உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பிரேசிலில் வரலாறு காணாத மழை: 56 பேர் பலி

பிரேசிலில் வரலாறு காணாத மழை: 56 பேர் பலி

பிராசிலா: பிரேசிலில் வரலாறு காணாத மழைக்கு 56 பேர் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரேசிலின் தெற்கு நகரமான ரியோ கிராண்ட் டூ சூல் பகுதியில் தொடர் மழை பெய்தது. உருகுவே, அர்ஜென்டினாவின் எல்லை நகரங்களிலும் மழை பாதிப்புக்கு உள்ளானது. இது 80 ஆண்டுகால வரலாற்றில் இல்லாதது. புயல் மழை பாதிப்பால் பாதிக்கப்பட்ட 69 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர் .போர்ட்டோ அழகர் பகுதியில் குளம் உடைந்ததில் தெருக்கள் முழுவதும் நீரால் சூழப்பட்டது. இங்குள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ