உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்ளாட்சி தேர்தல் எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்!

உள்ளாட்சி தேர்தல் எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்' என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2019ல் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம், வரும் 2025 ஜன., 5ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும், 2021ல் நடத்தப்பட்ட மாவட்ட ஊரக உள்ளாட்சிகள் பதவிக் காலம், 2026 செப்., மாதம் முடிவடைகிறது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கு ஒருங்கிணைந்த தேர்தல் நடத்தப்படுமா அல்லது பதவிக் காலம் முடிவடைந்த 27 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுமா என்ற குழப்பம் நிலவி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mnjidsdw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வார்டு எல்லை மறுவரையறை பணிகள் நடந்து வரும் நிலையில், பணிகளை விரைந்து முடித்து தேர்தல் தேதியை அறிவிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (டிச.,21) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில்,' வார்டு மறு வரையறை மற்றும் மதிப்பீட்டு பணிகள், பட்டியல் இனத்தனர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கான இட ஒதுக்கீது குறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசின் உத்தரவாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் தனபால் அடங்கிய அமர்வு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

M Ramachandran
டிச 21, 2024 20:01

அரசின் பதில் பேப்பே. பெப்பெ .... பெப்பெ


raja
டிச 21, 2024 18:41

இருங்க எஜமான் தமிழனுக்கு டாஸ்மாக் சரக்கு ஊத்தி கொடுக்கணும் பிரியாணி போட்டு பட்டியில் அடைத்து இம்பா சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யணும், பெண்களுக்கு கொடுக்க கொலுசு புடவை குக்கர் ஹாட் பாக்ஸின்னு வித விதமா ஆர்டர் பண்ணணும் அணிலார் மூலியமா ஓடி ஓடி டெலிவரி செய்யணும்... இம்புட்டு வேலையும் செய்த பிறகு தேர்தல் நடத்தினாலும் ஜெய்போமா என்ற சந்தேகம் ரொம்ப இருக்கே ...


ஆரூர் ரங்
டிச 21, 2024 16:06

ஆக மக்களை சந்திக்க பயம். இம்முறை தேறுவது கடினம். வேறென்ன?


Barakat Ali
டிச 21, 2024 14:24

உள்ளாட்சி அமைப்புக்கள் தேவையில்லை ...... மக்களை மொட்டையடிக்க சட்டசபையும், மக்கலவையும் போதும் ........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை