உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாரிகளின் ஒப்புதலோடு பின்வழியே மணல் திருட்டு?

அதிகாரிகளின் ஒப்புதலோடு பின்வழியே மணல் திருட்டு?

மதுரை, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் பகுதியில் முன்வாசல் பூட்டப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்ட பின்னும், பின்வாசல் வழியே சட்டவிரோத மணல் ஆலைகள், குவாரிகளின் நடவடிக்கைகள் தொடர்வதாக புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் ஆவேசமடைந்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், வரும் 16ல் தற்போதைய நிலை குறித்து கலெக்டர் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.

பின்வழியே திருட்டு

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், திண்டுக்கல் மாவட்டம் சின்ன முத்தனம்பட்டியைச் சேர்ந்த ஜெயபால் தாக்கல் செய்த பொதுநல மனு:திண்டுக்கல் மாவட்டத்தில் மணல் குவாரிகள் செயல்பட, மாவட்ட நிர்வாகம் எந்த அனுமதியும் வழங்கவில்லை. ஆனால், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்துார் உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக ஆற்று மணல் மற்றும் கிராவல் மண், தினந்தோறும் நுாற்றுக்கணக்கான லாரிகளில் அள்ளப்பட்டு வருகிறது.இதனால், இந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. சட்ட விரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.வேடசந்துார் பகுதி நீர்நிலைகளில், சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளு கின்றனர். இவற்றுடன் ரசாயனம் கலப்பதால், 'எம் - சாண்ட்' போல் தோற்றமளிக்கிறது. சிலர் அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் ஆலைகள் நடத்துகின்றனர். மணல் கலவையை தண்ணீரில் கழுவி, ரசாயனம் கலந்த கழிவுநீரை அருகிலுள்ள நீர்நிலைகளில் விடுகின்றனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.கனிமவளத்துறை முதன்மை செயலர், கமிஷனர், திண்டுக்கல் கலெக்டர், கனிமவள உதவி இயக்குநருக்கு புகார் அனுப்பினேன். விதிமீறலுக்கு அபராதம் விதித்து, சட்டவிரோத மணல் ஆலைகள், குவாரிகளை மூட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.அரசு வழக்கறிஞர், ''சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைக்குரிய வளாகங்கள் ஏற்கனவே பூட்டி, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முகமது ஹனீப், ''முன்புற வாயில் கதவு அதிகாரிகளால் பூட்டப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்டோர் சட்டவிரோத நடவடிக்கைகளை தொடர பின்புற வாயிலை பயன்படுத்துகின்றனர்,'' என்றார்; அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.இதை பார்த்து கோபம் அடைந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:அதிகாரிகளின் கூட்டு சதியுடன் இது போன்ற நடவடிக்கைகள் தொடர்கின்றனவா என சந்தேகம் எழுகிறது. குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை. கலெக்டர் வரும் 16ல் இந்நீதிமன்றத்தில் ஆஜராகி, தற்போதைய நிலை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rengaraj
ஜூலை 12, 2025 13:15

இதைத்தான் மாநில அரசு ஒப்புகொள்ளாதே ? மத்திய அரசுக்கு தலை வணங்கமாட்டோம் என்று முதல்வரே சொல்கிறார். அடிக்கிற கொள்ளையில் பெரும்பங்கு தலைமைக்கு செல்கிறது என்று பரவலான குற்றச்சாட்டு ஆட்சியாளர்கள் மீது வைக்கப்படுகிறது. மத்திய அரசு திமுக ஊழல்களை பகிரங்கமாக இதை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சொல்லிவிட்டது. ஆனால் இது சம்பந்தமாக ஊடகங்கள் பெரிய அளவில் விவாதம் எதுவும் எழுப்பவில்லை. அண்ணாமலை கொட்டாவி விட்டாலோ அல்லது ஏப்பம் விட்டம் விட்டாலோ அதை ஒரு செய்தியாக பேசும் ஊடகவியலாளர்கள், மத்திய அரசு திமுகவின் ஊழலை பட்டியல் இட்டும்கூட அதை விவாதிக்க மறுக்கின்றனர். அந்த அளவுக்கு அதிகாரிகள் மிரட்டிவைக்கப்பட்டிருக்கின்றனர் என்றுதான் சொல்லவேண்டும். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும் ஊடகத்துறையின் குரல்வளை நெறிக்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் பேசுவதை மக்கள் எளிதாக கடந்து சென்று விடுகின்றனர்.


சந்திரன்
ஜூலை 12, 2025 11:21

அவிங்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே மணல் அள்ளுவோம்னு உறுதியா சொன்னாங்க எசமான்


V RAMASWAMY
ஜூலை 12, 2025 08:56

எல்லாமே மாடல் தான்.


Seshan
ஜூலை 12, 2025 08:51

This is the role of the best brains of the country


sridhar
ஜூலை 12, 2025 08:39

இன்னும் என்னென்ன அழிவை சந்திக்க வேண்டுமோ இந்த ஆட்சியில் . ஆயிரம் ரூபாய்க்கி தங்களை அடகு வைக்கும் மக்கள் இருக்கும் வரை நமக்கு விடிவு , விடியல் எல்லாம் இல்லை .


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 12, 2025 08:10

திமுகவால் செய்ய முடிந்ததெல்லாம் ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் இவைதான் ..... இவற்றைத் தவிர வேறில்லை ......


S.L.Narasimman
ஜூலை 12, 2025 08:01

இதில் அதிகாரிகளுக்கு மட்டுமே பங்கு உள்ளதா மந்திரிகளுக்கு பங்கு உண்டா ? என்பதை கணம் நீதியரசர்கள் தீர்மானித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜூலை 12, 2025 01:20

தமிழக அரசை கலைப்பது தான் மணல் திருட்டை ஒழிக்கும் ஒரே வழி.


Raj S
ஜூலை 12, 2025 01:02

தெளிவா சொல்லிடறேன்... இது தான் திருட்டு திராவிட மாடல்...


சமீபத்திய செய்தி