உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா: அண்ணாமலை கேள்வி

மக்கள் நலன் குறித்து முதல்வர் சிந்திப்பாரா: அண்ணாமலை கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் நலனைக் குறித்து முதல்வர் சிந்திப்பாரா'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: உசிலம்பட்டி இன்ஸ்பெக்டரின் ஓட்டுநரான, முதல் நிலைக் காவலர் திரு. முத்துக்குமார், இன்று டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில், கல்லைத் தலையில் போட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4stcm1i0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகமெங்கும், மதுவாலும், போதைப் பொருள்களாலும் குற்றச் செயல்கள் பல மடங்கு அதிகரித்து விட்டன. ஆனால் முதலமைச்சர் தூங்கிக் கொண்டிருக்கிறார். குற்றங்களைத் தடுக்க முடியாமல் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டு, இன்று அவர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழலில் கொண்டு நிறுத்தியிருக்கிறது. உண்மையில் சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அக்கறை இருந்திருக்குமேயானால், மது விற்பனையை முறைப்படுத்தி இருக்க வேண்டும், போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், தனது கட்சியினரின் வருமானம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பதன் விளைவு, தமிழகத்தில் பெருகி வரும் குற்ற செயல்களும், உயிர்ப்பலிகளும்.இனியாவது தனது கட்சியினரின் நலனை விட்டுவிட்டு, வாக்களித்த தமிழக மக்களின் நலனைக் குறித்து முதல்வர் சிந்திப்பாரா. இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

pmsamy
மார் 28, 2025 07:56

மக்கள் சந்தோஷமாக இருப்பது ஏன் அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை


ராம் சென்னை
மார் 28, 2025 08:13

தமிழ்நாட்டில் மக்கள் எங்கையா சந்தோஷமா இருக்காங்க எப்படி கூச்சமே இல்லாம போய் பேசுற. திமுகக்கு ஜால்ரா அடிக்கும் அதுக்காக இப்படி ஓவரா சொம்பு தூக்க கூடாது


Mario
மார் 28, 2025 07:14

முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க, மக்கள் கேள்வி


Padmasridharan
மார் 28, 2025 06:33

"வேண்டுமென்றால். காவலர்களுக்கு தனி bar ஐ உருவாக்கலாம்." தமிழக மக்களின் நலனை சிந்திப்பதனால்தான் TASMAC ஐ திறந்து வைத்திருக்கிறார்கள், பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்தில் இலவச சாப்பாடு. அப்பாக்களுக்கு மாலையில் TASMAC இல் மது. இலவச சாப்பாட்டின் பணத்தை மதுக்கடையில் வாங்குகின்றனர். கடற்கரையில் வருபவர்களையெல்லாம் துரத்திவிட்டு காவலர்கள் அங்கு குடிக்கின்றனர் என்று தெரியாதா. பெண்கள் அதிகாரம் பேசிக்கொண்டு இலவச பயணசீட்டுக்கு அடிமையாக்கி கொண்டிருக்கும் பெண் மக்களின் நலம். வெளியில், சிகரெட்டு பிடித்தலுக்கு 500 ரூபாய் ஃ பைன் இருந்ததை, இல்லாமல் ஆக்கி மற்றவர்களுக்கு இவர்கள் விடும் புகையின் மூலமாக நோய்கள் வரச்செயகின்றனர்.


Raj
மார் 28, 2025 00:27

அண்ணாமலை பேச்சு... விடிஞ்சா போச்சு....


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 27, 2025 23:48

ஓடியாங்கோ, ஓடியாங்கோ அப்பாவுக்கு முட்டு கொடுக்க உடன் பிறப்புகளே ஓடியாங்கோ....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை