உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்த பணம் எங்கிருந்து வந்தது: துணை ஜனாதிபதி கிடுக்கிப்பிடி கேள்வி

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் இருந்த பணம் எங்கிருந்து வந்தது: துணை ஜனாதிபதி கிடுக்கிப்பிடி கேள்வி

சண்டிகர்: அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்பி உள்ளார். பணம் வந்த பாதை, எங்கிருந்து வந்தது, பின்னணியில் யார் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: டில்லியில், மார்ச் மாத மத்தியில் நீதிபதியின் வீட்டில் வேதனையான சம்பவம் நடந்தது. கறைபடிந்த, கணக்கில் வராத, சட்டவிரோதமான மற்றும் காரணம் சொல்ல முடியாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 6 -7 நாட்களாக அந்த விஷயம் பொது வெளியில் விவாதிக்கப்பட்டது. அது வெளியில் தெரியாமல் இருந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும். அமைப்புகளில் இருந்து, கறைபடிந்த, கணக்கில் வராத மற்றும் காரணம் சொல்ல முடியாத பணம் கைப்பற்றப்படும் போது, அது யாருடையது என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். பணம் வந்த பாதை என்ன?எங்கு இருந்து வந்தது?பின்னணியில் பெரிய புள்ளிகள் யாரும் உள்ளனரா?நீதித்துறை அல்லது நீதித்துறைப் பணிகளில் பணம் செலுத்தப்பட்டு உள்ளதா?இந்த பிரச்னைகள் அனைத்தும் வழக்கறிஞர்களை மட்டும் அல்ல சாமானிய மக்களையும் கோபமடைய வைத்து உள்ளது.ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை? விசாரணை ஏன் நடத்தப்படவில்லை? என கேள்வி எழுகிறது. ஒரு ஜனநாயகத்தில் சிலர் மட்டும் விசாரணை மற்றும் ஆய்வுக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தால், சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்டத்தில் சமத்துவம் கடுமையாக சமரசம் செய்யப்படுகின்றன. இரண்டு மாநிலங்களின் நீதித்துறையை உள்ளடக்கிய ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி, நீதித்துறை பணியைச் சார்ந்து, நிர்வாக பணியையும் செய்கிறார். இந்த நிர்வாகப் பணி மிகப்பெரியது. இதற்கு நீதிபதிகளுக்கான குழு அனுமதி வழங்கி உள்ளதா?அதற்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளதா?அதன் அறிக்கை ஏதேனும் விளைவை ஏற்படுத்துமா?அந்த அறிக்கையை செயல்படுத்த முடியுமா?ஒரு நீதிபதியை நீக்கும் வழிமுறை இருந்தால், அதனை லோக்சபா அல்லது ராஜ்யசபாவில் தான் துவங்க முடியும் என அரசியலமைப்பு கூறுகிறது. இது தான் ஒரே வழியா? அப்படியென்றால், நீதிபதிகள் குழுவானது, எப்ஐஆர்.,க்கு மாற்றாக இருக்க முடியாது. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீது நாம் உரிமை கோரியிருந்தால் சட்டத்தின் முன் சமத்துவம் இருக்க வேண்டும். ஜனாதிபதி மற்றும் கவர்னர்கள் கூட பதவியில் இருக்கும் வரை வழக்கு தொடர்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். இந்த நாட்டில் யாருக்கும் இந்த சலுகை கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Neelachandran
ஜூன் 14, 2025 11:44

துணைக் குடியரசுத் தலைவர் மட்டுமே இப்பிரச்சினையை அடிக்கடி பேசுகிறார்.இதர பாஜக தலைவர்கள் யாரும் பேசாதது ஏன்?


Rangasamy
ஜூன் 07, 2025 09:22

பணம் எங்கிருந்து வந்ததுன்னு சொல்லாம ஏன் சொல்ல மாட்டேங்கறாங்க சாதாரண மக்கள் அரெஸ்ட் பண்றீங்க


Rajendra kumar
ஜூன் 07, 2025 05:32

துணை ஜனாதிபதிதான் பூனைக்கு மணி கட்டும் முக்கிய வேலையை துணிந்து செய்கிறார். சுத்தமான மனிதர்.


Rajendra kumar
ஜூன் 07, 2025 05:29

நீதிபதிகளுக்கு மிக அதிக சுதந்திரம், அதிகாரம் கொடுப்பது ஆபத்து. அவர்கள் என்ன கடவுளிடமிருந்து நேராக வந்தவர்களா? சாதாரண வக்கீல் தான் பிற்காலத்தில் நீதிபதியாகிறார். அவர்களை கண்காணிக்க சட்டக் கமிஷன் அமைய வேண்டும்.. வழக்குகளுக்கு கால வரையரை செய்து தேவையில்லாத வாய்தாக்களை தவிர்த்து நீதி வழங்க வேண்டும். கொலீஜியம் முறையை விரிவுபடுத்தி சட்டக்கமிஷனுக்குள் கொண்டு வர வேண்டும்.


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 06, 2025 21:53

அய்யா உத்தமரே இதே மாதிரி PMCARE கு எப்படி கோடி கணக்கில் யார் கொடுப்பது என்று கேட்டு சொல்லுங்கள் , இப்போ தான் உங்க எலோட்ரொல் BOND என்பது சட்டப்படி கமிஷன் என்று தெரிந்தது அப்போ PMCARE?


Ganapathy
ஜூன் 07, 2025 01:32

உன்னைப் போன்ற காங்கிரஸ் கூமுட்ட மட்டும்தான் இந்த கேள்விக்கு பலமுறை பதில் அளித்தாலும் மீண்டும் மீண்டும் கேட்பான்


Rangasamy
ஜூன் 07, 2025 09:23

இவரை விசாரித்தல் உண்மை தெரியவரும் நீதிபதி வீடு


J.Isaac
ஜூன் 07, 2025 12:26

பிரதம மந்திரி நலனுக்காக


J.Isaac
ஜூன் 07, 2025 15:53

பிரதம மந்திரி நலன் திட்டம்


சிட்டுக்குருவி
ஜூன் 06, 2025 21:40

இதை பற்றிய கருத்து ஒன்றும் காங்கிரஸ் இடமிருந்து காணோமே ஏன்?


Padmasridharan
ஜூன் 06, 2025 21:30

சட்டத்தின் முன் சமத்துவம் இருக்கிறதா? எல்லோரும் அதிகார பிச்சை எடுத்து கிடைக்கும் பணத்துக்கு முன்தான் சமமாக கருதுகிறார்கள். பணமிரூந்தால் கடவுளையும் பக்கத்தில் நின்று பார்க்கலாமென்று சட்டம்


Mahendran Puru
ஜூன் 06, 2025 21:18

யாருக்கோ பங்கு போயிருக்கு. இவருக்கு கிடைக்கும் வரை கிடுக்கிப் பிடி போடுவார்.


Rangasamy
ஜூன் 07, 2025 09:31

இந்த மாதிரி கருத்து சொல்றவன்களை பூரா விசாரிக்கணும் விசாரிச்சா உண்மை வெளிய வந்துரும்


GMM
ஜூன் 06, 2025 20:53

நீதிபதி வீட்டில் சில கோடி கணக்கில் வராத பணம் தொடர்பாக வழக்கு பதிவு, விசாரணை மேற்கொள்ளாத காரணம் கடுமையான நிர்வாக கோளாறு, நிர்வாக முறைகேடு . குற்றம் நிறைந்த நீதிபதியை பணி நீக்கம் செய்த பின் சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்டத்தில் சமத்துவம் என்பதை சர்வாதிகாரி கூட அமுல் படுத்த அஞ்சுவர். மத்திய அரசின் நிர்வாக பணி தெரியாத நிர்வாக அதிகாரிகள் குழப்பம் தான் காரணம்.


Varadarajan Nagarajan
ஜூன் 06, 2025 20:50

முன்பிருந்தே துணை ஜனாதிபதி மிகவும் நியாயமான மற்றும் கடுமையான கேள்விகளை கேட்டுவருகின்றார். அவரது கேள்விகளில் நியாயம் உள்ளது. இது போன்று பதில்கூறமுடியாத பணத்தை மட்டுமே நாம் பார்க்கமுடியாது. இதுவரை அவர் அளித்த தீர்ப்புகளை மறுபரிசீலனை செய்யவேண்டியதும் மிகவும் அவசியம். கொலீஜியம் மற்றும் உச்ச நீதிமன்றமும் தாமாக முன்வந்து அதை செய்ய கடமைப்பட்டவர்கள்.


முக்கிய வீடியோ