உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தனியார் மருத்துவமனைக்கு முதல்வர் சென்றது ஏன்? அமைச்சர் மா.சு., விளக்கம்

தனியார் மருத்துவமனைக்கு முதல்வர் சென்றது ஏன்? அமைச்சர் மா.சு., விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னையில் அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: 'தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவமனைகள் வளர்ச்சி பெற்றுள்ளதாக தி.மு.க., அரசு கூறுகிறது. அப்படி இருக்கையில், முதல்வர் ஏன் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்' என, பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார். அவர் ஏற்கனவே இரண்டு மாநிலங்களில் கவர்னராக இருந்துள்ளார். அப்போது, அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்க வாய்ப் பில்லை. அவ்வாறு இருந்திருந்தால், அவர் எங்கே போயிருப்பார் என்பது ஊருக்கு தெரிந்திருக்கும். பிரதமர் மோடியின் சகோதரர், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மனைவி ஆகியோர், தமிழகம் வந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடாது என்பது அல்ல. உயர் பொறுப்புகளில் இருப்போர், அரசு மருத்துவமனைகளுக்கு போகும் போது, அவர்களுக்கான பாதுகாப்பு போன்றவற்றால், அங்கு வரும் பொதுமக்களுக்கான சேவை பாதிக்கப்படும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், முதல்வர் போன்றோர் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். எனவே, தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை என, பிரித்து பார்க்கக்கூடாது. அரசு மருத்துவமனை மிக சிறப்பாக இருப்பதால் தான், 2021க்கு பின், நோயாளிகள் வருகை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Ramanujam Veraswamy
ஜூலை 29, 2025 04:44

Normally, CM and his close associates and family members prefer treatments at Caveri Hospital. Despite Caveri Hodpital at Chennsi, Mr.Stalin preferred Apollo Hospital, leave alone well established Govt Hospitals at Chennai. Who will clarify?


ManiK
ஜூலை 28, 2025 18:39

மா.சு. ஐயா - இப்போது உங்க ஆடசியில் உங்க தலைவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்புவதில் உள்ள பயம் புரிகிறது. அடுத்த ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் என.டி.யே ஆட்சியில் உங்க தலைவரை தைரியமாக அனுப்பலாம்.


PR Makudeswaran
ஜூலை 28, 2025 15:04

நீங்கள் பொய்யர்கள் உங்கள் கூட்டம் புழுகு மூட்டை. உங்களை யாரும் நம்பமாட்டார்கள்.


உண்மை கசக்கும்
ஜூலை 28, 2025 14:46

2021 க்கு பிறகு 3 மடங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்றால் என்ன காரணம்.. அரசின் சுகாதார துறை படு கேவலமாக செயல் படுகிறது என்று தானே.


Yaro Oruvan
ஜூலை 28, 2025 14:45

கேள்வி கேட்டா அதுக்கு பதில்சொல்லாம கம்பி கட்டுன கதையெல்லாம் பேசுனா எப்டி மாசு


N Srinivasan
ஜூலை 28, 2025 13:28

அப்படி பொது மக்களுக்கு இடைஞ்சல்கள் தரக்கூடாது எனில் எதற்கு train மூலமாக பயணம் செய்ய வேண்டும் அது இடைஞ்சல் இல்லையா ?


Ramesh Sargam
ஜூலை 28, 2025 13:15

அதுபோகட்டும். உங்கள் திமுக கட்சியினருக்கே சொந்தமான பல மருத்துவமனைகள் தமிழகம் முதல்கொண்டு மற்ற மாநிலங்களிலும் உள்ளன. அங்கு முதல்வர் சென்றிருக்கலாமே ஏன் செல்லவில்லை? ஒருவேளை அங்கெல்லாம் தகுதியற்ற மருத்துவர்கள், தரம் இல்லாத மருத்துவம் பார்ப்பார்கள் என்று பயந்து செல்லவில்லையா?


Barakat Ali
ஜூலை 28, 2025 12:48

இதே திமுக ஜெ அவர்கள் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டபொழுது ஏன் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெறவில்லை என்று கேட்டது .....


Krishnamurthy Venkatesan
ஜூலை 28, 2025 12:21

பிரதமரின் சாகோதரரோ அல்லது ராஜ்நாத்தின் மனைவியோ அரசு பதவியில் இருப்பவர்கள் அல்ல. இவர் கூற்று அப்படி இருக்கிறது எனில் சொந்தமாக உணவகம் நடத்தி பக்கத்து கடையில் சுவையான உணவு உண்பவர் போல் உள்ளது.


Anand
ஜூலை 28, 2025 12:11

வெங்காயம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை