உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் கட்டணம் குறையுமா?

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் கட்டணம் குறையுமா?

சென்னை: சென்னை - நாகர்கோவில், மதுரை - பெங்களூரு, மீரட் - லக்னோ இடையேயான, மூன்று, 'வந்தே பாரத்' ரயில்களை, பிரதமர் மோடி, காணொளி வாயிலாக இன்று துவக்கி வைக்கிறார்.புதன் தவிர மற்ற நாட்களில், எழும்பூரில் இருந்து காலை 5:00க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மதியம் 1:50 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது. நாகர்கோவிலில் இருந்து மதியம் 2:20க்கு புறப்பட்டு, இரவு 11:00 மணிக்கு எழும்பூர் வரும்.தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலியில் நின்று செல்லும். டிக்கெட் முன்பதிவு நேற்று துவங்கியுள்ளது. சென்னை - நாகர்கோவிலுக்கு, 'ஏசி சேர்' பெட்டியில் ஒருவருக்கு 1,760 ரூபாய் கட்டணம். 'எக்சிகியூடிவ்' பெட்டியில் ஒருவருக்கு, 3,240 ரூபாய் கட்டணம்.இதேபோல, மதுரையில் இருந்து காலை 5:15க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், மதியம் 1:00 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் செல்கிறது. பெங்களூரு கன்டோன்மென்ட்டில் இருந்து மதியம் 1:30க்கு புறப்பட்டு, இரவு 9:45 மணிக்கு மதுரை வருகிறது.திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரத்தில் நின்று செல்லும். 'ஏசி சேர்' பெட்டியில் ஒருவருக்கு 1,575 ரூபாய், எக்சிகியூடிவ் பெட்டியில் ஒருவருக்கு 2,865 ரூபாய் கட்டணம்.

கட்டணம் அதிகம்

இதுகுறித்து, ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:இந்த ரயிலுக்கான கட்டணம் அதிகம். ஏற்கனவே இயக்கப்படும் எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலில், திருநெல்வேலிக்கு, 'ஏசி சேர்' பெட்டியில் பயணிக்க ஒருவருக்கு 1,610 ரூபாய் கட்டணம்.ஆனால், நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் திருநெல்வேலிக்கு 1,665 ரூபாயாக உள்ளது.நடுத்தர மக்கள் அதிகளவில் பயணிக்க வசதியாக, கட்டணத்தை குறைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

தமிழ்வேள்
ஆக 31, 2024 12:00

ஏழைக்கு ஆம்னி பஸ்ஸில் 3000 ரூபாய் கொடுத்து போகமுடியும் ..டாஸ்மாக்கில் கடன்வாங்கி குடித்து மட்டையாக இயலும் ...பிளாக்கில் சினிமா டிக்கெட்டுக்கு 2500 தரமுடியும் ..ஆனால் வந்தே பாரத் ரயில் கட்டணம் மட்டும் அநியாயம் ...நல்ல திராவிட நியாயம் ...


Shekar
ஆக 31, 2024 10:30

ஆம்னி பஸ், ஐயாயிரம் வரை வாங்குறான் அது எல்லாம் சரி, ஆயிரத்து எழுநூறுக்கு காபி, சாப்பாடோட கூட்டிட்டு போனா விமர்சனம் செய்வோம்.


Godwin Raja
ஆக 31, 2024 09:23

விரைவான மற்றும் சொகுசான பயணம் என்றால் விலை இருக்கத்தான் செய்யும் . என்று விலை இருக்கும்.உங்கள் வசதிக்கு ஏற்ப நீங்கள் திட்டமிட்டு பயணம் செய்யுங்கள்


Saai Sundharamurthy AVK
ஆக 31, 2024 08:51

வேகம் அதிகம், பயண நேரம் குறைவு என்பதால் தான் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை, கட்டணம் குறைக்கப்பட்டால் விருதுநகர், அரியலூர், விருத்தாசலம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்....!!!!!


VENKATASUBRAMANIAN
ஆக 31, 2024 08:32

இது அலுவலர்களுக்கும் தொழில் செய்வோருக்கும் உள்ளது. வசதிகள் அதற்கு ஏற்ப உள்ளது. கட்டணமும் அது போலத்தான். ஆம்னி பஸ்ஸில் அதிகம் கேட்டாலும் வாளியை மூடிக்கொண்டு போகிறார்கள். இது அதைவிட குறைவு


Devanand Louis
ஆக 31, 2024 07:51

மதுரை திருப்பரங்குன்றம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தோப்பூர் கிராம வீ எ ஓ அலுவலகஊழியர்கள் செய்யும் கொடுமையான லஞ்சம்வாங்கும் கொள்ளைக்கூடாரம் - பட்டா விண்ணப்பங்களை வேண்டுமென்றே தாமதம் செய்கிறார்கள் , பின் வேண்டாத டாக்குமெண்டுகளை கேட்டு காலம் தாழ்த்தி பெரிய தொகையை கேட்டு லஞ்சம்வான்ங்குகிறார்கள் - லஞ்ச ஒழிப்பு துறை நடவடிக்கை தேவை


R S BALA
ஆக 31, 2024 07:49

இல்ல குறையாது...


அப்பாவி
ஆக 31, 2024 07:45

பணக்காரராய் ஃபீல்.பப்ணுங்க. கடன் வாங்கியாவது வந்தே பாரத்தில் போங்க. கண்ணை மூடி கனவு கண்டுக்கிட்டே போங்க. நல்ல ஐடியா கிடைக்கும். ஒரு ஸ்டார்ட் அப் தொடங்கி கோடீஸ்வரனாயிடலாம். இதுவே வெற்றிக்கு வழி. கட்டணமதிகம்னு திணுச்சுன்னா, தமிழக ஓட்டை ஒடைசல் பஸ்ஸில் பயணம் செஞ்சு மெதுவா வாங்க. சாய்ஸ் உங்களுடையது.


Kasimani Baskaran
ஆக 31, 2024 06:59

இலவசமாக தமிழக அரசு ஏழைகளுக்கு டாஸ்மாக் சரக்கு விற்பது போல சிலர் இங்கு கம்பு சுற்றுகிறார்கள்.


Ms Mahadevan Mahadevan
ஆக 31, 2024 05:01

சாதாரண எளிய மக்களுக்கு பயன் இல்லை. தென் மாவட்ட பாட்டாளி மக்கள் தான் சென்னையில் அதிகம். அவர்களுக்கு பயன் இல்லை. அவர்களுக்கு தேவையான வண்டிகள் இயக்கப்பட வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை