உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நிதி மோசடி: 137 இந்தியர்கள் இலங்கையில் கைது

நிதி மோசடி: 137 இந்தியர்கள் இலங்கையில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: ஆன்லைன் வாயிலாக நிதி மோசடியில் ஈடுபட்ட கும்பலை இலங்கை போலீசார் நேற்று கைது செய்தனர். அதில், 137 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது.நம் அண்டை நாடான இலங்கையின் கொழும்புவைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் சமூக வலைதளம் வாயிலாக தொடர்புகொண்ட நபரிடம் பணத்தை இழந்தார். இது குறித்து அவர் போலீசில் புகாரளித்தார். இந்த வழக்கு தொடர்பாக பேராதனை பகுதியில் வசித்து வரும் தந்தை, மகன் இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து போலீசார் விசாரித்தனர்.விசாரணையில், இவர்கள் ஆன்லைன் வாயிலாக ஏமாற்றி பணம் பறிப்பதும், சட்டவிரோத சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டதும், இதன் பின்னணியில் பெரிய கும்பல் இயங்கி வருவதும் தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கொழும்பு புறநகர் பகுதியான நீர்கொழும்புவின் பல்வேறு இடங்களில் நேற்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு உள்ள சந்தேகத்திற்கிடமான சொகுசு பங்களாவை சோதனையிட்ட போது, 13 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து, 57 மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நடந்த சோதனையில் பலர் சிக்கினர். அவர்களிடம் இருந்து, மொத்தம் 135 மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதானவர்களில் 137 பேர் இந்தியர்கள் என போலீசார் தெரிவித்தனர். மேலும் சிலருக்கு துபாய், ஆப்கானிஸ்தான் நாடுகளுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

கிளிநொச்சி கிஷ்டன்
ஜூன் 29, 2024 20:39

இங்கே இருக்கிற இலங்கை அகதிகளை விட, இலங்கையில் இருக்கும் திருட்டு திராவிடனுங்க அதிகம்.போல தெரியுதே?


subramanian
ஜூன் 29, 2024 15:52

குற்றம் நிரூபிக்கப்பட்டால் , தயவுசெய்து அங்கேயே இருந்துவிடுங்கள். இந்தியாவுக்கு வராதீர்கள்.


subramanian
ஜூன் 29, 2024 15:50

இது சீனா , பாகிஸ்தான் கூட்டு களவாணி சதி . இது சென்ற ஆண்டு நேபாளத்தில் இயங்கி வந்தது. இப்போது இலங்கையில் அடுத்தது வேறுநாட்டுக்கு போகும். எங்கும் எதிலும் ஊழல் . இதுவும் பயங்கரவாதமும் பின்னிப்பிணைந்தவை . இதில் பெருந்தலைகள் தொடர்பு உள்ளது.


Kumar Kumzi
ஜூன் 29, 2024 14:33

கொழும்பு பகுதிகள் மர்ம நபர்கள் அதிகமாக வாழும் இடங்கள்


ஆரூர் ரங்
ஜூன் 29, 2024 10:41

மாட்டிக் கொண்ட ஆட்களின் பெயர்களை.... மர்மமா வெச்சிருக்காங்க.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ