உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சோலை காடுகள் பாதுகாப்பு மையம் பணிகள் துவக்கம்

சோலை காடுகள் பாதுகாப்பு மையம் பணிகள் துவக்கம்

சென்னை:நீலகிரி மாவட்டத்தில், சோலை காடுகள் பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான பணிகளை, வனத்துறை துவக்கி உள்ளது.நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளன. இதன் சூழலியல் பாதுகாப்பை உறுதிசெய்ய, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீலகிரி மற்றும் அதை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், உயிர்ச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளன.இங்கு, பசுமை பகுதிகள் பாதுகாப்பு மிக முக்கிய பணியாக உள்ளது. குறிப்பாக, இங்குள்ள சோலை காடுகள் தான், இப்பகுதியின் உயிர்ச்சூழலுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ளன. இந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில், லாங்வுட் சோலை பகுதிக்கு, சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.இந்நிலையில் சோலை காடுகளில் உள்ள வகைகள், உயிர்ச்சூழல் பாதுகாப்பில் அவற்றின் செயல்பாடுகளை ஆவணப்படுத்த, வனத்துறை முடிவு செய்தது. இதற்காக, சோலை காடுகளுக்கான தாவரங்களின் தன்மையை ஆராய திட்டமிடப்பட்டது.அதன்படி, நீலகிரி மாவட்டத்தில், சோலை காடுகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. இதற்கான வடிவமைப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது, சோலை காடுகள் பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான கலந்தாலோசகர் தேர்வு பணிகளை, வனத்துறை துவக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை