உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒரே ஒரு உத்தரவு போதும்; சீனாவின் மானஸ் ஏ.ஐ., ஏஜன்ட் தொழில்நுட்பம்

ஒரே ஒரு உத்தரவு போதும்; சீனாவின் மானஸ் ஏ.ஐ., ஏஜன்ட் தொழில்நுட்பம்

பெய்ஜிங்: ஒவ்வொரு பணிக்கும் உத்தரவு தேவையின்றி, ஒரே உத்தரவில், அது பற்றிய அனைத்து தரவுகளையும் மானஸ் கொட்டி விடும்'டீப்சீக்' என்ற ஏ.ஐ., மாடலை அறிமுகப்படுத்திய சில வாரங்களிலேயே, அதைவிட மேம்பட்ட 'மானஸ்' ஏ.ஐ., மாடலை சீனா அறிமுகம் செய்துள்ளது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான ஏ.ஐ.,யின் ஆதிக்கம் உலகம் முழுதும் அதிகரித்து வருகிறது. கூகுள் ஏ.ஐ., ஓப்பன் ஏ.ஐ., ஆகியவை பிரபலமாகி வந்த நிலையில், அமெரிக்க கண்டுபிடிப்புகளுக்கு போட்டியாக, டீப்சீக் என்ற ஏ.ஐ., மாடலை சீனா அண்மையில் அறிமுகம் செய்தது.

பங்குகள் நிலவரம்

டீப்சீக் ஏ.ஐ., பதிவிறக்கம் அதிகரித்ததால், ஓப்பன் ஏ.ஐ., பெரும் பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில், 'மானஸ் ஏ.ஐ., ஏஜன்ட்' என்ற புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மாடலை, சீனா தற்போது அறிமுகம் செய்துள்ளது.மற்ற எல்லா ஏ.ஐ., மாடல்களையும் விட நவீனமாக, நிஜ உலகின் சவால்களை யோசிப்பது, திட்டமிடுவது, தானே செயல்படுத்துவது என அனைத்தையும் மானஸ் செய்து விடுகிறது.இணையதளங்களை உருவாக்குவது, பயணங்களை திட்டமிடுவது, பங்குகள் நிலவரத்தை ஆராய்ந்து முதலீட்டுக்கு உதவுவது உட்பட, இந்த ஏ.ஐ., மாடல் செய்யக்கூடிய செயல்கள் ஏராளம் என்கிறது, இதை வடிவமைத்துள்ள சீன ஸ்டார்ட்அப் நிறுவனமான 'மோனிகா!' வழக்கமான ஏ.ஐ., சாட்பாட்கள், நாம் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும். ஆனால், மானஸ் ஏ.ஐ., வசம் ஒரு பணியை கொடுத்தால், அதன் பின் நம்மை சாராமல், அதுவே முழுதுமாக முடித்து கொடுத்துவிடும் ஆற்றல் கொண்டது. உதாரணமாக, காலநிலை மாற்றம் குறித்த அறிக்கை தேவை என கேட்டால், அதுவே ஆராய்ச்சி செய்து, அறிக்கை தயாரித்து, அட்டவணைகளை உருவாக்கி, அனைத்தையும் ஒருங்கிணைத்து, இறுதி ஆவணமாக கொடுத்து விடும். மோனிகா நிறுவனம் வெளியிட்ட அறிமுக வீடியோவில், இணையதளத்தில் மானஸ் ஏ.ஐ., கலந்துரையாடுவது, தகவல்களை சேகரிப்பது, சிக்கலான உத்தரவுகளையும் குறித்த நேரத்தில் முடிப்பது ஆகியவை இடம்பெற்றன.

புதிய புரட்சி

இணையதளத்தை பிரவுசிங் செய்து, ஸ்கிரீன் ஷாட் எடுத்து, ஆன்லைன் பணிகளை பதிவு செய்து, அறிக்கை தயாரித்து, பவர் பாயின்ட் விளக்கமாக மானஸ் வழங்கியது. இது, ஏ.ஐ., தொழில்நுட்ப வளர்ச்சியில் புதிய புரட்சி என கருதப்படுகிறது. ஒவ்வொரு பணிக்கும் உத்தரவு தேவையின்றி, ஒரே உத்தரவில், அது பற்றிய அனைத்து தரவுகளையும் திரையில் மானஸ் காட்டி விடும். அதாவது, மளிகை கடைக்கு போன் போட்டு, அரிசி மூட்டை வந்திருக்கிறதா என சிங்கம் படத்தில் நடிகர் விவேக் விசாரிப்பதையும், நடிகர் சூர்யா விசாரிப்பதையும் இதனுடன் ஒப்பிடலாம்.

எப்படி பயன்படுத்துவது?

சாட்ஜி.பி.டி., உட்பட மற்ற ஏ.ஐ., சாட்பாட்களை போலவே திரையில் மானஸ் தயாராக இருக்கும். கோவாவுக்கு நான்கு நாள் சுற்றுலாவை சிறந்த பட்ஜெட்டில் உருவாக்கவும் என உள்ளிட்டால் போதும்; உடனே, தன் ஆராய்ச்சியை துவங்கி, தரவுகளை சேகரித்து, முழு அறிக்கையை திரையில் காட்டி விடும். புறப்படும் இடம் முதல், வரைபடங்கள், இணைய தொடர்பு முகவரிகள், பயண அறிவுரைகள் என எல்லாமே அந்த அறிக்கையில் இருக்கும். பணியை துவங்கிய பின், இணைப்பை துண்டித்து விட்டாலும், நினைவகத்தில் தன் சவாலை வைத்து, பின்னணியில் மானஸ் செயல்படும். மீண்டும் இணையதள தொடர்பு ஏற்பட்டதும், திரையில் பயண அறிக்கை ரெடியாக ஒளிரும்!

எங்கு கிடைக்கிறது?

மானஸ் ஏ.ஐ., தயாரிப்பாளரான சீனாவின் மோனிகா ஸ்டார்ட்அப், தற்போது பிரீவியூவாக மட்டுமே மானஸை வெளியிட்டுள்ளது; இன்னும் பொது பயன்பாட்டுக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மானஸ் வெளியானதும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகில் பெரும் மாற்றங்களைஏற்படுத்தக்கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

AI Trends
மார் 13, 2025 09:34

Both chatgpt and deepseek complement each other this I faced it practically. Chatgpt is more reliable in terms of availability, most of the time deepseek is busy


Perumal Pillai
மார் 12, 2025 14:23

India cant come anywhere near China in the next hundred years.


अप्पावी
மார் 12, 2025 11:37

நமது வேதங்களில்.செயற்கை நுண்ணறிவு இருக்கு. வைசம்பாயனர் கக்கியதை நக்கிய தித்திரி பறவைகள் தைற்றீய உபநிஷத்தை உண்டாக்கின அளவுக்கு முன்னேறியிருந்தோம். அந்த ரகசியத்தை சீன யாத்திரிகர்கள் பாஹியான், யுவான் சுவாங் திருடிக்கிட்டுப் போய் இப்போதான் சீனர்கள் அதைப் படிச்சு மானஸ் ஏ.ஐ ஏஜெண்ட்டை உருவாக்கியிருக்காங்க. கூடியசீக்கிரம் நம்ம புஷ்பக விமானம், பிரம்மாஸ்திரம்னு உருவாக்கப் போறாங்க.


Gokul Krishnan
மார் 12, 2025 11:16

இப்படியே குற்றம் சொல்லி கொண்டே இருக்க வேண்டியது தான் அவர்கள் எப்படி எல்லாம் முன்னேறி இருக்கிறார்கள் என்று அங்கு போய் வந்தவர்களுக்கு தான் தெரியும். வந்தே பாரத் இரயில் சக்கரங்கள் செய்ய சீனாவிடம் தான் மிக பெரிய ஆர்டர் கொடுக்கப் பட்டுள்ளது ஏன் நம்மால் அதை செய்ய முடியவில்லை


ganesh ganesh
மார் 12, 2025 10:48

புதிய பொய் .


Pats, Kongunadu, Bharat, Hindustan
மார் 12, 2025 10:38

The Sanskrit word manas मनस् means "mind" or "thought". Its used in Indian philosophy to describe the human mind, which coordinates sensory impressions before they reach consciousness. Examples of manas in use In the Subālopaniṣad, manas is one of the 14 Adhyātma pertaining to the body.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மார் 12, 2025 10:37

The Sanskrit word manas मनस् means "mind" or "thought". Its used in Indian philosophy to describe the human mind, which coordinates sensory impressions before they reach consciousness. Examples of manas in use In the Subālopaniṣad, manas is one of the 14 Adhyātma pertaining to the body.


vijay
மார் 12, 2025 10:03

சொந்தமாக உருவாக்கவில்லை சீனா. காப்பி அடிப்பதில், திருடுவதில், ரிவர்ஸ் இன்ஜினியரிங் செய்வதில் வல்லவர்கள் சீனர்கள். நம்மவர்கள், குறைந்த விலையில் கிடைக்கும் சீன கம்பெனிகளின் ஸ்மார்ட் போன் போன்றவற்றை வாங்கிக்குவித்து அப்படிப்பட்ட திருடர்களை வானளாவி புகழ்ந்து நம் நாட்டை குறை சொல்பவர்கள். 2008 -இல் ஆரம்பித்து அதிகப்படியான சீன பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி கொடுத்த காங்கிரஸ் அரசாங்கம், அப்போவே 2008 -இல் ரகசியமாக ஒப்பந்தத்தில் சீனா ஒலிம்பிக் பார்க்க என்று போய்விட்டு சீன பிரதிநிதியுடன் கையெழுத்துப்போட்ட ராஹுலு, அதுவும் நம்ம மௌனகுரு சிங்கை கண்டுக்கவே இல்லை சீன அரசாங்கம், அங்கே கம்யூனிஸ்டுதான் அரசு, வேறு யாரும் இல்லை, கிடையாது. நம்ம மக்களுக்கு புரியாது. இலவசங்களுக்கு .....போனவர்கள் நமது நாட்டில் பலர்.


AI Trends
மார் 13, 2025 09:35

U r wrong. Deepseek was not copy paste


naranam
மார் 12, 2025 09:18

தொழில் நுட்பத்தில் சீன மற்ற நாடுகளைப் பின் தள்ளி எங்கோ சென்றுவிட்டது. திமுக கோமுநிஸ்ட் காங்கிரஸ் தயவால் ஊழலில் நாம் மற்றவர்களைப் பின் தள்ளிவிட்டு மிகவும் முன்னேறி விட்டோம்.


अप्पावी
மார் 12, 2025 08:41

நான் இந்தி ந்னு சொன்னா போதும். உடனேப்நம்ம முய்ளைக்குள்ளே புகுந்து ப்ராத்மிக், ப்ரவீண், ராஷ்டிரபாஷா, பண்டிட், சாஸ்திரி லெவலுக்கு இந்தி அறிவை உள்ளே கொண்டாந்துரணும்.


புதிய வீடியோ