உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: கோவையில் 'அரபுக் கல்லூரி' என்ற போர்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்காக 4பேர் ஆள் சேர்த்து வந்துள்ளனர் எனும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு கோவை அருள்மிகு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்புத் தாக்குதலை, வெறும் சிலிண்டர் விபத்து என தி.மு.க., அரசு பூசி மொழுக முயன்ற நிலையில், அதற்கு அடுத்து தொடர்ச்சியாக பயங்கரவாத அமைப்புகளைச் சார்ந்தோர் தேசியப் புலனாய்வு அமைப்பால் கோவையிலிருந்து கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் தொடர்ச்சியாக நடந்து வரும் முதியோர்கள் கொலை, மறுபுறம் கோவில் சிலைகள் சேதம். இதற்கிடையில் மனதை அதிர வைக்கும் அளவிற்கு பயங்கரவாத அமைப்பினரின் புழக்கம் என கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளை மொத்தமாக அச்சுறுத்தல் வளையத்திற்குள் வைத்து மக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு. தொழில் வளமும் கல்வி வளமும் நிறைந்து செழித்தோங்க வேண்டிய கோவை, தற்போது சட்டம் ஒழுங்கு சீரழிந்து பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன் என இப்போதாவது முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

RAMESH
ஜூன் 20, 2025 10:38

கோவை மக்களின் தலை விதி போல் நடக்கட்டும். திராவிட மாடல் ஆட்சி.. சீரழிகிறது தமிழகம்.. இன்னும் குவார்ட்டர்.. பிரியாணி.. ஓட்டுக்கு பணம்......தீவிரவாத செயல்களுக்கு மூலதனம்...... மீண்டும் ஒரு முறை தாங்காது கோவை..... தீவிரவாத கும்பலை அழிக்க சபதம் எடுக்குமா ஸ்டாலின் அரசு


புரொடஸ்டர்
ஜூன் 20, 2025 09:26

கோவை பாஜக எம்எல்ஏவின் சாதனை


J.Isaac
ஜூன் 19, 2025 20:59

RSS ஆதிக்கமும் இங்கு அதிகம்


J.Isaac
ஜூன் 19, 2025 20:57

அமித்ஷா , ஆங்கிலம் பற்றி பேசிய பதிவு திடிரென ஏன் நீக்கப்பட்டது. பயமா?


பாஸ்கி
ஜூன் 19, 2025 19:31

என்.ஐ.ஏ என்ன பண்ணுது?


Jayaraman Duraisamy
ஜூன் 19, 2025 16:35

அண்ணாமலை வார் ரூமை தான் இப்படி சொல்கிறாரோ?


Rajah
ஜூன் 19, 2025 16:22

மலபுறத்தோடு உள்ள தொப்புள் கொடி உறவுதான் காரணம்.


Pandianpillai Pandi
ஜூன் 19, 2025 15:57

நடக்கும் நிகழ்விற்கு தி மு க வை குறை சொல்வது மட்டக்கரமான அரசியலாக உங்களுக்கு பட வில்லையா ? மக்கள் தி மு க வுடன் பயணிக்கிறார்கள் என்பதை ஜீரணிக்க முடியாமல் கண்டதை தின்னுட்டு ஏப்பமும் வாந்தியும் எடுப்பதற்கு ஒப்பான செயலை செய்துகொண்டு கண்டதை பேசி நான்கு வருடமாக மக்களை ஏமாற்றி தற்போது அதிமுக வுடன் கள்ள கூட்டணி வைத்து புகலிடம் தேடிக்கொண்ட பாஜக தி மு க வை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது.


Suppan
ஜூன் 19, 2025 16:23

கிடைக்கும் ரூபாய் 200 க்காக எழுதுகிறீர்கள். கோட்டைப்பகுதிக்கு சென்றால் உங்களுக்கு புரியும், சிலிண்டர் வெடிப்பு என்று அடித்துவிட்டு விடியலார் உங்களை நன்கு மூளை சலவை செய்துள்ளார். பாவம் திமுகவுக்கு "அமைதி மார்கத்தினரின்" ஒட்டு வேண்டும்.


Rajah
ஜூன் 19, 2025 16:24

புகையிரத டிக்கெட் பரிசோதகருக்கு சிலை வைத்து வணங்குங்கள்.


sridhar
ஜூன் 19, 2025 20:51

இங்கே வந்து கருத்து வாந்தி எடுப்பது நீங்க தான். ஊரே காறி துப்புது திமுகவை . கொத்தடிமையே ஓடிவிடு .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 19, 2025 15:39

அந்த புகழ்பெற்ற கோவை குண்டு வெடிப்புக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டும் ரகசியமாக எச்சரிக்கப்பட்டதை நினைத்துப்பார்க்க வேண்டும் ..... கேரள எல்லையில் இருப்பதும் ஒரு காரணம் ....


Kundalakesi
ஜூன் 19, 2025 14:28

Vagana மக்கள் பெருக்கம். பெயரளவிற்கு சொற்பமான சாலை வசதிகள். தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய வருவாய் ஈட்டும் மாவட்டத்தில் மெட்ரோ இல்லை, மேம்பாலங்கள் சரிவர வடிவமைக்க வில்லை, சாலை ஆக்கிரமைப்பினால் பார்க்கிங் நெருக்கடி, ரயில்நிலைய விமான நிலைய விரிவாக்கத்தில் அரசிற்கு போதிய அக்கறையின்மையே அவளை நிலை தான் சாட்சி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை