உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்; சீமான் கேள்வி

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன்; சீமான் கேள்வி

செங்கல்பட்டு: மாநில அரசுகளே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட் கூறிய பிறகும், தமிழகத்தில் கணக்கெடுப்பு நடத்த மறுப்பது ஏன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பு வலியுறுத்தல், பஞ்சமி நிலம் மீட்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்ட பேசினார். அவர் பேசியதாவது; ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகளே எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டே சொல்கிறது. அதையும் மீறி இவர்கள் எடுக்க மாட்டார்கள். மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு நேர் எதிர்கொள்கை கொண்டது பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சி.தற்போது ராகுல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி வருகிறார். ஏனென்றால், காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் தான் தொடங்கப்பட்டது. இப்போது தான் தேர்தலில் நிற்க வந்திருக்கிறது. என் நாடும், நாட்டு மக்களும் இவ்வளவு நாசமாகி, பசி பட்டினியால், குட்டி சுவராய் கிடக்க காரணம், உன்னுடைய தாத்தனுக்கு தாத்தன், உனனுடைய பாட்டி, அம்மா, இப்ப நீங்க. புதிதாக வந்த மாதிரி பேசுவாங்க. வஞ்சித்து ஏமாற்றும் காலம் முடிந்து விட்டது. மத்திய அரசு பணம் தரவில்லை. இவர்களின் கையில் அதிகாரத்தை கொடுத்து விட்டு புலம்பி கொண்டு நிற்கிறோம். பணம் தரவில்லை என்றால், ஒரு ரூபாய் கூட என் நிலத்தில் இருந்து வரி வராது என்று சொல்ல துணிவு, வீரம் கிடையாது. கேட்டால், அதை சொல்ல எங்களுக்கு எவ்வளவு நேரமாகும் என்கிறார்கள். சொல்லி பாருங்களேன். சொல்லாமலே, டாஸ்மாக் எல்லாம் ரெய்டு போகுது. கதவை பூட்டிகிட்டு பேசுவாங்க போல. முதலில் ஒரு லட்சம் கோடி ஊழல் என்றார்கள். தற்போது, ஓராயிரம் கோடி என்கிறார்கள். இன்னும் கொஞ்சம் நாள் கழித்து ரூ.100 கோடி என்று சொல்வாங்க. அப்புறம் எதுவும் இல்லை, எல்லாம் சரியாக இருக்கிறது என்பார்கள் போல. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் திராவிட ஆட்சியாளர்கள் எடுக்க மாட்டார்கள். உள்ஒதுக்கீட்டைத் தான் எதிர்க்கிறோம். அதிலும் முன்னுரிமை என்பதைத் தான் எதிர்க்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, கோர்ட்டே சொல்கிறது. நாங்கள் சலுகை கேட்கவில்லை. உரிமையை கேட்கிறோம். பஞ்சமி நிலத்தை கேட்பது எங்களின் உரிமை, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Palanisamy T
மார் 17, 2025 08:06

பாமக முன்பு அடிக்கடி சாதியைப் பற்றி பேசினார்கள். இப்போது கொஞ்சம் ஓய்ந்துள்ளது. இப்போது நீங்கள் ஆரம்பித்துவிட்டீர்கள் இனிமேல் நீங்கள் பிறநாடுகளில் தமிழர்கள் வாழும் ஊருக்கு போகவேண்டாம். போனால் தமிழராக போவீர்களா அல்லது சாதிக்காரனாக போவீர்களா? இன்றும் தமிழருக்கு சொந்த நாடுமில்லை, வீடுமில்லை. நேற்று வந்தவனுக்கெல்லாம் சொந்தநாடுகள். இது வரலாற்று உண்மை. இருக்கின்ற தமிழகத்தையாவது காப்பாற்றுங்கள். இப்போது அந்த தமிழையும் சிதைக்க மூன்றாம் மொழியென்கின்றார்கள். சாதிவெறி, தீண்டாமை, வேண்டாத பிறமத கொள்கை, கோட்ப்பாடுகளால் தமிழினம் இன்று பிரிந்தும் சிதறிப்போய்க் கிடக்கின்றது. இப்போது தமிழர்களிடம் பிறமொழி மதக் கொள்கைகள் கோட்ப்பாடுகள் திணிக்கும் கலாச்சாரம் உருவாகியுள்ளது. இதனால் நாளை என்ன ஆகுமோ? நாம் இன்றும் மொழிப் பற்றில்லாமல் வாழ்ந்தால் நாளை நம் முடிவு நிச்சயம்


naranam
மார் 16, 2025 23:42

எதற்கு எடுக்க வேண்டும்? அப்படி எடுத்தால் இருக்கும் அறுபத்து ஒன்பதுக்குள் இட ஒதுக்கீடு உன்னால் தர முடியுமா? கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல ஆக வேண்டுமா உனக்கு? நாடெங்கும் இட ஒதுக்கீடு விஷயமாகக் கடும் போராட்டம் நடை பெறும். இது இப்பொழுது தேவையா?


புதிய வீடியோ