உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள்: கவர்னர் ரவி கவலை

தமிழகத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள்: கவர்னர் ரவி கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ‛‛ தமிழகத்தில் ஹெராயின், கொக்கைன் போன்ற போதைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகின்றனர்'' , என கவர்னர் ரவி கூறியுள்ளார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது: போதைப்பொருள் எதிர்கால தலைமுறைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதை பற்றி இங்கு நாம் பேசி வருகிறோம். தனி நபர் மற்றும் குடும்பத்தை மட்டுமல்லாமல் சமூகம் மற்றும் ஒரு மாநிலத்தையே போதைப்பொருள் சிதைத்து விடுகிறது. ஒரு காலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் விவசாயம் முதன்மையாக இருந்தது. ஆனால், இன்று போதைப்பொருட்களால் நிலைமை மாறி உள்ளது. சிறப்பாக இருந்த பஞ்சாப் மாநிலமும் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் கஞ்சா தடை செய்யப்பட்டு இருந்தாலும் விற்பனை தடையின்றி நடைபெறுகிறது. ஹெராயின், கொக்கைன் போன்ற போதைப்பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகின்றனர். பல பில்லியன் கணக்கில் பணம் சம்பாதிக்கும் தொழிலாக போதைப்பொருள் விற்பனை உள்ளது.தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதற்கான சிண்டிகேட் உள்ளது. தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடல் வழியே கடத்தி வரப்படும் போதைப்பொருட்கள் மெட்ரிக் டன் கணக்கில் பறிமுதல் செய்யப்படுகின்றன. போதைப்பொருளால் வரும் பணத்தால் தான் ஆப்கானிஸ்தான் பொருளாதாரமே உள்ளது. இதனால், இப்பிரச்னையை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இது மிகப்பெரிய பிரச்னை. நாம் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலும் வெளியேற்ற வேண்டும். போதைப்பொருட்களுக்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகின்றனர். இது குறித்து நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Bala
ஆக 30, 2024 23:17

ஈழத்தமிழர்களை அழித்த திருட்டுத் தெலுங்குத் திராவிடியன்கள் தமிழ்நாட்டு இளைஞர்களையும் மதுவும் போதையும் மூலம் அழித்துக் கொண்டுயிருக்கின்றான்கள். உண்மை.


அப்பாவி
ஆக 30, 2024 21:04

குஜராத்திலிருந்துதான் நிறைய வருதாம். ஜீ கிட்டே சொல்லுங்க.


N Sasikumar Yadhav
ஆக 31, 2024 04:29

குஜராத்தில் பிடிபடுகிறது பறிமுதல் செய்கிறார்கள் ஆனால் உங்களுக்கு 200 ரூபாய் படியளக்கும் திருட்டு திராவிட மாடல் அரசால் பிடிபடாமல் நேரடியாக வியாபாரத்துக்கு வருகிறதாம்


தாமரை மலர்கிறது
ஆக 30, 2024 19:29

தமிழ்நாட்டை இனி கொக்கைன் நாடு என்று அன்புடன் அழைக்கலாம்.


Mohammed Jaffar
ஆக 30, 2024 18:21

உண்மைதான்... எங்க ஊர் ராமநாதபுரம் வந்து பாருங்கள்.. மிக மிக அதிக புழக்கம் இருக்கு.. சின்ன பசங்க பயன் படுத்துறங்க..


Palanisamy Sekar
ஆக 30, 2024 16:29

தமிழகத்தில் மதுபார் யார் நடுத்துகின்றார்கள் என்று கணக்கெடுத்து பாருங்கள். அங்கே தான் தாராளமாக இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கு அனைத்துவகையான போதை வஸ்துக்கள் கிடைப்பதாக ஊரெங்கும் பேசுகின்றார்கள். நடத்துவது கட்சிக்காரர்கள். சம்பாதிக்க விட்டால்தான் அடுத்த தேர்தலில் பணத்தால் ஓட்டுக்களை வாங்கி ஜெயிக்க முடியும் என்பதால் இப்படி போதையை தடுக்காமல் அடுத்த் தேர்தலை மனதில் வைத்து திமுகவினரை நல்ல சம்பாத்தியம் பார்க்க விட்டுவிட்டார்கள். உங்கள் பிள்ளைகளை நீங்கள்தான் கவனமாக பார்த்துக்கொள்ளனும். பெற்றோர்களுக்குத்தான் அதீத பொறுப்பு உள்ளது. இந்த அரசு வந்தது முதல் மாநிலமே சீரழிந்துவிட்டது.


ஆரூர் ரங்
ஆக 30, 2024 16:14

ஜாஃபரின் கூட்டாளியால் அமைந்த ஆட்சியில்? இருக்கவே இருக்காது


சமீபத்திய செய்தி