உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தாய்லாந்து பிரதமர் வேட்பாளராக பேட்டோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு

தாய்லாந்து பிரதமர் வேட்பாளராக பேட்டோங்டர்ன் ஷினவத்ரா தேர்வு

பாங்காக்:தாய்லாந்தின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக, முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேட்டோங்டர்ன் பெயரை ஆளும் பியூ தாய் கட்சி அறிவித்துள்ளது. ஆசிய நாடான தாய்லாந்தின் பிரதமராக கடந்த ஆகஸ்டில் ஸ்ரெத்தா தவிசின் பொறுப்பேற்றார். இவரது அமைச்சரவையில் பிச்சித் சைபான் என்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். நீதிமன்ற அவமதிப்புக்காக சிறை தண்டனை பெற்ற அவரது நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கை சமீபத்தில் விசாரித்த தாய்லாந்து அரசியல் சாசன நீதிமன்றம், 'சிறை தண்டனை பெற்றவர் என அறிந்தும், பிச்சித்தை அமைச்சராக பிரதமர் ஸ்ரெத்தா நியமித்துள்ளார். 'இதன் வாயிலாக அரசியல் சாசனத்தின் ஒழுக்க நெறிமுறைகளை மீறிய அவர், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்' என, அறிவித்தது. இதையடுத்து, புதிய பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்ட ஆளுங்கட்சியான பியூ தாய் கட்சி, கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை செய்தது. நேற்று நடந்த கூட்டத்தில், பிரதமர் வேட்பாளராக முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் பேடோங்டர்ன், 37, அறிவிக்கப்பட்டார். புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக அந்நாட்டு பார்லிமென்ட் இன்று கூடுகிறது. அப்போது, பிரதமரை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு நடத்தப்படும். இதில் வெற்றி பெற்று, முறைப்படி பேடோங்டர்ன் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை