உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மொரீஷியஸ் ஏரியில் கங்கையின் புனித நீரை ஊற்றி பிரதமர் வழிபாடு

மொரீஷியஸ் ஏரியில் கங்கையின் புனித நீரை ஊற்றி பிரதமர் வழிபாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போர்ட் லூயிஸ்: மொரீஷியஸில் புனித ஏரியான கங்கா தலாவில், திரிவேணி சங்கமத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட புனித நீரை ஊற்றி பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zzw76umz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய, 'த கிராண்ட் கமாண்டர் ஆப் த ஆர்டர் ஆப் த ஸ்டார் அண்ட் கீ ஆப் த இந்தியன் ஓஷன்' என்ற விருதை, பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் பிரதமர் நவின் ராமகூலம் வழங்கி கவுரவித்தார்.இதைத் தொடர்ந்து, இருநாட்டு பிரதமர்களும் இணைந்து, அடல் பிஹாரி வாஜ்பாய் கல்வி நிறுவனத்தை திறந்து வைத்தனர். இது குறித்து எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்த நிறுவனம் கற்றல், ஆராய்ச்சி மற்றும் பொது சேவைகளை வழங்கும் மையமாக திகழ்வதுடன், புதிய யோசனைகள் மற்றும் தலைமைத்துவத்தை வளர்க்கும்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.தொடர்ந்து, உத்தரபிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடந்த கும்பமேளாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட புனித கங்கை நதியின் தீர்த்தத்தை, மொரீஷியஸின் போர்ட் லூயிஸில் உள்ள கங்கா தலாவ் ஏரியில் ஊற்றி வழிபாடு செய்தார். இது இருநாடுகளிடையேயான கலாசாரம் மற்றும் ஆன்மீகம் இணைப்பின் சான்றாக பார்க்கப்படுகிறது. கங்கா தலாவ் மொரீஷியசில் உள்ள புனித ஏரியாகவும், இது ஹிந்துக்களின் ஆன்மீக ஸ்தலமாகவும் கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

kulandai kannan
மார் 13, 2025 09:37

மொரீஷியஸ் நம் தொப்புள் கொடி உறவு. ரூ.200 கும்பலுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


கிஜன்
மார் 13, 2025 06:48

குடிநீரில் ...கங்கையை கலந்து ...


தமிழன்
மார் 13, 2025 00:18

செம போட்டோசூட் அப்படியே 2 கால்களையும் நீட்டி போஸ் கொடுத்தால் சூப்பர் மேன் ஆகிறலாம்


Priyan Vadanad
மார் 12, 2025 23:47

நம்ம ஊர் சந்நியாசி நல்ல வேலைதான் செய்கிறார். எப்படி எப்படியெல்லாமோ சிந்திக்கிறாங்களாப்பா கூடவே உபி முதல்வரையும் கூட்டிச் சென்றிருக்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை