உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் பயணிகள் விமானம், ஹெலிகாப்டர் மோதி விபத்து; 18 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் பயணிகள் விமானம், ஹெலிகாப்டர் மோதி விபத்து; 18 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மோதிய விபத்தில், 18 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.அமெரிக்காவில் கான்சாஸிலிருந்து புறப்பட்ட ஏர்லைன்ஸ் விமானம், வாஷிங்டன் ரீகன் தேசிய விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க போடோமாக் நதியின் மேல் தாழ்வாக விமானம் பறந்து கொண்டு இருந்தது. அப்போது பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fx0kf3it&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விபத்தில் பயணிகள் விமானம் ஆற்றில் விழுந்து நொறுங்கியது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. பயணிகள் விமானத்தில் 64 பேரும், ராணுவ ஹெலிகாப்டரில் மூன்று பேரும் பயணித்திருந்தனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அமெரிக்க பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மருத்துவ குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 18 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து ரீகன் தேசிய விமான நிலையம் மூடப்பட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vijay Kumar
ஜன 30, 2025 13:53

முன்னேறிய நாடு இப்படி இருந்தால் வளரும் நாடுகளின் விமான பயணம் திக் திக்


Ramesh Sargam
ஜன 30, 2025 12:49

விமானம் மற்றும் ஹெலிகாப்டர் நேருக்கு நேர் வருவதை ATC air traffic controllers தங்களது ரேடாரில் கண்டுபிடிக்க தவறிவிட்டார்கள் போல. தூக்க கலக்கத்தில் கண் அயர்ந்திருக்கும்.


புதிய வீடியோ