உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசின் நிதி எங்கே செல்கிறது? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

அரசின் நிதி எங்கே செல்கிறது? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: 'தமிழக அரசின் நிதி எல்லாம் எங்கே செல்கிறது என்பதை, மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவரது அறிக்கை:தமிழகம் முழுதும் உள்ள 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில், இணையதள இணைப்பு கட்டணம் பல மாதங்களாக செலுத்தப்படாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சம்பள பட்டியல் தயாரிப்பில் இடையூறு ஏற்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில், தமிழகம் கடன்கார மாநிலமாக மாறி இருக்கிறது.தமிழகம் 8.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. 'அரசு வாங்கும் கடன் முழுதும் அன்றாட செலவுகளுக்கு பயன்படுகிறதே தவிர, கடன் வாங்கும் உண்மையான நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுவதில்லை' என, கணக்கு தணிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கான இணையதள இணைப்பு கட்டணம் கூட செலுத்த முடியாமல், அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலையில் தமிழக அரசு உள்ளது என்றால், அரசின் நேரடி வரி வருமானத்தையும், ஜி.எஸ்.டி.,யில் தமிழகத்தின் பங்காக கிடைக்கும், 70 சதவீதம் நிதியையும், தி.மு.க., அரசு எந்த வகையில் செலவு செய்கிறது. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுகிறது. திவாலாகும் நிலையில், தமிழக அரசு உள்ளதா என்பதை, முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

MADHAVAN
டிச 24, 2024 10:50

தமிழக அரசின் வருவாய் மோடிகிட்ட போகுது, அது அங்கேயிருந்து அதானி கு போகுது,


sankar
டிச 27, 2024 06:44

சூப்பர் அறிவாலய கொத்தடிமை


N Sasikumar Yadhav
டிச 23, 2024 08:29

கோபாலபுர கஜானாவுக்கு பாய்ந்தது போக கொத்தடிமைகளுக்கும் கொஞ்சம் பாய்கிறது


முக்கிய வீடியோ