விடைத்தாள் திருத்தும் பணிக்கு 19ம் தேதி விடுப்பு தரப்படுமா?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
சென்னை : 'பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு, வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல், பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் 18ம் தேதி புனித வெள்ளி, 20ம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, வெளியூர் செல்லும் கிறிஸ்துவ ஆசிரியர்கள், இடையில் ஒருநாள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவதில் சிரமம் உள்ளது. அதனால், '19ம் தேதியன்று, விடைத்தாள் திருத்தும் பணிக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்' என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தேர்வுத் துறையிடம் வலியுறுத்திஉள்ளனர்.