உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 200 தொகுதிகளில் வெற்றி; இலக்கு நிர்ணயித்தார் முதல்வர்

200 தொகுதிகளில் வெற்றி; இலக்கு நிர்ணயித்தார் முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தேர்தலுக்கு கடுமையாக பணியாற்ற வேண்டும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது இலக்கு' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னையில் நடந்த தி.மு.க., சட்டசபை தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மகளிர் உரிமை தொகை திட்டம் மக்களிடம் நல்ல முறையில் சென்று சேர்ந்துள்ளது. எதை பற்றியும் கவலைப்படாமல் பணியாற்றுங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தி.மு.க., கூட்டணி வலுவாக இருக்கிறது. கட்சி உங்களுக்கு கொடுத்த பணிகளை சிறப்பாக, செய்து முடியுங்கள். தேர்தலுக்கு கடுமையாக பணியாற்ற வேண்டும். 2026ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது இலக்கு. நிச்சயம் வெற்றி பெறுவோம். பூத் முகவர்கள் தங்களது பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டதால் தேர்தலில் சீட் கிடைக்காது என கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு முதல்வ் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

கடுகு
அக் 29, 2024 14:17

அதுல என்ன கஞ்சத்தனம்? ஒரு 2000 சீட்டுன்னு இலக்கு வெச்சுக்குங்க...


shyamnats
அக் 29, 2024 07:54

சிந்திப்பதை விட்டுவிட்ட தமிழக, கட்சி கொத்தடிமைகள், மதுபான பிரியர்கள் இருக்கும் வரை இக்கட்சிக்கு விபரீத ராஜ யோகம்தான்.


peeyesyem
அக் 29, 2024 07:51

NOT even 20 seats cannot winn


J.V. Iyer
அக் 29, 2024 04:12

மக்களை முட்டாளாக வைத்திருக்கும்வரையில் நீங்கள் 200 ல் எளிதில் வெல்லலாம்.


manokaransubbia coimbatore
அக் 28, 2024 21:35

அதற்கென்ன தொகுதிக்கு 200 கோடி மொத்தம் 40000 கோடி கொடுத்தால் போகிறது. என்ன ஒரு மாத வருமானம் என்று கூட இருக்கிற மந்திரியே சொல்லியிருக்காரே இந்த காசெல்லாம் ஒருமாத பிஸ்கட் வாங்கற செலவு மாதிரிதானே


Ramesh Sargam
அக் 28, 2024 21:04

நேர்மையாக மக்கள் பணி செய்து வெற்றிபெற்றால் சந்தோஷம். மக்களை ஏமாற்றி, அதாவது தேர்தல் நேரத்தில் பல இலவசங்களை காட்டி அவர்கள் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றால் அது வெற்றி அல்ல. கேப்மாரித்தனம்.


Ramesh Sargam
அக் 28, 2024 20:13

மக்களுக்கு செய்யவேண்டிய மக்கள் பணியை சரியாக நேரத்திற்கு செய்தால், லஞ்சலாவண்யம் இன்றி செய்தால், மக்களை அலைக்கழிக்காமல் செய்தால், நீங்கள் தேர்தலுக்கு முன்பு கடுமையாக உழைக்கவேண்டிய அவசியம் இருக்காது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களும், முதல்வரும், துணை முதல்வரும் மற்ற உறுப்பினர்களும் மக்களை நேரில் சந்தித்து அவர்கள் பிரச்சினையை கேட்டறிந்து நிவர்த்திசெய்தால் நீங்கள் தேர்தலுக்கு முன்பு கடுமையாக உழைக்கவேண்டிய அவசியம் இருக்காது.


GMM
அக் 28, 2024 19:49

தனித்து தி .மு. க. சுமார் 9 சதவீதக்கு கீழ். வாக்கு . காங்கிரஸ் சுமார் 5 . விடுதலை 2. கம்யூனிஸ்ட் .1 . அதிக பட்சம் 20. இனி கூட்டணி மந்திரி சபை இன்றி தனி மெஜாரிட்டிக்கு வாய்ப்பு இல்லை. 200 தொகுதியில் வெற்றிக்கு வாய்ப்பு இருக்காது. விஜய்யின் செல்வாக்கு இனிதான் தெரியும். மற்றவர்கள் வலுவான கூட்டணி அமைத்து விட்டால், எதிர்க்கட்சி வாய்ப்பு இருக்காது . தற்போது ஆட்சிக்கு உதவி எடப்பாடி யின் கூட்டணி துரோகம். அண்ணா திமுக ஓட்டு தான் சிதறும். இலக்கை அடைய முடியாது. காலம் மாறி வருகிறது.


தாமரை மலர்கிறது
அக் 28, 2024 19:13

இருபது கூட ஜெயிக்க முடியாது. திமுக ஓட்டுகள் விஜய் கட்சிக்கு பிரியும்.


கூமூட்டை
அக் 28, 2024 18:42

மக்கள் மாங்காய் மடையர்கள் என்று தெரிகிறது.


சமீபத்திய செய்தி