கம்ப்யூட்டர் தவறால் வேலை பறிபோனது; 13 பேர் தற்கொலை
லண்டன்: ஐரோப்பிய நாடான பிரிட்டனில், தபால் துறையை தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்கின்றன. தபால் துறையில், 1999 முதல் 2015 வரை சேமிப்பு கணக்குகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.இது தொடர்பாக விசாரணை நடந்தது.பலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின் கம்ப்யூட்டர் மென்பொருளில் ஏற்பட்ட குழப்பம் காரணமாகவே, தவறான தகவல் வெளியானது தெரியவந்தது.இது தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி வின் வில்லியம்ஸ் நியமிக்கப்பட்டார். நேற்று வெளியிட்ட அறிக்கையில், தவறான வழக்குகளில் சிக்கியதால் மனவேதனை அடைந்த, 13 பேர் தற்கொலை செய்துள்ளதாக கூறியுள்ளார்.