உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபை தேர்தலில் இம்முறையும் தனித்துப்போட்டி: சீமான்

சட்டசபை தேர்தலில் இம்முறையும் தனித்துப்போட்டி: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: '' வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடும், '' என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.கோவையில் நடந்த மாநாட்டில் அவர் பேசியதாவது: அரசியல் வரலாற்றில் வாழ்க ஒழிக கோஷம் இல்லாதஒரே கட்சி நாம் தமிழர். கோவையில் வரும் சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். 5வது முறையாக களத்தில் தனித்தே நிற்போம். 234 இடங்களிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும், ஆண், பெண் வேட்பாளர்கள் தலா 117 இடங்களில் நிறுத்தப்படுவார்கள்.ஆந்திராவில் முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி இறந்தபோது தமிழகத்தில் கருணாநிதி, அரசு விடுமுறை அறிவித்தார். சோனியா மகிழ்ச்சி அடைவார் என இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தமிழன் வாக்கை வாங்கி வயிறு வளர்த்து கட்சிகள் பிழைக்கின்றன. இந்த மண்ணிற்கு என துவங்கப்பட்ட கட்சிகள் உங்களுக்காக நின்றதா சுதந்திரமாக கூட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டதாஎன் எண்ணம் மட்டும் சின்னம் அல்ல. சின்னமே நான் தான். விவசாயத்தை காப்போம் என்ற வாதத்தை முன்வைத்து தேர்தலில் நிற்போம். இந்திய அரசியல், இந்தியாவை யார் ஆள்வார்கள் என்பதில் என்னை தேடிய மக்கள், தமிழகத்தையார் ஆள்வார்கள் என்பதில் என்னை தவிர்த்துவிட்டு மக்கள் செல்ல மாட்டார்கள்.கூட்டணி இல்லையா என கேட்கிறார்கள். கூட்டணி இல்லாமல் வெல்ல முடியுமா எனவும் கேட்கிறார்கள். கொள்கை இல்லாமல் எப்படி வெல்வான் என யாரும் கேட்பதில்லை. 8 கோடி மக்களோடு இணைந்து தேர்தலை சந்திப்போம். விவசாயி சின்னத்திலேயே நிற்போம்.இம்முறையும் 234 தொகுதிகளில்தனித்து போட்டி. ஆண்களுக்கு 117 இடங்களும், பெண்களுக்கு 117 இடங்களில் போட்டியிடும். இதில் 135 இடங்களில் இளைஞர்கள் போட்டியிடுவார்கள். மற்றவர்களுக்கு அரசியல் கட்சி தேர்தல் அரசியல். நமக்கு போர். இனமானப் போர். நிலம் காக்கும் போர். நான் முன்வைக்கும் அரசியலை ஒருவராலும் மறைக்க முடியாது. இவ்வாறு சீமான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Mohan
மே 19, 2025 10:31

நம்ம என்ன நெனச்சு கட்சி ஆரம்பிச்சோமோ அது நல்லாவே போயிடு இருக்குது ...காசு வாங்கு வோட் பிரி ..இதுதான் நம்ம பார்முலா ..இதுல இன்னொருதனும் சேர்ந்துட்டான் ..ஆக மொத்தம் அறிவாலயம் ரொம்ப சந்தோஷம் ...ரூட் கிலீர் நம்ம சின்னவர முதல்வர் ஆக்கிரலாம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 19, 2025 07:04

எனது கருத்தில் பிராசாந்த் பூஷண் என்பதை பிரசாந்த் கிஷோர் என மாற்றிக் கொள்ளவும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 19, 2025 07:02

இவர் திமுகவின் சி டீம். எப்பொழுதும் தனித்து நிற்கிறேன் என்று கூறிக்கொண்டு ஓட்டுகளை சிதறடித்து திமுகவை ஜெயிக்க வைப்பது தான் இவரது எண்ணம். திமுகவின் பி டீம் தவெக. மநீமை மாற்றாக திமுக வால் உருவாக்கப்பட்ட கட்சி. பீகார்காரர் பிரசாந்த் பூஷண் தவெகவிற்கு ஆலோசனை வழங்குவது போன்று திமுகவிற்கு ஆலோசனைகள் கட்சி வேட்பாளர்கள் தேர்ந்தெடுத்து கொண்டு திமுகவின் தேர்தல் வியூகம் வகுத்து கொண்டு உள்ளார். திமுக தனது சரித்திரத்தில் இதுவரை தொடர்ச்சியாக இரண்டாம் முறை வெற்றி பெற்றதில்லை. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று கருணாநிதியை விட மிகவும் சாமார்த்தியசாலி தலைவர் நான் தான் என ஸ்டாலின் மார்தட்டிக் கொள்ள வேண்டும் என்பது நடப்பு திமுகவின் இலட்சியம்.


nagendhiran
மே 19, 2025 06:16

இந்த முறையும் திருட்டு முன்னேற்த்திற்கு வாக்கை பிறித்து வெற்றிக்கு உதவ வேண்டும் போல?


nagendhiran
மே 19, 2025 06:14

ஏற்கனவே பாஜக நான்கு சமஉ வைத்திருக்கு? சைமன் ஆளுங்க எங்க வைப்பு வாங்கினாங்கனு சொல்லேன்?


தாமரை மலர்கிறது
மே 19, 2025 04:29

ஸ்டாலினை எதிர்த்து பேசிக்கொண்டு, திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை சிதறடித்து, ஸ்டாலினை ஜெயிக்க வைப்பது தான் சீமானின் நோக்கம்.


திருட்டு திராவிடன்
மே 19, 2025 04:24

அடே அடே ஆமக்கரி, இம்முறை உம்முடைய ஓட்டு சதவீதம் 4. இனி உனக்கு அழிவு காலம் தான்


மீனவ நண்பன்
மே 19, 2025 04:15

ராமதாசும் பிரேமலதாவும் என்ன கணக்கில் இருக்கிறார்கள் ?விஜய் மற்றும் சீமான் வேட்பாளர்களுக்கு தொகுதிக்கு தகுந்தாப்போல கவனிப்பு இருக்கும்


துர்வேஷ் சகாதேவன்
மே 18, 2025 23:45

தோற்போம் என்று தெரிந்தே வோட்டு பிரிக்க நோட்டு வாங்கும் பிஜேபி பி டீம் யோக்யவான்


nagendhiran
மே 19, 2025 06:16

தற்குறி? பாஜக கூட்டணியில்தான் நிற்கிறது?


nagendhiran
மே 18, 2025 23:22

அப்போ இம்முறையும் வைப்பு கிட்டாதா?


துர்வேஷ் சகாதேவன்
மே 19, 2025 00:31

ஆமா பிஜேபி க்கும் வைப்பு நஹி போல தான் தெரியுது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை