உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேலை தரைமட்டம் ஆக்குவோம்: ஈரான் ராணுவ தளபதி

இஸ்ரேலை தரைமட்டம் ஆக்குவோம்: ஈரான் ராணுவ தளபதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தெஹ்ரான்: ஈரான் ராணுவமான புரட்சிகர படையின் தளபதி இப்ராஹிம் ஜபாரி, 'இஸ்ரேல் நகரங்களை சரியான நேரத்தில் தரைமட்டம் ஆக்குவோம்' என பேசியது, மீண்டும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.மேற்கு ஆசிய நாடான ஈரான் - இஸ்ரேல் இடையே நீண்ட கால பகை உள்ளது. அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேலுக்கு எதிராக, ஈரான் அரசு, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை ஊக்குவித்து வந்தது. தற்போது இரு பயங்கரவாத குழுக்களும் இஸ்ரேலில் தீவிர தாக்குதலில் சின்னபின்னமாகி உள்ளன. இதனால் இஸ்ரேலுடன் கடந்த ஆண்டு நேரடி மோதலில் இறங்கியது ஈரான். அந்நாட்டின் மீது ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை நுாற்றுக்கணக்கில் ஏவி தாக்குதல் நடத்தியது. அவை அனைத்தையும் இஸ்ரேலின், 'அயர்ன் டோம்' எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம் வானிலேயே அழித்தது.இந்நிலையில், ஈரான் ராணுவமான புரட்சிகர படையின் தளபதி இப்ராஹிம் ஜபாரி 'ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3' என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடவடிக்கையில் இறங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.''இந்த நடவடிக்கை சரியான நேரத்தில், துல்லியமாக இஸ்ரேலை அழிக்கும் டெல் அவிவ் மற்றும் ஹைபா நகரங்களை தரைமட்டமாக்குவோம்,'' என அவர் கூறினார்.இதற்கு பதிலடி தந்துள்ள இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார், ''நம்மை அழிப்பதே தன் குறிக்கோள் என்று எதிரி கூறினால், -அதை நம்ப வேண்டும் என்பதை யூத மக்கள் வரலாற்றிலிருந்து கற்றுள்ளோம். நாங்கள் பதிலடி தர தயாராக உள்ளோம்,'' என்றார்.இரு நாட்டு தலைவர்களிடையே ஏற்பட்டுள்ள வார்த்தை போர் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

RAMESH
பிப் 23, 2025 14:03

ஈரான் அழிந்து போவது உறுதி...


SP
பிப் 23, 2025 12:52

சரிதான், ஈரான் தன் முடிவுரையை எழுத தொடங்கி விட்டது.


JAINUTHEEN M.
பிப் 23, 2025 11:07

இரண்டு நாட்களில் காஸாவையும், ஹமாஸையும் அழிப்போம் என்று இஸ்ரல் சூளுரைத்து இறங்கி ஓராண்டு காலம் போராடியும் இலக்கை எட்ட முடியவில்லை. அமெரிக்க ஆயுத உதவி இல்லையென்றால் இஸ்ரேல் ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்க முடியாது. அமெரிக்கா இத்தனை பொருளாதார தடைகள் விதித்தும் ஈரான் சுய முயற்சியால் வளர்ந்துள்ளது. ஈரானை இஸ்ரேல் குறைத்து மதிப்பிட்டால் அழிவு இஸ்ரேலுக்குத்தான். சமீபத்திய ஒப்பந்தப்படி ஈரானை எந்த நாடு தாக்கினாலும் ரஷ்யா அந்நாட்டைத் தாக்கும். எது எப்படியோ, இவிங்க சண்டை போடுறதுக்குள்ள மூன்றாவது உலகப்போரை வரவைத்து உலக மக்களை நிம்மதி இல்லாமல் செய்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. விரைவில் போர் முடிவுக்கு வந்து அமைதி ஏற்பட இறைவன் அருள் புரியட்டும்.


பேசும் தமிழன்
பிப் 23, 2025 20:30

அப்படியா..... அப்படியே போர் வந்தாலும்... அழிய போவது நீங்களாக தான் இருப்பீர்கள்..... ஒரு மதம் எவ்வளவு வேகமாக வளர்கிறதோ..... அதை விட அதிக வேகத்தில் அழியும் !!!!


karupanasamy
பிப் 23, 2025 10:17

ஈரான் ஹெராயின் போதைபாதித்தவனைப்போல் செயல்பட்டால் உலகநாடுகளொன்றிணைந்து ஈரான் என்றொரு இசுலாமிய நாடொன்றிருந்தது என்று வரலாற்று பாடமாக ஈரானை குறிப்பிடும்படி செய்துவிடவேண்டும்.


MUTHU
பிப் 23, 2025 09:59

திருவாத்தான் திராவிடன் நல்லது செய்கின்றார்களோ இல்லையோ ஹிந்தி எதிர்ப்பு நீட் எதிப்பு வைத்து பிழைப்பு ஓட்டுவது போல் தான் இது.


Kasimani Baskaran
பிப் 23, 2025 09:40

ஏற்கனவே இஸ்ரேல் அதன் இலக்குகளை முடிவு செய்து விட்டது. ஈரான் அடுத்த பாலஸ்தீனமாக உருவெடுக்கும் என்று கண்டிப்பாக நம்பலாம்.


சுலைமான்
பிப் 23, 2025 08:30

போங்க போங்க! போயி பேரீச்சம்பழம் வித்து பொழச்சிக்கோங்க! இஸ்ரேல்ட்ட மோதி உசுர விட்ராதீங்க......


நிக்கோல்தாம்சன்
பிப் 23, 2025 08:20

இரான் அழிந்து விட்டால் என்ன செய்வீர்கள் தளபதியாரே , அப்பா என்று அழைக்க சொல்லுவீர்களா


Bye Pass
பிப் 23, 2025 05:54

ஈரானில் சிரியாவை போல ஆட்சி மாற்றம் விரைவில் வரும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
பிப் 23, 2025 05:46

ஆக பாலஸ்தீனம் என்ற ஒரு பிரதேசம் இல்லாமல் போய் விடும் என்று மறைமுகமாக ஈரான் குறிப்பிடுகிறது.