உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் 15 பேர் பலி

ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் 15 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ரஷ்யா தாக்குதலில் 15 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.கடந்த சில ஆண்டுகளாக உக்ரைன் மீதான ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு நாடுகளிலும் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகர் மீது ரஷ்யா இரவு தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. சுமார் 9 மணி நேரம் நடத்திய இந்த தாக்குதலில், 440 ட்ரோன்கள் மற்றும் 32 ஏவுகணைகளை ரஷ்யா வீசியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதனால், பொது மக்கள் பதுங்கு குழிகள் மற்றும் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றனர். ஏவுகணை தாக்குதலில் 9 மாடி குடியிருப்பு ஒன்று நொறுங்கியது.இந்த தாக்குதல் காரணமாக அமெரிக்க குடிமகன் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது. மேலும், ரஷ்யாவின் தொடர் தாக்குதலுக்கு உள்ளான நகரங்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramaraj P
ஜூன் 18, 2025 08:31

உக்ரைன் போருக்கு முன்பு ரஷ்யா-டாலர் மதிப்பு 110. இப்போது 78. புடின் தான் உலகின் மதிப்பு மிக்க தலைவர்


m.arunachalam
ஜூன் 17, 2025 20:47

இவர்கள் இருவரும் சுடுகாட்டுக்கும் / இடுகாட்டுக்கும் அதிபராக விரும்புகிறார்கள் . இவை அனைத்தும் யாருக்கு எதை நிரூபிக்க ?.


Palanisamy Sekar
ஜூன் 17, 2025 16:44

இந்த கோமாளி செலென்ஸ்கியிடம் உக்ரைன் படும் பாடு சொல்லிமாளாது. இந்த ஆளை கடாசிவிட்டு வேறு அரசாங்கத்தை கொண்டுவந்தால் மட்டுமே உக்ரைன் மக்களுக்கு நிம்மதி என்பது கிடைக்க சந்தர்ப்பம் உண்டு. நாடு சுடுகாடாகிவிட்டது. அப்படி இருந்தும் தன்னை ஐரோப்பிய நாடுகள் போருக்கு பயன்படுத்துவதை கூட புரிந்துகொள்ளாமல் இருப்பது இவன் இன்னும் கோமாளியாகவே இருப்பதும் மக்கள் அவனை அனுமதிப்பதும் ஏற்கவே முடியாது. இனி உக்ரைன் என்கிற பிரதேசமே உலக வரைபடத்தில் இல்லாமல் போய்விடும் அபாயம் வெகு அருகாமையில் . இன்னும் மக்கள் அங்கே இருக்கின்றார்களா? அடக்கொடுமையே..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை