உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொரோனாவில் பாதித்த டாக்டர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைப்பது எப்போது ?

கொரோனாவில் பாதித்த டாக்டர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைப்பது எப்போது ?

கொரோனா தொற்றால் பெரும் பாதிப்பு ஏற்பட்ட போது அரசு டாக்டர்கள் பலர் தங்களின் உயிரை துச்சமாக மதித்து மக்கள் சேவையாற்றினர். பலரது உயிர்களை காப்பாற்றினர். இந்த பணியில் பாதித்த டாக்டர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்டவை நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருப்பதாக அரசு டாக்டர்கள் கவலை அடைந்துள்ளனர். விரைவில் நிவாரணம் கிடைக்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட வேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர். அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர்டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1). தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் டிசம்பர் 9 ம் தேதியன்று காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்தது முதல் அரசு மருத்துவர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே தந்துள்ள அரசு, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் அறிவிப்பை அப்போது வெளியிட வேண்டுகிறோம். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கையான கலைஞரின் அரசாணையை அமல்படுத்தும் அறிவிப்பை வெளியிட தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் . விடுக்கின்றோம். 2). இதுவரை ஒவ்வொரு முறை சட்டசபை கூட்டத்தொடரின் போதும், சுகாதாரத் துறையின் சாதனைகள் குறித்து துறை அமைச்சர் பெருமையாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இந்த துறையின் இதயமாக உள்ள மருத்துவர்களின் நலனுக்கான எந்த ஒரு அறிவிப்பையும் நம்முடைய அமைச்சர் இதுவரை வெளியிடவில்லை என்பது தான் வருத்தமான உண்மை.3) அதுவும் மருத்துவர்களுக்கு இங்கு நீண்டகாலமாக பணிச்சுமை, உரிய அங்கீகாரமும், ஊதியமும் மறுப்பு என்ற நிலையில் தொடர்ந்து பாதுகாப்பும் கேள்விக் குறியாகியுள்ளது. இந்த நிலையில் போதிய மருத்துவர்கள் இல்லாத போதும், சிரமத்தை பொருட்படுத்தாது மகப்பேறு இறப்பை குறைத்து வரும் மகப்பேறு மருத்துவர்களை பாராட்டுவதற்கு பதிலாக அவமதித்து வருவதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

கருணை பார்வை விழுமா ?

4) கொரோனா பேரிடரின் போது உறுதுணையாக இருந்த அரசு மருத்துவர்களை முதல்வரால் என்றைக்குமே மறக்க முடியாது. இருப்பினும் கொரோனா பேரிடரில் பணியாற்றி, தொற்று ஏற்பட்டு உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் குடும்பத்துக்கு இதுவரை அரசு வேலை கூட தரப்படவில்லை.5) இந்த ஆட்சியில் பெண்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக நம் முதல்வர் தெரிவிக்கிறார்கள். ஆனால் அரசு வேலை கேட்டு நான்கு வருடங்களாக கண்ணீர் விடும் திவ்யா விவேகானந்தனின் மீது முதல்வரின் பார்வை விழவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது.

தந்தை ஆணையை மறக்கலாமா ?

6) சென்னை உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும், பிடிவாதமாக முதல்வர் ஸ்டாலினின் தந்தை கருணாநிதி பிறப்பித்த ஆணையை (GO.354) புறக்கணிப்பது என்பது இந்த திராவிட மாடல் ஆட்சியில் வரலாற்று பிழை என்பதை உணரவில்லையா?

7) எனவே இந்த சட்டசபை கூட்டத் தொடரில் அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட முதல்வரை வேண்டுகிறோம். மேலும் திவ்யா விவேகானந்தனுக்கு அரசு வேலை வழங்கவும் ஆணை பிறப்பிக்க நாம் முதல்வரை வேண்டுகிறோம்.இவ்வாறு டாக்டர் பெருமாள் பிள்ளை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை