உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நோயாளிகள் 17 பேர் கொலை; அமெரிக்க நர்ஸ்க்கு 700 ஆண்டு சிறை!

நோயாளிகள் 17 பேர் கொலை; அமெரிக்க நர்ஸ்க்கு 700 ஆண்டு சிறை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டும் என்று, தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அமெரிக்காவில் பென்சில்வேனியா பகுதியில் 41 வயதான ஹீதர் பிரஸ்வ் என்பவர் நர்ஸ் ஆக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 5 சுகாதார மையத்தில் பணியாற்றிய, இவர் 17 நோயாளிகளை கொலை செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. 29 நோயாளிகளுக்கு அதிக அளவிலான இன்சுலின் மருந்தை அளித்துள்ளார். இதனால் 17 நோயாளிகள் இறந்துள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஹீதர் பிரஸ்வ் 3 கொலை வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டார். இதையடுத்து, நோயாளிகளுக்கு வேண்டும் என்று, தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
மே 04, 2024 20:39

இந்த குற்றம் இந்தியாவில் நடந்திருந்தால், வழக்கு பல ஆண்டுகள் நொண்டியபிறகு, முடிவில் நீதிமன்றம், "குற்றவாளி மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர் நிரபராதி" என்று கூறி அவரை விடுதலை செய்திருக்கும் குற்றம் செய்து பிறகு தண்டனையில் இருந்து தப்பிக்கவேண்டுமா, இந்தியா வாங்க இதை நான் மிகவும் மனவேதனையுடன் பதிவிடுகிறேன் நமது நாட்டில் உள்ள சட்டங்கள் மாற்றி எழுதப்படவேண்டும், ஓட்டைகள் எதுவும் இல்லாமல்


கோவிந்தராஜ்
மே 04, 2024 19:06

நடந்த கொலைகளின் கொடூரத்தைக்.காட்டும் வகையில் இந்த தண்டனை. இங்கே அரையடி ஸ்கேலால் ரெண்டு அடி அடிச்சு கடுமையா தண்டிச்சுருவாங்க.


canchi ravi
மே 04, 2024 15:13

ஏழு ஜென்மங்களுக்கான தண்டனையா? வெறும் சிறை தண்டனை போராதே இவ்வளவு கொலைகள் செய்தவர்க்கு என்ன சட்டமோ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை