உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு

லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போர்ட் விலா: பல கோடி ரூபாய் முறைகேட்டில் தொடர்புடைய ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்து வனுவாட் நாட்டின் பிரதமர் உத்தரவிட்டார்.ஐ.பி.எல்., முன்னாள் தலைவரும், தொழிலதிபருமான லலித் மோடி மீது பல்வேறு மோசடி புகார்கள் உள்ளன. ஆனால், தன் மீதான வழக்கு நடவடிக்கைகளுக்கு பயந்து, பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு வராமல் வெளிநாடுகளில் சுற்றி வருகிறார். லண்டனில் சில ஆண்டுகள் இருந்த அவர், இந்திய குடியுரிமையை துறந்து பசுபிக் தீவு நாடான வனுவாட்டில் தஞ்சம் புகுந்தார். விசாரணைக்காக இந்தியாவுக்கு நாடு கடத்துவதை தவிர்க்க, வனுவாட்டில் குடியுரிமையும் பெற்றுள்ளார்.இந்நிலையில் லலித் மோடி மீதான மோசடி புகார் குறித்து விசாரணை நடத்த இந்திய விசாரணை அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றன. அவருக்கு எதிராக இன்டர்போல் உதவியுடன் நோட்டீஸ் வெளியிட அமலாக்கத்துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.இந்த நிலையில், இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று, லலித் மோடியின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய அந்நாட்டு குடியுரிமை ஆணையத்திற்கு வனுவாட் தீவு நாட்டின் பிரதமர் ஜோதம் நேபத் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போதிய சட்ட ஆதாரங்கள் இல்லாததால், லலித் மோடிக்கு எதிராக அலர்ட் நோட்டீஸ் பிறப்பிக்கக்கோரிய இந்திய அதிகாரிகளின் கோரிக்கையை இன்டர்போல் இரு முறை நிரகாரித்தது தெரிய வந்தது. இதுபோன்ற நோட்டீஸ் வரப்பெற்றாலே, லலித் மோடியின் குடியுரிமை விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்பட்டு விடும், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mecca Shivan
மார் 11, 2025 18:54

காங்கிரஸுக்கு தலைவலி


K.n. Dhasarathan
மார் 10, 2025 22:58

இந்தியா விசாரணை அமைப்புகளுக்கு நன்றி ஒரு வழியாக இருபது வருடங்கள் கழித்து பாஸ்போர்ட் முடக்கம் பெற்றுவிட்டீர்கள், ரொம்ப வேகமாக இருக்கு, கொஞ்சம் வேகத்தை குறைத்து கொள்ளுங்கள், அடுத்த விசாரணைக்கு ஒரு நுறு வருடம் ஆகுமா ?அதற்குள் இங்கு அவருக்கு தேசிய விருது கொடுத்து, சிலை வைத்து, ஸ்டிக்கரும் ஓட்டி விடுவார்களே, பரவாயில்லையா ?


ஆரூர் ரங்
மார் 10, 2025 14:20

லலித் மோதி குடும்பம் பல தலைமுறைகளாக தொழிலதிபர்கள். கிரிக்கெட்டில் மோசடி செய்து சில கோடி சம்பாதிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. IPLன் தந்தை அவர்தான். முறைகேட்டில் ஈடுபட்ட இன்னொரு குடும்ப ஆளைக் காப்பாற்ற இவரை பலிகடா ஆக்கிவிட்டார்கள்.


Sampath Kumar
மார் 10, 2025 13:13

குஜராத்தி கோமாளிகள் ஏய்த்து பிழைக்கும் எத்தர்கள் உள்ளவரை இந்தநாடு முன்னேறாது


Mecca Shivan
மார் 11, 2025 18:56

2ஜி வீராணம் டாஸ்மாக் செம்மண் கடத்தல் சந்தன மர கடத்தல் மெத் பிஎஸ்என்எல் திருட்டு இதெல்லாம் திராவிடம்


Ramesh Sargam
மார் 10, 2025 12:40

இந்த லலித் மோடி பிடிபட்டு, இந்தியாவில் தண்டனை பெறுவதற்கு முன்பே, வயது முதிர்வு காரணத்தினால் இயர்கையாகவே மரணம் அடைவான். கேஸ் கிளோஸ்.


Ganapathy
மார் 10, 2025 12:25

காந்திகளுக்கு பெரிய சிக்கல் இதனால் வரும். இவன் இங்கு வராமல் இருப்பதில் காந்திகளுக்கு பெரும் பங்கு உண்டு. இவனை அனுப்பியதே அவர்கள்தானே.


Oru Indiyan
மார் 10, 2025 12:19

ஆனால் ஒன்று. இந்த லலித் ஆரம்பித்து வைத்த கிரிக்கெட் சூதாட்டம் எல்லா விளையாட்டிலிலும் கோடிகளை அள்ளுகிறது


பல்லவி
மார் 10, 2025 12:05

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு விடுவான் “


சமீபத்திய செய்தி