உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெற்றிடம் நிரப்புமா வெற்றிக்கழகம்?

வெற்றிடம் நிரப்புமா வெற்றிக்கழகம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக அரசியலில் இருப்பதாக கருதப்படும் வெற்றிடத்தை, நிரப்புவதற்கான முதல் முயற்சியாக, தமது கட்சியின் மாநாட்டை விக்கிரவாண்டியில் இன்று (அக்.,27) பிரமாண்டமாக நடத்துகிறார் நடிகர் விஜய்.தமிழக அரசியலில் நீண்ட காலம் கோலோச்சிய முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் மறைவுக்கு பிறகு, வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாகவே பலரும் கருதுகின்றனர். அதை வெளிப்படையாக கூறி, அதை நிரப்ப அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார் ரஜினி. ஆனால் உடல் நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் அவரால் கட்சி தொடங்க முடியவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டு பின்வாங்கி விட்டார் ரஜினி. அவர் சொன்ன வெற்றிடம் அப்படியே தான் இன்னும் இருக்கிறது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kp7iuvto&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த இடத்தின் ஒரு பகுதியை, அண்ணாமலை வரவுக்குப் பிறகு பா.ஜ., நிரப்பி இருக்கிறது; சீமான் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பி வருகிறார். அப்படியெனில் வெற்றிடம் குறைந்திருக்க வேண்டும். ஆனால் நாளுக்கு நாள் பலவீனம் அடையும் அ.தி.மு.க., தேர்தலுக்கு தேர்தல் சுருங்கிக் கொண்டே போகும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளால், வெற்றிடம் விரிவடைந்து கொண்டு வருவதாக நடிகர் விஜய் எண்ணுகிறார். அந்த இடத்தை, தான் இட்டு நிரப்புவதற்கான சரியான சந்தர்ப்பம் இதுதான் என்பது அவரது திட்டம். அந்த அடிப்படையில் தான் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை கணக்கு போட்டு, கட்சியை இப்போது தொடங்கியுள்ளார். ஒரே தேர்தலில் மொத்த தமிழகத்தையும் வென்று ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்பது விஜயின் கணக்கு. தமிழகத்தில் இதுவரை எம்ஜிஆர் மட்டுமே செய்து காட்டிய அந்த சரித்திர சாதனையை தானும் படைக்க வேண்டும் என்பது அவரது இலக்கு. அதை நோக்கிய அவரது பயணம், விக்கிரவாண்டியில் பிரமாண்ட மாநாட்டுடன் இன்று தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட வேண்டும், எந்தவிதமான சர்ச்சைக்கும் இடம் தராமல் மக்கள் மத்தியில் நற்பெயர் எடுக்கும் வகையில் நடத்த வேண்டும் என்று பார்த்துப் பார்த்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விஜயின் கட்சி, தமிழக அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வெற்றிகளை குவிக்குமா, அதற்கு இந்த மாநாடு உதவியாக இருக்குமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 66 )

indian
அக் 27, 2024 21:40

சங்கர் சித்தார்த் உங்களை போன்ற ஒரு சில அறிவாளிகள் தான் விஜய் கட்சி டொபசிட் இழக்க போகிறது.தேவையில்லாமல் அடுத்தவர்கனள விமர்சிப்பது விஜய் கட்சிக்கு ஒரு பேரிடியாக விழ போகிறது தயவு செய்து பேசாம இருங்க


பாலா
அக் 27, 2024 19:10

இவர்களை போன்றவர்களை வைத்து தான் தி.மு.க ஆட்சியில் இருக்கிறது.


sankaran
அக் 27, 2024 18:19

சீமான் மாதிரி கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட வேண்டும் ... அப்போதான் உண்மை நிலமை தெரியும்..


Natesan Narayanan
அக் 27, 2024 15:34

அண்ணாமலை போல ஒரு நன்கு கற்று எல்லா கேள்விகளையும் சரியான பதில் சொல்லும் திறமை உடையவருக்குத்தான் என்னுடைய ஆதரவு .


kumaresan
அக் 27, 2024 15:07

சினிமா மோகத்தால் சீரழிவை / பின்னடவை சந்தித்துவரும் தமிழகம் விஜயினால் மேலும் பின்னடையும். திமுக அதிமுக போன்ற சினிமா பின்னனி கொண்ட கடௌசிகளை மகௌகள் புறக்கனித்தால் தான் சரியான முன்னேற்ற பாதையில் தமிமிழகம் செல்லும்.


Sivagiri
அக் 27, 2024 13:35

தீயமுகவுக்கு - புதுசா ஒரு அடிமை சிக்கிடுச்சு . . . விசி - கம்யூனிஸ்டுகளை கழட்டி வுட்டுட்டு , புது ஜாலராவை சேத்துக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு , எப்படி ஜெயலலிதாவுக்கு ஒரு விஜயகாந்த் அகப்பட்டாரோ , ஸ்தாலினுக்கு எப்படி திருமா , அகப்பட்டாரோ , அதே போல உதயநிதிக்கு - ஒரு விஜய்ஜோசப் , ஆனா பெர்மெனன்ட் பேர்மேனன்ட் சாசனம் எழுதி குடுத்துருக்காங்க - அதில் ஒரு மாற்றமும் இல்லை , அதன் தலைமைக்குதான் ஒரு சின்ன பையன் யாரும் கிடைக்கல , திமுக உதயநிதி - தவேக விஜயஜோசப் - பாஜக அண்ணாமலை - பாமக அன்புமணி , தேமுதிக-விஜய பிரபாகரன் - வரிசையா இருக்கு - -


வைகுண்டேஸ்வரன்
அக் 27, 2024 14:52

விடியா ஆட்சியை விரட்ட விஜய் வருகிறார் " என்று மதுரை யில் போஸ்டர்கள் என்று செய்தி போட்டு கும்மி அடித்தார்கள். நீங்க என்னடா ன்னா திமுக வின் அடிமை ன்னு சொல்றீங்க


Jysenn
அக் 27, 2024 13:29

One vacuum never fills another vacuum.


M.COM.N.K.K.
அக் 27, 2024 13:22

கூத்தாடிகள் நாட்டை ஆள்வதா என்று கேட்பது கோமாளித்தனம் ஆகும். அவர்களுக்கும் ஆட்சி செய்ய நன்றாக தெரியும் என்பதை மக்கள் திலகம் அவர்கள் தமிழ் நாட்டில் நிரூபித்து காட்டினார்.தமிழக முதல்வர்கள் வரிசையில் மக்கள் திலகம் அவர்கள் தான் முதலிடம் இது சில கோமாளிகளுக்கு தெரியாமல் போனது ஏனோ தெரியவில்லை.


Rangarajan Cv
அக் 27, 2024 14:00

Sir:Truth is majority of the film artists are very low level of IQ, nor they possess any specialized knowledge be it in economics, finance, engineering or admin. Only advantage they hv is, mass connectivity thru film. Success will come if issues common to larger public like industrial growth, employment, state economy are taken up


Anonymous
அக் 27, 2024 14:27

மக்கள் திலகத்துடன் வேறு யாரையும் ஒப்பிடவே முடியாது, இது உங்களுக்கு புரியாமல் போனது ஏனோ?


Duruvesan
அக் 27, 2024 20:48

அது இதய தெய்வம். காமராசர், எம்ஜிஆர், கலாம் அய்யா போல் யாருமே இல்லை. தெரிஞ்சா பேசு இல்லைனா பேசாம இரு


Svs Yaadum oore
அக் 27, 2024 13:01

சினிமா நடிகன் என்ன புதுசா மாநாட்டில் என்ன பேசி சாதிக்க முடியும்??...மத்திய அரசு என்று சொல்லாமல் ஒன்றிய அரசு என்று பேசுவான்.. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து...ஒன்றிய அரசு ஜி எஸ் டி இருக்கும் குறைகளை நீக்க வேண்டும். ..நீட் தேர்வு ரத்து...இந்திய மீனவர்கள் இலங்கைத் ராணுவத்தால் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு...கச்சத்தீவை மீட்க வேண்டும். ...கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். ...மாநில உரிமைகளை மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவது கூடாது. ...மத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ....ஒன்றிய அரசு நாட்டின் நிலவும் போதை கலாச்சாரத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ...அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்..இதைத்தான் கூவ போவது ....கழகம் 70 வருஷமாக கூவி சுரண்டியது போக மிச்சம் மீதி உள்ளதை சுரண்ட புதிதாக மதம் மாற்றிகள் உருவாக்கிய புது காளான் ...


Sridhar
அக் 27, 2024 12:52

நான் பிறந்து வளர்ந்த தமிழகதில் உள்ள மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இவ்வளவு குறைபாடு உடையவர்களா? சினிமாவில் சண்டை காட்சிகளில் ஜெயித்து ஹீரோவாக வலம்வந்தால் அவன் நாட்டை அதன் பொருளாதாரத்தை நிர்வகிக்க தகுதி உடையவன் ஆகிவிடுவான் என்று ஒரு கும்பல் நினைக்கிறதே என்பதை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. சினிமா பின்புலம் இல்லாத இன்றைய ஆட்சியாளர்களும் ஆள தகுதி அற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது வேறு ஒரு விசயம். ஒரு காலத்தில் நாட்டு பற்று மிகுந்து சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று பல தியாகங்கள் செய்த தமிழக மக்கள் வாழ்ந்த பூமியா இது? பத்திரிகைகளையும் சினிமாவையும் கையகப்படுத்திக்கொண்டு மக்களின் என்ன ஓட்டங்களை திரித்து ஒரு கும்பல் 60 வருஷங்களாக நம் மாநிலத்தின் அடிப்படை தன்மையையே மாற்றி அமைக்கமுடியும் என காட்டி நிரூபித்திருக்கிறது இதில் யாரை குறை சொல்வது? இவ்வளவு ஊழல்கள் இயற்கை வள கொள்ளைகள் நடந்தபிறகும் அவை ஒன்றும் பெரிதில்லை அல்லது நமக்கு சம்பந்தமில்லை என்பதுபோல் கடந்து செல்லும் அப்பாவி மக்களா, பொய்களையும் திருபுகளையும் மட்டுமே அடிப்படையாக கொண்டு மக்களை ஏமாற்றும் வேலையில் நிபுணத்துவம் பெற்ற திருட்டு கும்பலையா, அல்லது இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே மக்களிடம் உண்மைகளை சரியான விதத்தில் எடுத்துரைக்காமல் ஏனோதானோ என்றுரிந்த எதிர்க்கட்சிகளயா.. யாரை குற்றம் சொல்வது, எங்கு பொய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை. தமிழ்நாடு சீரடைந்து நேர்மையான வழிக்கு திரும்ப குறைந்தது இரண்டு தலைமுறைக்குமேல் ஆகும் என்பது மட்டும் நிச்சயம்.


Anonymous
அக் 27, 2024 14:33

அது கூட நமது வருங்கால சந்ததியர் அதிர்ஷ்டத்தை பொறுத்தது, இப்போதே நமது அடுத்த தலைமுறையை குடி, கஞ்சா என்று அழித்து வரும் திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து, நமது அடுத்த தலைமுறையை காப்பாற்ற யாராவது வந்து, அவர்களை காப்பாற்றினால், எதிர்கால சந்ததியர் குறித்து கொஞ்சமாவது நமக்கு நம்பிக்கை வரும், கடவுள் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும்.


முக்கிய வீடியோ