உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீங்களும் டிராக்டரை வாடகைக்கு விடலாம்!

நீங்களும் டிராக்டரை வாடகைக்கு விடலாம்!

சென்னை:விவசாயிகளுக்கு தேவையான நடவு இயந்திரம், களையெடுக்கும் கருவி, அறுவடை இயந்திரம், டிராக்டர், டிரில்லர் உள்ளிட்டவை, வேளாண் பொறியியல் துறையின் 'உழவன்' செயலி, குறைந்த வாடகையில் வழங்கப்படுகின்றன.இவற்றுக்கு சாகுபடி நேரத்தில் 'டிமாண்ட்' அதிகமாகி இயந்திரங்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தனியாரிடம் உள்ள வேளாண் இயந்திரங்கள், கருவிகள் குறித்த விபரங்களை, விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதற்காக, அவற்றை வைத்துள்ளவர்களின் பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விபரங்களை, உழவன் செயலில் பதிவேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. உழவன் செயலி வாயிலாக, தனியாரிடம் உள்ள வேளாண் கருவிகளையும், விவசாயிகள் பெற்று பயன்படுத்த முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி