உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரெய்டுக்கு தி.மு.க., ஏன் சமரசம் செய்யணும்; கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ரெய்டுக்கு தி.மு.க., ஏன் சமரசம் செய்யணும்; கேட்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பான எப்.ஐ.ஆர்.கள் சம்பந்தமாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுக்கு தி.மு.க. ஏன் சமரசம் செய்ய வேண்டும்?'' என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: தமிழகம் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சிக்கான குருதியோட்டமாக இருப்பதை நாடு நன்கறியும். அரசியல் நிலைப்பாடு என்பது வேறு. அரசுடன் நாட்டின் நலன் கருதி ஒத்துழைப்பது என்பது வேறு. அந்த வகையில்தான், பிரதமர் தலைமையில் நடைபெற்ற இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றேன்.

மாநில உரிமை

மிரட்டலுக்கு அடிபணிந்து கட்சியை அடமானம் வைக்கும் வழக்கம் நம்மை விமர்சனம் செய்பவர்களின் தனிப்பட்ட உரிமையாக இருக்கிறது. நமக்கோ, மாநில உரிமையே முதன்மையானதாக உள்ளது. அதில் எவ்வித சமரசமுமின்றி, நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டு வருகிறோம்.

தி.மு.க.,வுக்கு குறி!

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ. போன்றவை தி.மு.கவினரைக் குறி வைத்ததுபோல இந்தியாவில் வேறு எந்தக் கட்சியையும் குறிவைத்ததில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பான எப்.ஐ.ஆர்.கள் சம்பந்தமாக அமலாக்கத்துறை நடத்திய ரெய்டுக்குத் தி.மு.க. ஏன் சமரசம் செய்ய வேண்டும்? எத்தனை முறை விளக்கமளித்தாலும் எதிரிகள் பழைய மாவையே புளிக்கப் புளிக்க அரைத்துக் கொண்டிருப்பார்கள்.

பொதுக்குழு

திருந்தவோ, வருந்தவோ மாட்டார்கள். தமிழக மக்கள் அவர்களை விரும்பவும் மாட்டார்கள். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., ஆட்சியே தொடரும். எதிரிகளின் எதிர்பார்ப்பைத் தவிடுபொடியாக்கும் தி.மு.க.,வின் நிலைப்பாட்டை உரக்க வெளிப்படுத்தவும் கூடல் நகரில் பொதுக்குழு கூடுகிறது. மதுரை பொதுக் குழுவுக்கு உங்களில் ஒருவனான நான் ரெடியாகிவிட்டேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

உரிமைக்குரலை எழுப்பினேன்!

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டில்லிக்குச் சென்றேன்; தமிழகத்தின் உரிமைக்குரலை எழுப்பினேன். ரெய்டுகளுக்குப் பயந்து சொந்தக் கட்சிக்காரர்களுக்குக்கூட தெரியாமல் டில்லி சென்று கட்சி அலுவலகத்தைப் பார்வையிட வந்தேன் என ஊடகங்களிடம் கூறி பல கார்கள் மாறி கட்சியை அடமானம் வைத்துவிட்டு வரவில்லை. டில்லி என்றாலே கிலி பிடித்து அஞ்சி நடுங்கும் எதிர்க்கட்சியினரின் அடி வயிற்றில் புளியைக் கரைக்க வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டதை ரசித்தபடியே டில்லி பயணம் அமைந்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் போது சென்னையில் பேரணி சென்று ஒற்றுமைக்குரல் எழுப்பினேன்! நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என நிடி ஆயோக் கூட்டத்தில் உரையாற்றினேன்! தமிழகத்தின் நலன் காத்திடவும், மாநில உரிமைகளை வென்றெடுக்கவும் களம்2026க்கு ஆயத்தமாக ஜூன் 1ம் நாள் மதுரையில் நடைபெறவுள்ள பொதுக்குழுவில் உங்களைச் சந்திக்க நான் ரெடியாகி விட்டேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 38 )

SIVA
மே 25, 2025 19:07

சர்க்காரியா விசாரணை பிரச்னையில் கச்சத்தீவை அடகு வைத்தோம் , 2ஜி வழக்கு பிரச்னையில் இலங்கை தமிழர்களை அடகு வைத்தோம் , இந்தியா சீனா போர் வந்த போது திராவிட நாடு கோரிக்கையை அடகு வைத்தோம் , 1997 பிஜேபி மந்திரி சபையில் இடம்பெற மதச்சார்பின்மையை அடகு வைத்து மீட்டோம் ,, இன்னும் நீட் தேர்வு விலக்கு, ஹிந்தி எதிர்ப்பு , புதிய கல்வி கொள்கை, மாநில சுயாட்சி , மதசார்பினமை , இவ்வளவு இருக்கும் போது நாங்கள் ஏன் கட்சியை அடகு வைக்க வேண்டும் ......


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 25, 2025 18:13

சமரசத்துக்கு ஒரு சிறந்த உதாரணம் கச்சத்தீவு ..... ஒரு சோறு பதம் .....


Mecca Shivan
மே 25, 2025 18:12

அதானே ..அந்த சிறுவர்கள் இருவரும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியதிற்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை .. விசாகனுக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ... இதில் தொடர்புடைய யாருக்கும் திமுகவுக்கும் சம்பந்தம் இல்லை.. மாப்பிள்ளைதான் நல்லவர்


ஆரூர் ரங்
மே 25, 2025 18:04

2021 க்கு முன் வழக்கு போட்டது உண்மை. அதுக்குப் பிறகு டாஸ்மாக் நாதசு திருந்திட்டார் ன்னு அவரே சொல்றாரு.


ஆரூர் ரங்
மே 25, 2025 18:03

2021 க்கு முன் வழக்கு போட்டது உண்மை. அதுக்குப் பிறகு டாஸ்மாக் நாதசு திருந்திட்டார் ன்னு அவரே சொல்றாரு.


Sivagiri
மே 25, 2025 17:51

கரெக்டு , கொள்ளை அடிச்சவங்க , டில்லிக்கு போயி சமரசம் செய்ய வேண்டியதுதான் . . . தீமுகா ஏன் சமரசம் செய்ய வேண்டும் ?


Venkatesh
மே 25, 2025 16:41

முதல்வர் மாண ரோஷம் உள்ளவர் தானே ...செந்தில் பாலாஜி பற்றி தேர்தல் பிரச்சாரத்தில் பற்றி பேசிய பேச்சு என்ன ...ஆட்சிக்கு வந்த பின் அதே செந்தில் பாலாஜிக்கு உத்தமர் செர்டிபிகேட் கொடுப்பதேன் ....தமிழக மக்களை பணம் வாங்கி ஒட்டு போட்ட கூட்டத்தை சேர்க்கவில்லை அறிவிலிகள் என்று நினைக்கிறாரோ ....பல முக்கிய த்தூ மீடியாக்களை விலைக்கு வாங்கி விட்டதால் தானும் தன் மாடல் கூட்டமும் என்ன சொன்னாலும் மக்கள் ஒட்டு பிச்சை கூட்டத்தை சேர்க்கவில்லை நம்பிவிடுவார்கள் என்ற நினைப்பா .....2026 இல் தங்களை போல உள்ள மாடல் கூட்டத்தை நம்பி இருக்கிறார் ....பார்ப்போம்


Oviya vijay
மே 25, 2025 16:17

2011 மேலே ED ரெய்டு கீழே கூட்டணியை உறுதி செய்தார் கட்டு மரம். சமரசம். சர்க்காரியா கமிஷன் அறிக்கை, அன்னை இந்திரா வுடன் சமரசம் இப்படி ஆயிரம் ஆயிரம் சமரசங்கள்.


குடிமகன்
மே 25, 2025 15:57

அதிமுக வழக்குல எங்க உதயநிதியும் அவரோட நண்பர் குழாம் etc வந்தாங்க... ஏம்ப்பா அளக்க ஒரு அளவே இல்லையா...


Veluvenkatesh
மே 25, 2025 15:56

எதிரிகள் பழைய மாவையே புளிக்க புளிக்க அரைத்துக் கொண்டிருப்பார்கள்... அடடா, எப்பேற்பட்ட வரிகள்? ஆனாலும் திராவிட வசன கர்த்தா ரொம்பவே குசும்புகாரர் தான். ஆக அதிமுக ஆட்சியில் பதிவு செய்த ஊழல் வழக்கை ED விசாரிப்பதில் இந்த திராவிட மாடல் அரசுக்கு என்ன பிரச்சினை? யாரு அப்பன் வீட்டு காசில் கபில் சிபலும், முகில் ரோஹட்கியும் கோடி கணக்கில் பீஸ் வாங்கி கொண்டு உள்ளார்கள்? 4 வருடத்தில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி ஒவ்வொரு தமிழனையும் கடன் காரர்களாக்கி விட்டு , விசாரணை ஏதும் வந்தால் எதுகை மோனையுடன் மொக்கையாக ஒரு அறிக்கை வெளியிட்டு நாடகம் நடத்துவது? இந்த அரசியல் நாடகம் இன்னும் எத்தனை நாளைக்கு நடக்கும்?


புதிய வீடியோ