குள் எப்படி வந்தது.அழகிரி எப்படி சொத்து சேர்த்தார். ஸ்டாலின் என்ன சம்பாதித்தசம்பாதித்தா


S.V.Srinivasan
ஆக 06, 2025 08:00

மக்களே எல்லாம் திராவிட மாடலின் விளம்பர மோகம். நீங்கள் நம்பி ஏமாறாதீர்கள்.


Barakat Ali
ஆக 06, 2025 07:56

எங்க துக்ளக் மன்னரையும் காமராஜரா, எம்ஜிஆரா நினைச்சு போக்கத்த பொதுசனம் ஏமாந்தா அதுக்கு எங்க துக்ளக்கார் என்ன பண்ணுவாரு ?????


G Mahalingam
ஆக 06, 2025 07:45

முன்னேறிய மாநிலம் என்று திராவிட மாடல் ஆட்சி இனி சொல்ல கூடாது. முன்னேறிய மாநிலத்தில் ஒரு வேலை சோற்றுக்கு கெயேந்தி நிற்கும் நிலையில் அது எப்படி முன்னேறிய மாநிலம். விளம்பரங்கள் 95 சதவீதம் நிறைவேற்றுதல் 5 சதவீதம் தான். மக்களை ஏமாற்றும் திராவிட மாடல் ஆட்சி.


அப்பாவி
ஆக 06, 2025 07:40

அஞ்சு வயசிலே சோறு போட்டுபடிக்க வைக்க முடியாதவர்கள் எதுக்கு பெத்துக்கணும்? விடியா அரசு ஆளுங்களை எலக்ஷனில் ஜெயிக்க வெக்கணும்? அந்தக் காலத்திலிருந்தே இதே கூப்பாடுதான்.


தியாகு
ஆக 06, 2025 07:35

கட்டுமர திருட்டு திமுகவின் கவுன்சிலர்களும் கொத்தடிமைகளும் உடன்பிறப்புகளும் அடிவருடிகளும் கொள்ளை அடிக்க உருவானதுதான் காலை உணவு திட்டம்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 06, 2025 07:05

ஓசில சோறு போடுவான்னு எவனோ சொன்னானாம், அதனால குழந்தைகளை பட்டினியா அனுப்பினாங்களாம். இப்படி எல்லாவற்றிற்கும் கையேந்தும் மனநிலையில் தமிழர்கள். முன்னேறிய மாநிலம். படித்தவர்கள் நிறைந்த மாநிலம். நாட்டின் முன்னணி மாநிலம். ஐயோ, அப்பா, முடியலப்பா.


தாமரை மலர்கிறது
ஆக 06, 2025 07:00

விளையாடி உண்டு களிக்க பள்ளிக்கூடம் கலைக்கூடம் அல்ல. திராவிட ஆட்சியில் கல்வி சீரழிகிறது.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 06, 2025 07:31

இன்றைய கல்விமுறை ஆய்வுகள் களிப்புடன் கற்பதே சாலச்சிறந்தது என்று அறுதியிட்டு சொல்கின்றன. சோத்துக்கு பஞ்சமில்லாத உனக்கு பசியின் கொடுமை விளங்காது தான். ஆனால் அடுத்தவன் பசியை பற்றி கவலைப்படாத நீ மனுசன் கிடையாது.


Arul. K
ஆக 06, 2025 06:57

மொத்தத்தில் இது தேவை இல்லாத ஆணி. இதனால் மாணவர்களுக்கும் சமையல் பணியாளர்களுக்கும் அவஸ்த்தை தான் மிச்சம். முதலில் மாணவர்களுக்கு தரமான குடிநீருக்கும் கழிப்பறைக்கும் ஆவண செய்தால் போதும். இன்னும் நிறைய பள்ளிகளில் பள்ளி வளாக்கத்தையே கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது


சமீபத்திய செய்தி