உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவை எட்டிப்பிடிக்க இந்தியாவுக்கு 75 வருஷம் ஆகும்; சொல்கிறது உலக வங்கி!

அமெரிக்காவை எட்டிப்பிடிக்க இந்தியாவுக்கு 75 வருஷம் ஆகும்; சொல்கிறது உலக வங்கி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் நான்கில் ஒரு பங்கை அடைய இந்தியாவுக்கு 75 ஆண்டு ஆகும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் அதிக வருமானம் ஈட்டும் தனிநபர்களை கொண்ட நாடுகளாக மாறுவதில் கடுமையான தடைகள் எழலாம். அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில், கால் பகுதியை இந்தியா எட்ட 75 ஆண்டுகள் ஆகலாம். அதேநேரத்தில் சீனாவுக்கு 10 ஆண்டுகளும், இந்தோனேசியாவுக்கு 70 ஆண்டுகளும் ஆகும். ஒவ்வொரு நாடும் தங்களது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த துரிதமாக செயல்பட்டாலும் வெறும் 34 நடுத்தர வருவாய் பொருளாதார நாடுகள் மட்டுமே, உயர் வருவாய் நிலைக்கு மாற முடிந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

K.aravindhan aravindhan
ஆக 04, 2024 08:08

ஒலகவங்கி இன்னுமா அமெரிக்காவை நம்புகிறது.அவர்களின் மேம்பட்ட செலவுகள் இந்தியாவிற்க்கு அத்தியாவசியமானவை அல்ல.மொத்த தேசமும் கடன்காரனாக. வாழும் முறை இந்தியாவில் இல்லை.


Devaraju
ஆக 04, 2024 05:44

If congress in Central only 3 years can reach (pappu) ???


venugopal s
ஆக 03, 2024 23:25

இது இந்தியாவில் உள்ள அடிப்படை பொருளாதார விஷய ஞானம் உள்ள எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே!


Barakat Ali
ஆக 03, 2024 20:58

தமிழ்நாடு அரசு இன்னும் ஐந்தே வருடங்களில் திவால் ஆகும் .......


ramesh
ஆக 03, 2024 21:25

சொந்த பெயரில் கதை எழுதலாமே .ஏன் இந்த மாறு வேடம்


K.n. Dhasarathan
ஆக 03, 2024 20:24

ஐயா இதில் இரு ஜெராக்ஸ் காபி எடுத்து, ஒன்றை பிரதமருக்கும், இன்னொன்றை நிதி அமைச்சருக்கும் அனுப்பி வையுங்கள், பாவம், தெரிந்தோ, தெரியாமலோ மக்களிடம் பிரமாதமாக சொல்லி வருகிறார்கள்.


R SRINIVASAN
ஆக 03, 2024 20:23

உலக வங்கியினர் தெரிந்துதான் பேசுகிறார்களா. அமெரிக்காவின் பரப்பளவு, ஜனத்தொகை இவைகளை கணக்கிட்டு இந்தியாவுடன் ஒப்பிட்டால் இந்தியாவின் பொருளாதாரம் வெகு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்று சொல்லிவிடலாம். இவ்வளவுதூரம் வளர்ந்த அமெரிக்கா நாட்டில் ஏன் 15000 பேர் இன்டெல் கம்பெனியிலிருந்து விலக்கப்படுகிறார்கள் . இந்தியாவில் தீவிரவாதத்தையும் வன்முறையையும் சில கட்சிகள் தூண்டி விடுகிறார்கள் .இதனால் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதை இந்தியர்கள் உணர்ந்து கொண்டால் இந்தியர்கள் வேகமாகவே முன்னேறலாம். ஜெர்மனி ,சுவீடன் போன்ற நாடுகளில் இம்மிகிரேஷன் சட்டங்கள் மிகவும் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன.


Balasubramanian
ஆக 03, 2024 19:11

அமெரிக்க மாதிரி அடுத்தவர் பணத்தில் வாழ்ந்தால் 75 ஆண்டுகள் எதற்கு? அடுத்த ஐந்து ஆண்டுகளில் எட்டிப் பிடித்து விடலாம் தேவை அமெரிக்காவின் கடன் 35 லட்சம் கோடி டாலர் வருமானம் 27 லட்சம் கோடி டாலர் லட்சம் கோடியை அவர்கள் டிரில்லியன் என்பார்கள் அதை ஒப்பிடுகையில் இந்தியாவின் வருமானம் 4 லட்சம் கோடி டாலர் ஆனால் கடன் 67 ஆயிரம் கோடி டாலர் தான் அதாவது வருமானத்தில் நூற்றுக்கு 15 சதவிகிதம் கடன். அமெரிக்காவில் வருமானம் நூறுரூபாய் என்றால் கடன்கள் 124 ரூபாய் கையிருப்பு பணம் இந்த வருடக் கடைசி வரை தான் வரும் அமெரிக்கா பொருளாதார சீரகுலைவை சந்திக்க நேரிடும் Recession சொன்னது அமெரிக்க Federal Bank நமது ரிசர்வ் பாங்க் மாதிரி Chairman ஜெரோம் போவெல் Jerrome Powell அதுவும் நேற்று வங்கிகள் வட்டி விகிதம் பற்றி குறிப்பிடுகையில் - ஆக இந்திய பொருளாதாரம் எவ்வளவோ மேல் - இனியும் நம்மை நாமே குறைத்து மதிப்பிட கூடாது


Swaminathan L
ஆக 03, 2024 18:22

மூன்றாம் முறையும் மோடிஜி தலைமையில் மத்திய அரசு அமைந்ததில் உலக வங்கி முதல் பல அமைப்புகளுக்கும் ஏகப்பட்ட எரிச்சல், ஏமாற்றம். அதை, இம்மாதிரி அறிக்கை விட்டுத்தான் கொஞ்சமாவது குறைத்துக் கொள்ள முடியும். நாங்கள் எதற்கு அமெரிக்க தனிநபர் வருமானத்தை எட்டிப் பிடிக்கணும்? நாங்கள் ஏழைகளாக இருந்தாலும், எளிமையாக வாழ்ந்து சிறு விஷயங்களிலும் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். உலக வங்கி பொருளாதார சீர்திருத்தங்கள் என்கிற பெயரில் மோடிஜி அரசிடம் வைக்கும் விஷயங்களை மத்திய அரசு மிகக் கவனமாக பரிசீலித்து, வடிகட்டி விடுவதால் இந்த மாதிரியான விமர்சனங்கள் வருகின்றன.


SUBBU,MADURAI
ஆக 03, 2024 19:44

சுவாமிநாதன் தங்களுடைய கருத்து அருமை! நான் சொல்ல நினைத்ததை தரமாக சுருங்கச் சொல்லி விளங்க வைத்து விட்டீர்கள்.


nagendhiran
ஆக 03, 2024 18:00

காங்கிரஸ்?ஆண்டால் இன்னும் 150 வருடங்கள் ஆகும்?


Velan
ஆக 03, 2024 17:53

எட்டி புடிக்க வேண்டாம் இப்ப இருப்பதே போதும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ