உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுக்கு பாடம் எடுப்பதா ? ஸ்டாலின் கண்டனம்

தி.மு.க.,வுக்கு பாடம் எடுப்பதா ? ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ‘இரவோடு, இரவாக தாவிச் சென்ற கட்சிகள், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க.வுக்கு பாடம் எடுக்க வேண்டாம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். சென்னையில் நேற்று பேட்டியளித்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழக செயலர் சண்முகம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு குறித்து, தி.மு.க., ஒரு வார்த்தை கூட பேசவில்லை, என குற்றம்சாட்டினார். இதற்கு பதிலாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில், முதல்வர் விஜய் இதுவரை வாய் திறக்கவில்லை. இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பாத கட்சிகள், தி.மு.க.,விடம் மட்டும் கேள்வி கேட்கின்றன. த.வெ.க.,வுக்கு ஆதரவளிக்க இரவோடு, இரவாக தாவிச் சென்ற கட்சிகள், தி.மு.க.,வுக்கு பாடம் எடுக்க வேண்டாம். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மாநில உரிமைகளையும், மத நல்லிணக்கத்தையும் நிலைநாட்ட தி.மு.க. என்றென்றும் உறுதியாக தொடர்ந்து போராடும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !