உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை தி.மு.க.,வுக்கு சாதகமா; பின்னடைவா?

கரூர் சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை தி.மு.க.,வுக்கு சாதகமா; பின்னடைவா?

கரூர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அரசியல் ரீதியாக தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையுமா அல்லது விசாரணையில் வெளி வரும் உண்மையால் பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. த.வெ.க., தலைவர் விஜய், கடந்த செப்., 27ல், கரூர் வேலுசாமிபுரத்தில் பிரசாரம் செய்தபோது, கூட்ட நெரிசலில் சிக்கி, 11 குழந்தைகள் உள்பட, 41 பேர் உயிரிழந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jl09z4pe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அதிரடி உத்தரவு

தற்போது, கரூர் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சி.பி.ஐ., விசாரணை என்பது, மத்திய அரசின் கண் அசைவில் நடக்கக்கூடும் என்ற அச்சம், தி.மு.க., தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, பா.ஜ., பிடியில், த.வெ.க., இருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் உருவாகி உள்ளது. வரு ம் சட்டசபை தேர்தலில், த.வெ.க., தனித்து போட்டியிட்டால் அல்லது அ.தி.மு.க.,வுடன் மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், சிறுபான்மையினர், தலித் சமுதாயங்களின் ஓட்டுகள், த.வெ.க., கூட்டணிக்கு கிடைக்கும்; அ து அக்கூட்டணிக்கு சாதகமாக அமையும். ஆனால், அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் த.வெ.க., கூட்டணி அமையும்பட்சத்தில், சிறுபான்மை சமுதாயத்தினரும், தலித் சமுதாயத்தினரும் அக்கூட்டணிக்கு ஓட்டு அளிக்கும் வாய்ப்புகள் குறையும். அது, தி.மு.க., தன் வழக்கமான சிறுபான்மையினர், தலித் சமுதாயத்தினர் ஓட்டுகளை தக்க வைக்க உதவும், கரூர் சம்பவத்திற்கு முன், விஜய் பேசிக் கொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸ் வாகனங்கள் சுற்றி வந்தது ஏன் என்பது சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வரலாம். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று உடல்களைதான், அரசு டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விதி இருக்கும்போது, எப்படி 40 பேர் உடல்களுக்கு, அடுத்தடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த உண்மையும் அம்பலமாகும். இதன் வாயிலாக, உண்மையான குற்றவாளிகளை சி.பி.ஐ., கைது செய்து, அது தொடர்பான விசாரணையை, வரும் சட்டசபை தேர்தல் வரை தள்ளிப் போடவும் வாய்ப்பு உள்ளது. கண்டிப்பானவர் ஆளும்கட்சிக்கு எதிராக உண்மைகள் வெளிவரும்பட்சத்தில், எதிர்க்கட்சிகளின் பிரசார பலத்தால், அது தேர்தலில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. சி.பி.ஐ., விசாரணையை கண்காணிக்க, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில், 3 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவை, உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. அஜோய் ரஸ்தோகி கண்டிப்பானவர் என்பதால், தி.மு.க., தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Mani . V
அக் 15, 2025 04:34

திமுக வுக்கு பின்னடைவா? எவ்வளவு விலை என்றாலும், அப்பா, இளவரசர் ஆகிய துணை அப்பா, ஐந்து கட்சி அம்மாவாசை கொடுத்து வாங்கும் அளவுக்கு கொள்ளையடித்துக் ஸாரி ஊழல் செய்து ஸாரி நேர்மையாகச் சம்பாதித்து வைத்துள்ளார்கள். முன்னமே எழுதிக்கொடுக்கப்பட்ட விடையை ஸாரி தீர்ப்பைச் அவர்கள் வழங்குவார்கள். தா. கி., ஆலடி அருணா இவர்களின் முடிவெல்லாம் அவர்கள் கண் முன் வந்து போகுமா இல்லையா?


Kumar Kumzi
அக் 15, 2025 02:18

தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன் ஹிஹிஹி தலைப்பாகை விழுந்துவிட்டதே நைனா


Mr Krish Tamilnadu
அக் 14, 2025 17:07

ஒரு பொது குற்றம் - மக்களுக்கு அநீதியான ஒரு குற்ற செயல் நடக்கும் போது மூன்று விசயங்கள் அதன் பிறகு சமுதாயத்தால் எதிர்பார்க்கப்படுகிறது. 1 இனி இதுபோல் நடக்க கூடாது. 2 பாதிக்கப்பட்டவர்களுக்கு.உடனடி நிவாரணம், ஆறுதல். 3 ஏதேனும் சதி மூலம் அந்த சம்பவம் நடந்து இருந்தால், சதி செய்தவர்கள் கண்டு அறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இந்த மூன்றாவது முடிவு அரசியல் களங்களை பொறுத்து சமயத்தில் மாறி விடுகிறது.


T.sthivinayagam
அக் 14, 2025 14:21

அந்த நீதிபதி வேண்டாம் இந்த நீதிபதி தான் வேண்டும் என்றால் , நீதிபதிகளின் தீர்ப்பு மாறும் தன்மையில் தான் இந்திய ஜனநாயகம் உள்ளதா, இதைவிட வேறு வேதனை இல்லை என்று மக்கள் புலம்புகிறார்கள்.


vivek
அக் 14, 2025 20:19

சிவநாயகம். கதறலோ கதறல் அருமை என்று மக்கள் சந்தோஷபடுகிறார்கள்


T.sthivinayagam
அக் 14, 2025 21:55

தூத்துக்குடி சூடு வழக்கு கொடநாடு கொலைகொள்ளை வழக்கு சாத்தான் குள கொலை வழக்குகளை சிபிஐயை வைத்து பழினிச்சாமியை ஐயாவை மடக்கியாச்சி, இப்போது கரூர் துயர சம்பவம் வைத்து விஜய் மடக்கி கூட்டணி வைத்து விடலாம் என்று தொண்டர்கள் கூறுகின்றனர்.


Kumar Kumzi
அக் 15, 2025 02:11

தூத்துக்குடி கலவரத்தை தூண்டிவிட்டது யாருனு உலகதுக்கே தெரியும் ஓசிகோட்டர் கொத்தடிமை த்தூ


SUBRAMANIAN P
அக் 14, 2025 14:07

இதெல்லாம் திமுகவுக்கு சப்ப.. எத்தனை கேஸ்களை பார்த்திருப்பாக.. இல்லனா இத்தனைகாலம் மொத்தக்கட்சிகாரங்களும் பல லட்சம் கோடி ஊழல் செய்து சொத்து சேர்க்கமுடியுமா? சாட்சி, ஆதாரம் இல்லாம எப்படி பெரிய பெரிய சம்பவங்கள் செய்வது என்பதை திமுக கிட்டத்தான் கத்துக்கணும். திமுகவை நெருங்க முடியாது.


Indian
அக் 14, 2025 13:46

சி பி இ அல்ல, சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றாலும், ஒன்னும் ஆக போறதில்ல. இறந்த உயிர்கள் திரும்பி வர போவதில்லை. மக்கள் தான் இன்னும் மாற வில்லை, மக்கள் கூத்தாடி கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்கள் பிள்ளைகளின் படிப்பில் செலுத்த வேண்டும் .


SUBRAMANIAN P
அக் 14, 2025 14:01

அதேபோல திருட்டு கட்சிகளையும் அடையாளம் கண்டு அவைகளை மொத்தமாக புறம்தள்ளவேண்டும்..


pakalavan
அக் 14, 2025 12:08

பாஜக இதை வச்சு அரசியல் பன்னும்


vivek
அக் 14, 2025 13:27

பாவமா பகலவன் பகலில் கண் தெரியாது


T.sthivinayagam
அக் 14, 2025 14:14

ஆப்ரேஷன் ஜோசப் விஜய் சக்சஸ். நம்பிக்கை இல்லா நீதிபதியை மாற்றி நம்பிக்கையான நீதிபதியை வைத்து விட்டாச்சி. சட்டம் ஒரு இருட்டரை-விஜய்ஜீ அப்பாவின் படம்.


AKM KV SENTHIL MUSCAT
அக் 14, 2025 11:51

எதுவும் நடக்காது ......இதனால யாருக்கும் முன்னடைவும் இல்லை பின்னடைவும் இல்லை .....அப்படியே தீர்ப்பு வருவதற்கும் குறைந்தது 2 அல்லது மூன்று வருடங்கள் ஆகும் ....அந்த நேரத்தில் தீர்ப்பு பழைய கஞ்சாகும் அவ்ளோதான் ....41 பேர் இறந்ததுதான் மிச்சம் ................


Ganapathy Subramanian
அக் 14, 2025 11:23

லல்லு செய்த வேலையை ஸ்டாலினும் செந்தில் பாலாஜியும் செய்ய விடாமல் தடுத்திருக்கிறது.


S.V.Srinivasan
அக் 14, 2025 10:19

இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் தமிழக காவல் துறை விசாரணை மற்றும் அரசு நியமிக்கும் முன்னாள் நீதிபதி தலைமை குழு விசாரணை, இதெல்லாம் நேர்மையான தீர்ப்பு வழங்காது என்பது நாடறிந்த உண்மை.


புதிய வீடியோ