உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹமாசுக்கு இஸ்ரேல் பதிலடி குண்டு வீச்சில் 40 பேர் பலி

ஹமாசுக்கு இஸ்ரேல் பதிலடி குண்டு வீச்சில் 40 பேர் பலி

டெல்அவிவ், பாலஸ்தீன ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே கடந்த எட்டு மாதங்களாக போர் நடந்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேல் மீது பெரியளவில் எந்தவித ஏவுகணை தாக்குதலும் நடத்தாமல் இருந்த ஹமாஸ் ஆயுதப் படையினர், நேற்று முன்தினம் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தெற்கு காசாவில் உள்ள ரபா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு மழைகளை பொழிந்தது. போரால் இடம்பெயர்ந்த பாலஸ்தீனர்கள் அதிகளவில் தங்கியிருந்த முகாம் மீது நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகினர்; 200க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர். போரால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்பதற்காக தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த இரண்டு நாட்களில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறிஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பேசும் தமிழன்
மே 28, 2024 08:46

பயங்கரவாதிகள்... இந்த உலகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய குப்பைகள்..... தீவிரவாதிகள் யாரையும் உயிருடன் விட கூடாது..... இந்த விஷயத்தில் உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் நாட்டுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.


BALOU
மே 28, 2024 08:18

ஹமாஸ் பொது மக்களை கேடயமாக பயன்படுத்துகிறது இதை எந்த நாடும் கண்டிக்கவில்லை .ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளை இந்த பூமியில் இருந்து துடைத்து எரிய வேண்டும் .


Kasimani Baskaran
மே 28, 2024 05:49

யார் சொன்னாலும் ஹமாஸ் கேட்காது. ஆகவே இஸ்ரேலும் கூட கேட்காது. மொத்த பாலஸ்தீனமும் மண்ணோடு மண்ணாகாமல் விட மாட்டார்கள். அப்படியாவது சமாதானம் வந்துவிடுமா என்றால் அதுதான் இல்லை. இஸ்ரேல் திரும்பவும் பாலஸ்தீனத்தை பல லட்சம் கோடிகளை செலவு செய்து கடும் உழைப்பில் மறுநிர்மாணிக்கும். திரும்பவும் ஹமாஸ் தாக்கத்தால் செய்யும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ