உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நேற்றைய போக்சோ குற்றங்கள்..

நேற்றைய போக்சோ குற்றங்கள்..

* திருநெல்வேலி, முக்கூடல், அரசன்குளத்தை சேர்ந்த, 9 வயது சிறுமி, பாட்டி பராமரிப்பில் இருந்தார். அதே பகுதியை சேர்ந்த இசக்கியப்பன், 60, என்பவர், சிறுமியை மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சேரன்மகாதேவி போலீசார், போக்சோவில் இசக்கியப்பனை, நேற்று கைது செய்தனர்.* நாமக்கல், குமாரபாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமாரன், 27. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 17 வயது இளம்பெண்ணிடம் பழகி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஈரோடு மகளிர் போலீசார், போக்சோவில் செந்தில்குமாரனை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.* ஈரோடு, சத்தியமங்கலம் உக்கரத்தை சேர்ந்த, 17 வயது வாலிபர், சமூக வலைதளம் மூலம், 17 வயதான பிளஸ் 2 மாணவியுடன் பழகி, திருமணம் செய்தார். இளம்பெண் தற்போது, இரண்டு மாத கர்ப்பமாக உள்ளார். சத்தியமங்கலம் போலீசார், வாலிபர் மீது போக்சோவில் வழக்கு பதிந்தனர்.* கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் வெற்றிவேல், 26. இவர், நேற்று முன்தினம் மாலை, நடந்து சென்ற, 14 வயது சிறுமியை வழிமறித்து, கையை பிடித்து இழுத்து, பாலியல் தொந்தரவு கொடுத்தார். கள்ளக்குறிச்சி போலீசார், வெற்றிவேலை, போக்சோவில் நேற்று கைது செய்தனர்.* திருநெல்வேலி, கீழப்பிள்ளையார்குளத்தை சேர்ந்த, 17 வயது இளம்பெண் புகைப்படத்தை, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக்குமார், 27, 'மார்பிங்' செய்து, சமூக வலைதளங்களில் பரப்பினார். நெல்லை போலீசார், போக்சோவில் வழக்கு பதிந்து, பெங்களூருவில் இருந்த கார்த்திக்குமாரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Krishna
ஜூலை 23, 2026 09:20

About 50% Cases are False But Vestedly CookedUp by CaseNews-VotePower Hungry MAFIAs. Sack& Punish All95% CourtJudges Not Punishing Any PowerMisusing MegaLooting Rulers-Officials esp Police& Judges, VestedFalseComplaint Gangs, CaseNewsVotePower Hungry DreadedConspirator SelfSaint MAFIAs


RAJ
ஜூலை 23, 2026 08:05

Cm சார் .. தொட்ட .. சுடுங்க .. இல்லனா இது தொடரும்