உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமணமான 4வது நாளில் பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமை என புகார்

திருமணமான 4வது நாளில் பெண் தற்கொலை; வரதட்சணை கொடுமை என புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணமான 4வது நாளில் பெண் தற்கொலை செய்து கொண்டார். ஒரு சவரன் நகை கேட்டு, வரதட்சணை கொடுமை என புகார் அளிக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் லோகேஸ்வரி. இவருக்கும் தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் என்பவருக்கும் கடந்த ஜூன் 27ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன் 5 சவரன் நகை வரதட்சணை தருவதாக பெண் வீட்டார் கூறியுள்ளனர். ஆனால் 4 சவரன் நகை மட்டுமே கொடுத்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jcznzqsd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் திருமணத்திற்கு பின், லோகேஸ்வரியை மாப்பிள்ளை வீட்டார்கள் ஒரு சவரன் நகை கேட்டு, வரதட்சணை கொடுமை அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருமணமான 4வது நாளில், லோகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் கணவர் பன்னீர் மட்டும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு சவரன் நகை கேட்டு, வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொன்னேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Padmasridharan
ஜூலை 02, 2025 08:20

வரதட்சணை பெண்ணோட பெற்றோர்களிடம்தானே கேட்பார்கள். . அதென்ன மணப்பெண்ணிடம். அது சரி வரதட்சணை கேட்டப்பவே பெண்ணின் பெற்றோர்கள் ஏன் புகார் அளிக்கவில்லை. வரதட்சணை கேட்காத மாப்பிளை வந்து பெண்ணை கேட்டாலும் கேவலமா பாக்கிறாங்க


என்றும் இந்தியன்
ஜூலை 01, 2025 16:33

ஒரு சவரன் நகைக்கு தற்கொலை??? இந்த வார்த்தை ஜீரணம் ஆகவில்லை எனக்கு???கணவரை விட்டு விலகி உன் தாய் வீட்டுக்கு செல்லவேண்டியது தானே அதற்கு எதற்கு தற்கொலை செய்து கொள்ளவேண்டும் ???இது நிஜமாக தற்கொலையா இல்லை கொலையா???


Manaimaran
ஜூலை 01, 2025 14:37

ஒரு சவரனுக்கா நாலு நாளில் இருக்க வாய்பு குறைவு வேறு ஏதேனும் இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை