உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்திற்கு கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை: மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி

தமிழகத்திற்கு கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை: மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: '' தமிழகத்திற்கு ஏன் கல்வி நிதியை ஒதுக்கவில்லை என கேள்வி எழுப்பி உள்ள சென்னை உயர்நீதிமன்றம் நாளை( மே 23) மதியத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை எனக்கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை கல்வி உரிமைச் சட்டத்தில் வழங்குகிறது. 25 சதவீத ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசு 50 சதவீதம், தமிழக அரசு 40 சதவீதம் நிதி தர வேண்டும். தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு தரவில்லை. 2021- 23 நிதியாண்டில் மத்திய அரசு நிதி தராத காரணத்தினால், 100 சதவீத நிதியை தமிழக அரசே ஏற்றது. மத்திய ஆளுங்கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்.பி.,க்கள் கூட இல்லாத காரணத்தினால், தமிழகத்திற்கு நிதி வழங்கவில்லை. மாணவர்களின் கல்வி நலனில் மாநில அரசு அக்கறை கொண்டு உள்ளது. வரும் 28 ல் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடக்க உள்ளது என்றார்.மத்திய அரசு வழக்கறிஞர், 'சில காரணங்களினால், தமிழகத்திற்கு நிதி வழங்கப்படவில்லை ' என விளக்கமளித்தார்.இதனையடுத்து நீதிபதிகள், '' தமிழகத்திற்கான கல்வி நிதியை ஏன் ஒதுக்கவில்லை என்பது குறித்தும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி குறித்தும் நாளை மதியம் 2:15 மணிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

நல்லவன்
மே 23, 2025 11:49

அவசரமாக மைக் அணைக்கபட்டு நீதி கொடுத்தவர்கள் ... இந்த விசாரணை நோக்கம் விரைவில் தெரியும்


மீனவ நண்பன்
மே 22, 2025 22:29

மற்ற மாநிலங்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை .. தமிழகம் மட்டும் சவுண்ட் விடுவது எதற்கு என்று புரியவில்லை


Ravi Kulasekaran
மே 22, 2025 21:45

பணக்கார மாணவர்கள் மட்டுமே மும் மொழி படிக்க வேண்டுமா முதல்வர் மகள் தனியார் பணம் கொடுத்து எழை மாணவ மாணவிகள் படிக்க முடியுமா ஏழை மாணவ மாணவிகள் இலவசமாக குறிப்பாக இந்தி படிக்க சொல்ல வில்லை எதாவது ஒரு மொழியை மூன்றாவது மொழியாக ஆசிரியர் சம்பளம் மத்திய அரசு தரும் போது படிக்க விடாமல் தடுக்கும் தமிழக அரசின் பிடிவாதமே காரணம்


ramesh
மே 22, 2025 21:42

மத்திய அரசு பணமே கொடுக்க வில்லை என்பது தான் வழக்கு . தமிழ் நாட்டு மாணவர்கள் கல்விக்கு பணம் தராத, மனசு இல்லாத மத்தய அரசுக்கு ஏன் வரி கொடுக்க வேண்டும் தமிழ்நாடு அரசு


vijai hindu
மே 23, 2025 00:28

200 ரூபாய் குவாட்டர் பிரியாணி கண்டிப்பா உங்களுக்கு உண்டு


ramesh
மே 23, 2025 11:59

என்ன விஜய் உனக்கு குடும்பமே தினம் கிடைக்கும் 200 ரூபாயில் தான் நடக்கிறது என்பது வெளிச்சம் போட்டு காட்டி விட்டாயே .


மணி
மே 22, 2025 20:57

ஓவார ஆட்டம் போடுறானுக நிதி அரசர்கள்.கட்டுபடுத்துவது யார்?


Ramesh Sargam
மே 22, 2025 20:44

இதுவரை ஒதுக்கிய நிதியை எப்படி செலவழித்தார்கள் என்று தமிழக அரசை கேட்கிற அளவுக்கு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தைரியம் இருக்கிறதா?


துர்வேஷ் சகாதேவன்
மே 22, 2025 23:00

ஒரு கிலோமீட்டர் ரோடு போட 290 கோடி நம்ப முடிகிறதா , இது எப்படி செலவு என்று கேட்கவில்லையே


Palanisamy T
மே 22, 2025 20:34

உண்மையான பதில் - ஒன்றிய அரசுக்கும் தெரியும், மாநில அரசுக்கும் தெரியும், நீதிமன்றத்திற்கும் தெரியும். ஒன்றிய அரசு வெளிப்படையாக சொல்லமுடியாது. வேறு ஏதாவதொரு காரணங்களை ஒன்றிய அரசு சட்டப்படி நீதிமன்றத்தில் அறிவிக்கவேண்டும். இப்போது தேடிக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை தேடியும் வைத்திருப்பார்கள். நாளை தெரியும்.


A P
மே 22, 2025 20:25

மும்மொழி கற்கத்தான் மத்திய அரசு சொல்கிறதே அன்றி , நீங்கள் தவறாக மறுபடியும், மறுபடியும் சொல்வது போல, இந்தி கற்க அல்ல. சில பேர்களுக்குப் புரிந்தாலும், கயவாளித்தனமாக அரசியல் செய்வது போல , நீங்களும் " இந்தி கற்க " நிர்பந்தம் என்பது போல கருத்து எழுதியிருக்கிறீர்கள். தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள் ஐயா .


venugopal s
மே 22, 2025 20:09

நீதிமன்றத்திடம் அடுத்த அடி வாங்க மத்திய பாஜக அரசு தயாராகி விட்டது!


ஆரூர் ரங்
மே 22, 2025 20:06

ஒதுக்கிவிடுவார்கள் என்பதனால் ஒதுக்கவில்லை. அதற்கு என்ன இப்போ,?