உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பு பெண்கள் தான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பு பெண்கள் தான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு பெண்கள் தான்' என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சென்னையில் விரைவில் தாழ் தள எலெக்ட்ரிக் பஸ்கள் இயங்க உள்ளன. இந்தியாவிற்கே லீடராக தமிழகம் திகழ்கிறது. ஊரகப் பகுதிகளில் 1 லட்சம் புதிய தொழில்களை தொடங்க கடன் வழங்கப்பட்டு உள்ளது. மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் உலக வங்கி பெரும் பங்கு வகிக்கிறது. உலக வங்கியுடன் உதவியுடன் அடுத்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை பெண்கள் பங்களிப்பு இல்லாமல் அடையவே முடியாது. தமிழகத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு பெண்கள் தான். வளர்ச்சி அடைந்து வரும் துறையில், பெண் பணியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 9.69% என்ற பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் எஞ்சினாக தமிழகம் உள்ளது. 2030ம் ஆண்டில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடைய தமிழகம் பயணித்து வருகிறது. வரும் காலங்களில் கடன் உதவி வழங்கி, உலக வங்கி உதவும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

சந்திரன்
ஜூன் 11, 2025 07:06

ஆண்கள் முதுகெலும்பை டாஸ்மாக் மூலம் உடைத்தாகி விட்டது. அடுத்து பெண்கள் முதுகெலும்பின் மீது கண் வைத்து விட்டார். ஞானசேகரன் சார் அட்வைசா இருக்குமோ


சாமானியன்
ஜூன் 11, 2025 06:21

26 தேர்தலில் ஜெயிக்க வேண்டும். முடியாவிட்டால் ஜெயித்து வருபவன் கடன் சுமையால் திணறி ஆட்சி நடத்த விழிபிதுங்க வேண்டும். திமுகவை இனிமேலும் விடக்கூடாது.


GMM
ஜூன் 10, 2025 22:08

9.69% என்ற பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் எஞ்சினாக தமிழகம் உள்ளது. ஆனால் இன்ஜினுக்கு டீசல் மத்திய அரசின் தேசிய சாலை, தொலை தொடர்பு, ரயில்,விமான நிலையம், துறைமுகம் மற்றும் கரிகாலன் கல்லணை. கருணாநிதி ஆட்சி முதல் ஒரு புல்லணை கூட தமிழகத்தில் கிடையாது. பெரும்பாலும் சிறுபான்மையினர் குடும்ப பெண் மற்றும் கன்னியாஸ்திரி. அவர்கள் வளர்ச்சி பணியில் பங்கு பெற சொன்னால் வாக்கு வங்கி குறையாதா? உள்ளூர் வங்கி கடன் தராது. உலக வங்கி கடன் தேசத்தின் மீது சுமத்தும். நீங்க தெளிவாக இருந்தால் தான் மக்கள் தெளிவாக இருக்க முடியும். வாரம் ஒரு தகவல் போதும்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 10, 2025 21:26

அதனால் தான் அந்த பெண்களுக்கு ஞானசேகரங்களும் சார் களும் இமைப்பொழுதும் சாராமல் பாலியல் தொல்லை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்களா


SIVA
ஜூன் 10, 2025 21:18

அவரகள் வீட்டில் உள்ள ஆண்கள் சம்பாதிப்பதை எல்லாம் குடித்தே அழிப்பதால் இவர்கள் தான் தமிழக பொருளாதாரத்தை தாங்குகின்றார்கள் .....


Gopalan
ஜூன் 10, 2025 20:21

அப்போ ஆண்கள் வீட்டில் சமைத்துக் கொண்டு இருக்கிறார்களா ? பெண்கள் மொத்தம் எவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என்பது கூட தெரியவில்லையா?


Matt P
ஜூன் 10, 2025 20:00

அது தான் பேருந்தில் இலவச பயணம் மாதம் இரண்டாயிரம் இலவசம் என்று தமிழக ஏழை மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த உதவுகிறார்களே.


Padmasridharan
ஜூன் 10, 2025 19:36

இந்த பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி மாறியிருக்கின்றது சாமி. இலவச பேருந்து பயணம், வெளியில் வெறும் டேஸ்டுக்காக வாங்கி சாப்பிடும் உணவு வகைகள், காதல்கள், திருமணமின்மை, அதிக விவாகரத்து, வாடகை தாய்/குழந்தைகள், குழந்தைகளுக்கு role models ஆக இல்லாத பெற்றோர்கள், வளர்ந்த பிள்ளைகளிடம் சண்டை போடாத தனி தனியே மகிழ்ச்சியை அனுபவிக்கும் பெற்றோர்கள்... கோடிகள், லட்சங்கள் சம்பாதிப்பவர்களை பார்த்து ஆயிரம், நூறென்று சம்பாதிப்பவர்களும் வீட்டிற்கு முதுகெலும்பாக இருக்கவேண்டியவர்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்துகொன்டிருக்கிறார்கள். .


V RAMASWAMY
ஜூன் 10, 2025 19:13

தேர்தல் வர வர ரொம்ப காக்கைகள் வர ஆரம்பித்துவிட்டன.


Kjp
ஜூன் 10, 2025 17:26

என்னத்தை யாவது எழுதி கொடுத்ததை ஒப்பிக்கிறார் அல்லது அறிக்கை விடுகிறார்.ஆண்களின் முதுகெலும்பை உடைத்து விட்டு எலும்பு சதை பொருளாதாரத்தை பற்றி பேசுகிறார்.டாஸ்மாக்.சொத்து வரி மின் கட்டணம் உயர்வு அரசு ஆசிரியர்கள் நிறைவேறா கோரிக்கைகள் இன்னும் பல.உலக வங்கியில் கடன் வாங்கி பெண்கள் முன்னேற்றம் காணப் போகிறாராம்.காலத்தின் கொடுமை.


புதிய வீடியோ