ரயில்வேயில் பணி
ரயில்வேயில் தொழில்நுட்பம் அல்லாத பிரிவில், சரக்கு மேலாளர், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர், நிலைய மேலாளர், முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், தலைமை வணிகம் மற்றும் பயணச்சீட்டு மேற்பார்வையாளர், மெட்ரோ ரயில் போக்குவரத்து உதவியாளர் உள்ளிட்ட, 8,875 காலியிடங்கள் உள்ளன. இதற்கான தேர்வுகளை நடத்தி, இந்தாண்டே பணி நியமனம் செய்ய, ஆர்.ஆர்.பி., எனும், ரயில்வே தேர்வு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.