உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே; அண்ணாமலை கேள்வி

மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே; அண்ணாமலை கேள்வி

சென்னை: சமக்ர சிக்ஷா திட்டத்தின் மூலம், மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை அமைச்சர் மகேஷ் ஏப்பம் விட்டதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: பிரதமர் மோடி நமது குழந்தைகள் அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2018- 2019ம் ஆண்டு, சமக்ர சிக்ஷா திட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றான, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி தொடர்பாக, சில விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி பாடத்திட்டத்துக்காக, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ள நிதி ரூ.1,050 கோடி. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ei7fmldj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில், தமிழ் உட்பட மும்மொழிகளில், ஆறாம் வகுப்பில் இருந்தே தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்விப் பாடம் உள்ளது. குறைந்தபட்சம், கேரள மாநிலத்திடம் இருந்து, தமிழில் இருக்கும் அந்தப் பாடநூலையாவது வாங்கி, நமது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குக் கொடுத்திருக்கலாம். ஆனால், திமுக செய்திருப்பது என்ன? இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் செயல்பட்ட தன்னார்வலர்களை, கேரள மாநில அரசு நிறுவனமான Keltron நிறுவனத்தின் கீழ், மாதம் ரூ.11,500 ஊதியத்தில், அலுவலகப் பணியாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்றுனர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கிப் பணியில் அமர்த்தியுள்ளது. தமிழகம் முழுவதும், கணினி பயிற்சி பெற்ற B.Ed பட்டதாரிகள் 60,000 பேர் இருக்கையில், அவர்களுக்குப் பணி நியமனம் வழங்காமல் வஞ்சித்திருப்பது ஏன்? கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்திற்காக, மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? அரசு மற்றும் அரசு உதவி பெறும் எத்தனை பள்ளிகளில், ICT Labs செயல்பாட்டில் உள்ளது? ஏன் ஆறாம் வகுப்பிலிருந்தே, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி, தனிப் பாடமாக அமைக்கப்படவில்லை? இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறார். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

T.sthivinayagam
பிப் 13, 2025 21:41

அண்ணாமலை சார் வர வர ஒண்ணாம் கிளாஸ் பையனை போல் அடம்பிடிக்கிறார்


N.Purushothaman
பிப் 13, 2025 20:55

திருட்டு திராவிடன்கள் தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதில் பிசியாக இருக்கானுங்க ...அவ்னுங்ககிட்ட அதை எல்லாம் எதிர்பார்க்கமுடியுமா ?


தாமரை மலர்கிறது
பிப் 13, 2025 20:47

தமிழகத்துக்கு எந்த நிதியும் கொடுக்க தேவை இல்லை. அப்படியே கொடுத்தால், ஸ்டாலின் குடும்பம் அப்படியே சாப்பிட்டு ஏப்பமிட்டுவிடும். பிஜேபி அரசு வரும் வரை, அனைத்து நிதியுதவிகளை மத்திய அரசு நிறுத்தி வைக்க வேண்டும்.


Bharathi
பிப் 13, 2025 18:52

Respected Annamalai ji appreciate your intelligence in many aspects and your hardworking on collection of various data. but this isn't enough to survive further. with many reveals it is a surprise to note there is no actions which lead to suspicious either your data's are inadequate or the authority doesn't want to take action against. we are loosing confident in good governance for TN. hope in future it would be taken in a serious note else the party may disappear for non keeping the so called integrity


V வைகுண்டேஸ்வரன்
பிப் 13, 2025 18:46

பாஜக மாநில தலைவர் என்கிற வெங்காய போஸ்ட் என்று அண்ணாமலை யே ஒரு பேட்டியில் சொன்னார்.


Sivak
பிப் 13, 2025 20:41

கேட்டதுக்கு பதிலை சொல்லு மொதல்ல


Mediagoons
பிப் 13, 2025 18:41

பல லச்சம் கோடிகளை ஏப்பம் விட்டு வெறும் 1000 கொடுத்து ஏமாற்றுகிறது மத்திய மோடி அரசு


Bala
பிப் 13, 2025 20:25

அண்ணாமலை அவர்கள் ஆதாரம் காண்பித்திருக்கிறார். கூனின் சாரி ரௌடியின் ஆதாரம் எங்கே ?


sankaranarayanan
பிப் 13, 2025 18:04

எல்லாமே சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விட்டபின் இப்போ போய் இந்த ஆளு என்னன்னவோ கேட்கிறாரே நாம் பேசாமல் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டியதுதான் என்கிறார் கல்வி அமைச்சர் நாம் ஏதாவது சொல்லப்போக அது வீண் வம்பிலேபோய் முடியும் இதை கண்டும் காணாததுமாகவே போகணும் தெரியுதா


raja
பிப் 13, 2025 17:44

எல்லாத்தையும் சாப்பிடானுவோ புறங்கை


Kasimani Baskaran
பிப் 13, 2025 17:38

பேனா, பூங்கா போன்ற இத்யாதிகளை செலவு செய்து விட்டார்கள்..


K.n. Dhasarathan
பிப் 13, 2025 17:24

அண்ணாமலை நீங்கள் ன்ன நிதி அமைச்சரின் பினாமியா? கேள்வி கேட்க மட்டும்தான் தெரியம், மற்றபடி நிதி ஏதும் வாங்கி கொடுக்க தெரியுமா ? அது இருந்தால்தான் கடந்த புயல் வெல்ல நேரத்தில் வாங்கி கொடுத்திருக்கலாம்ல, ஏதாவது நிதி வாங்கி கொடுத்துவிட்டு பிறகு கேள்வி கேட்கலாம், கல்விக்கு வர வேண்டிய பல தொகைகள் நிலுவையில் இருக்கு, இதிலே முன்னாள் ஆளுநர் ரவி வேற, கொசுத்தொல்லை போல, எப்படியோ பல்கலை கழகங்களை நிதி பற்றாக்குறையில் மூட வேண்டும் என்று ஒன்றிய அரசு கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறது, அதற்க்கு அல்லக்கை வேலை பார்ப்பதை விட்டு, உருப்படியாக ஏதாவது நிதி வர வழி செய்துவிட்டு பேசலாம், கேள்வி கேட்கலாம், தமிழகத்திற்கு ஒரு வேலையும் செய்யாமல் எப்படி ஐயா தினம் கேள்வி கேட்கிறீர்கள்? மக்கள் அதனால்தான் உங்களை உங்கள் தொகுதியில் தோற்கடித்தார்கல், இன்னுமா திருந்தலை ? சொன்னது புரிகிறதா ? பதில் கிடைக்கும், வேலை செய்தால் மட்டும்.


Bala
பிப் 13, 2025 20:30

ஏன் மத்திய அரசு கொடுத்த எல்லா நிதியையும் குடும்ப அரசியல் கட்சி ஊழல் செஞ்சு ஏப்பம் விட்டமாதிரி மேலும் மேலும் ஊழல் செஞ்சு ஏப்பம் விடவா? கேள்வி கேட்பவர்களை பத்திரிகையாளர் மணி சொன்னமாதிரி அறிவாலய நாய்களை வைத்து மீடியாக்களில் கடித்து குதறுவதற்கா ?


புதிய வீடியோ