உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாபெரும் தலைவர்களின் பெயர்களை புறக்கணித்தது ஏன்: அண்ணாமலை கேள்வி

மாபெரும் தலைவர்களின் பெயர்களை புறக்கணித்தது ஏன்: அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:திமுக அரசு கொடுத்துள்ள பட்டியலில் மாபெரும் தலைவர்களின் பெயர்களை புறக்கணித்திருப்பது ஏன் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.அண்ணாமலை அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=amxhgf2f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஜாதிப்பெயர்களை நீக்க உத்தரவிட்டு தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், ஜாதிப்பெயர்களுக்கான மாற்றுப் பெயர்களை வைக்க சில எடுத்துக்காட்டுகளையும் வழங்கி இருக்கிறது. அவற்றில், மாபெரும் தலைவர்களான, அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, அயோத்திதாசர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை திமுக அரசு புறக்கணித்திருப்பது ஏன்? அவர்களை இன்னும் பட்டியல் சமூகத் தலைவர்களாக மட்டுமே திமுக அரசு பார்க்கிறதா? மேலும், திமுக அரசு கொடுத்துள்ள பட்டியலில், ராணி வேலு நாச்சியார், கொடிகாத்த குமரன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட தமிழகத்தின் பெருமைக்குரிய சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை புறக்கணித்திருக்கிறது.அப்படி அந்தப் பட்டியலில் இருக்கும் மாபெரும் தலைவர்கள் யார் என்று பார்த்தால், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. தனக்குத்தானே சிலை வைப்பது, தனக்குத் தானே டாக்டர் பட்டம் கொடுத்துக் கொள்வது என்று உங்கள் தந்தை செய்த நகைச்சுவைகள் போதாதென, தற்போது பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, அவரை மிஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள்.உங்கள் குடும்ப நிறுவனங்களுக்கே உங்கள் தந்தை பெயரை வைக்காத நீங்கள், பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, மக்கள் வரிப்பணத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு வீணடிப்பீர்கள்? முன்னாள் முதல்வர்கள் பெயரை வைக்கிறோம் என்றால், எம்.ஜி.ஆர். பெயர் எங்கே?ஜாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரைத் திணிக்க முயற்சிக்கும் திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை திருத்தி, மேற்கூறிய அனைத்துத் தலைவர்களின் பெயர்களையும் இணைத்து, புதிய அரசாணையை வெளியிட வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Perumal Pillai
அக் 08, 2025 23:38

கிளம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் , திரிச்சி பஸ் ஸ்டான்ட் பெயர் மாற்றப்பட வேண்டும் . சென்னை சென்ட்ரல் பெயரும் மாற்றப்பட வேண்டும்.


V. Rajan
அக் 08, 2025 23:18

அண்ணாமலைக்கு தெலுங்கு ஆகாது.


மணிமுருகன்
அக் 08, 2025 23:13

சாதி பெயரை நீக்கிவிட்டு அந்த இடத்தின் ஊரின் சிறப்பு வாய்ந்தவர்கள் பெரை வைக்கவேண்டும் கருணாநிதி சுதந்திரப் போராட்ட வீரரா எத்தனை முறை சிறை சென்றார் மக்கள் அவரவர் பகுதிகளுக்கு ஏற்றபெயர் வைப்பதை விரும்புவார்கள் கண்டிப்பாக சிறந்த தேசத்தலைவர்கள் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் கலைவாணருக்கு சொந்தமான இடத்தை அவர் தானம் பண்ணியதை கருணாநிதி தன் பெயரை வைத்தவர் இன்னும் போகவில்லைப் போல மோகம்


குடிகாரன்
அக் 08, 2025 22:50

எதிர் வரும் காலத்தில் திருட்டு திராவிட கும்பலின் தலைவன் மற்றும் வாரிசுகளின் பெயர்கள் அனைத்து இடங்களிலும் நீக்கப் பட வேண்டும்.


rama adhavan
அக் 08, 2025 22:34

ஒரு வருடத்திற்கு ஒரு 10000 பலவகையான, மூத்த அதிகாரிகளின் மாற்றல் உட்பட அரசாணைகள் வெளியிடப் படுகின்றன. இதில் எதை நினைவு வைப்பது? அது போல் தான் இதுவும்.


Thravisham
அக் 08, 2025 22:32

முத்தமில் அரிஞர், தானைத் தலீவர், கலீஞர், விதோட் விஞ்ஞானி, டக்டர் போன்ற பேர்களிலும் பெயர் சூட்டலாமே


சிட்டுக்குருவி
அக் 08, 2025 22:31

இப்பதான் எல்லா ஜாதிக்கும் ஒரு ர் கூட்டிவைக்கோணம் என்று பிரதம மந்திரிக்கு கடிதம் அனுப்பி இருக்கார் .அதுக்குள்ளாற ஜாதிகள் பெயரை எல்லாம் எடுத்துவிட்டால் அப்புறம் ர் எப்படிவைப்பார் .?


P.M.E.Raj
அக் 08, 2025 22:30

அண்ணாமலை அவர்கள் சொல்வது சரிதான். தமிழகத்தில் ஊழலை அரங்கேற்றிய கருணாநிதியின் பெயரும், தமிழ் கலாச்சாரத்தை சீரழித்த ஈவேராவின் பெயரும் சேர்த்திருப்பது கண்டிக்கத்தக்கது. இவர்களினால் தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் அவமதிப்பே தவிர வேறொன்றுமில்லை.


ramesh
அக் 08, 2025 22:19

g d நாயுடு பெயர் வைப்பதில் உங்களுக்கு என்ன வெறுப்பு அண்ணாமலை . அப்படி என்றால் நாயுடு சமூக ஓட்டு பிஜேபி க்கு வேண்டாம் ஏன்று சொல்லுகிறீர்களா.


P.M.E.Raj
அக் 08, 2025 22:50

G D நாயுடு பெயர் வைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. ஸ்டாலின் அப்பா தாத்தா பெயர் ஏன் சேர்க்கவேண்டும்? அவர்களால் தமிழகத்துக்கு என்ன பயன் ? தமிழ் நாட்டில் வேறு எந்த மறைந்த தலைவர்கள் இல்லையா? தமிழ்நாடு இவர்கள் சொத்தா?


Kulandai kannan
அக் 08, 2025 23:15

G.D. மேம்பாலம் என்று பெயர் வைக்கப்போகிறாரா முதன்மந்திரி?


varatharajan
அக் 08, 2025 22:07

தமிழக அரசு இந்த அரசாணை நீக்கிட்டு எல்லாமே சமஸ்கிருதம் அல்லது இந்தி பேர வச்சுக்கலாம் அண்ணா ஓகேவா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை